Abstract: This essay studies to find about the more educated persons earn more money. This title based on economical human capital theory and current examples.  Today we can get money from many ways. But more money earners invest in education. In the studies time they have opportunity cost. But they hope in the future we can get more money than other low educated persons. We can see this situation in our real world. The paper aims to point out if we invest in education, we must get more money in the future.

Keywords: educated persons, money, economical, human, capital theory, Gary Becker, மனித இனம், மூலதனக் கோட்பாடு, சிக்காக்கோ, தியோடோர், அறிவு, பழக்கம்.

உலகில் தோன்றிய மனித இனம் பெறுமதி வாய்ந்ததாகும். பொருளாதார செயற்பாட்டுடன் மனிதர்கள் ஒவ்வொருவரும் பின்னிப் பிணைந்திருக்கின்றனர். உற்பத்தியினை மேற்கொள்வது, உற்பத்தியின் நோக்கங்களினை நுகர்வது மனிதனேயாகும். ஒவ்வொரு மனிதர்களினுடைய வாழ்க்கைக்கும் பணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. மனிதர்கள் ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட வழிவகைகளில் வருமானங்களை சம்பாதிக்கின்றனர். இன்றைய நவீன வளர்ச்சியடைந்த பொருளாதார உலகில் மனிதன் தன்னிடம் உள்ள விசேட ஆற்றல்களை பொருத்தமான வகையில் பயன்படுத்தி வருமானத்தினை உழைப்பின் மூலம் பெறுகின்றான். அந்த வகையில்தான் மனிதர்கள் தங்களை ஒரு மூலதனமாக வழிப்படுத்திக் கொண்டு வருமானத்தினைப் பெற எத்தனிக்கின்றனர். 

மனித மூலதனக் கோட்பாடு

மனித மூலதனமானது சிக்காக்கோ பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான நோபல் பரிசு பெற்ற கேரி பெக்கர் (Gary Becker) மற்றும் ஜேக்கப் மினெர் (Jacob Mincer) ஆகியோரால் பிரபல்யப்படுத்தப்பட்டது. தியோடோர் ஹீல்ட்சினுடைய (Theodore Schultz) பங்களிப்புக்களையும் இது குறிப்பிடுகிறது. மனித மூலதனக் கோட்பாடு அறிவு, பழக்கம், சமூக மற்றும் ஆளுமைப் பண்புகளைக் குறிக்கிறது. படைப்பாற்றல் உள்ளிட்ட பொருளாதார மதிப்பை உற்பத்தி செய்வதற்கான உழைக்கும் திறனையும் உள்ளடக்கியது. வணிக நிர்வாகம் மற்றும் நுண்ணினப் பொருளியல் நடைமுறைகளில் காணப்படும் மனிதவள மேலாண்மை பற்றிய ஆய்வுடன் இது நெருக்கமாகன தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. மனித மூலதனம் பற்றிய கருத்தானது 18ஆம் நூற்றாண்டில் அடம்ஸ்மித்தினுடைய காலப்பகுதியில் தோற்றம் பெற்றதாகக் காணப்படுகின்றது.

மனித மூலதனம் என்பது ஒரு தொழிலாளியால் திரட்டப்பட்ட சிறப்புத்தன்மையின் இருப்பாகும். இது எதிர்காலத்தில் அதன் வருமானம் உழைக்கும் ஆற்றலுக்குப் பெறுமதியளிக்கின்றது. பௌதீக மூலதனத்தைப் போலவே கடந்தகால முதலீட்டின் ஒரு பெறுபேறாக மனித மூலதனம் இருப்பதுடன், எதிர்கால வருமானங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூலி வேறுபாடுகள் வேறுபட்ட தொழிலாளரிடையே உற்பத்தித் திறன் வேறுபாட்டை ஏற்படுத்துவதாக மானிட மூலதனக் கோட்பாடு குறிப்பிடுகின்றது. தேர்ச்சியுடைய தொழிலாளர்களுக்கு அதிக எல்லைப் பெறுமானம் காணப்படுகிறது.

எனினும் மானிட மூலதனத்தைப் பொறுத்தவரையில் அதன் முதலீடு தொடர்பாக அவர்கள் எவ்வளவு முதலிடுவதன் மூலம் தனது சொந்த உற்பத்தி திறனை அதிகரிப்பது என்பது பிரச்சினையாகக் காணப்படுகின்றது. மனித மூலதன முதலீடுகள் என்பது கல்வி மற்றும் தொழிற்பயற்சி போன்றவற்றின் மீதான செலவீடுகளை மட்டும் கொண்டிருப்பதில்லை. அதனுள் சுகாதாரத்துறை ரீதியான செலவீனங்களும் உள்ளடங்கிக் காணப்படுகின்றது. நன்கு கல்வி கற்ற அதிகளவு பயிற்றப்பட்ட ஊழியர் குறைந்த கல்வியறிவு கொண்ட பயிற்றப்படாத ஒரு ஊழியரைவிட அதிகளவில் பயன்மிக்க உற்பத்திகளை நிரம்பல் செய்யக்கூடிய தகமையைப் பெற்றிருப்பார்.

பாடசாலையில் ஒரு வருடம் கல்வியில் முதலீடு செய்வது தனியார் பாடசாலைக்கான கட்டணம் அல்லது வேறு கட்டணம், புத்தகம், புத்தகப்பைச் செலவு என்பனவுடன் வேலை செய்வதன் மூலம் உடனடியாக உழைக்கக்கூடிய வருமானத்தை இழக்கவேண்டி இருந்தாலும் எதிர்காலத்தில் பணவருமானமாக அல்லது தொழில் விளைவினை அதிகரிப்பதாகக் காணப்படும். கூலி வேறுபாடுகள், வேறுபட்ட தொழிலாளர்களிடையே உற்பத்தித்திறன் வேறுபாட்டைக் குறிக்கின்றது என மனித மூலதனம் எடுகோள் கொள்கிறது. ஆகவே தேர்ச்சியுடையோர் அதிக எல்லைப் பெறுமான உற்பத்தியுடன் கூடுதலான வருமானம் பெறுகின்றனர். அவர்களது சொந்த உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு எவ்வளவு முதலீடு செய்யவேண்டும் என்பதனைத் தீர்மானிப்பதே தொழிலாளர்களின் பிரச்சினையாகும்.

மேற்கத்தேய நாடுகள் முழுவதிலும் சமீபகாலத்தில் மனித மூலதன கோட்பாட்டின்கீழ் கல்வி என்பது முதன்மையான ஒரு பொருளாதாரச் சாதனமாக இருக்கின்றது. எனவேதான் மனித மூலதனக் கோட்பாடு மேற்கத்தேய கல்வியில் மிகவும் செல்வாக்குக் கூடிய பொருளாதாரக் கோட்பாடாகக் காணப்படுகின்றது. மனிதர்களின் மூலதனமாக தொழில்நுட்ப மாற்றம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, உற்பத்தி, கல்வி மற்றும் போட்டித்தன்மை போன்ற பல்வேறு பொருளாதார சிறப்பியல்புத் தன்மைகளானது பொருளாதாரச் செயற்றிட்டத்தை நிர்ணயிக்க ஒரு முக்கிய மூலோபாயமாக உள்ளது.

மனித மூலதனக் கோட்பாடு, உள்ளார்ந்த மற்றும் அளவிடக்கூடிய பொருளாதார மதிப்பை உருவாகுவதற்கான திறனில் உள்ளடங்கியிருக்கும். மனித மூலதனக் கோட்பாடு தகுதி, அறிவு, சமூக மற்றும் தனிப்பட்ட பண்புகளின் மொத்த பங்கு ஆகும். மனித மூலதனத்தின் பங்கு பொருளாதார வளர்ச்சி, உற்பத்தித்திறன் பகுப்பாய்வு, புதுமை, பொதுக்கொள்கை மற்றும் கல்வி ஆகியவற்றில் பரவலாக விவாதிக்கப்படுகின்றது. மனித மூலதனக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து என்னவெனில் தனிநபர்களின் முதலீடுகள் சமூகத்திற்குப் பங்களிக்கக் கூடிய பொருளாதார மதிப்பின் அடிப்படையில் கணித ரீதியாக அளவிடப்படுகிறது. மனித மூலதனம் பெரும்பாலும் கலாச்சார மூலதனம், சமூக மூலதனம், பொருளாதார மூலதனம் மற்றும் அடையாள மூலதனம் போன்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மனித மூலதனம் என்கின்ற எண்ணக்கருவில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய விடயங்களைக் கீழ்வரும் வரைபடம் 1.1 மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

 

 

 

 

 

வரைபடம்: 1.1

நவீன மனித மூலதனக் கோட்பாடானது அனைத்து மனித நடத்தைகள் சுதந்திரமாகப் போட்டியிடும் சந்தைகளில் செயல்படும் தனிநபர்களின் சுயநல நலன்களை அடிப்படையாகக் கொண்டவை. இது புதிய உலகப் பொருளாதாரத்தில் பங்குபெறுவதற்கான முக்கியத்துவமாக கல்வி மற்றும் பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. மனித மூலதனத்தின் சிறப்புப் பண்பான கல்வியில் முதலிடுவதன் மூலம் வருமானத்தினை உழைக்கின்றமையினை பெரும்பாலான நாடுகள் உறுதியாய்க் கடைப்பிடிக்கின்றன. எந்தவகையான பொருளாதாரத்தினைப் பின்பற்றுகின்ற நாட்டிலும் கல்வி மட்டத்தில் தங்களை உட்படுத்திக் கொண்ட மனிதர்கள் ஒருபோதும் வருமான எதிர்பார்ப்பில் தோல்வியடையமாட்டார்கள். இதனை தொடர்ந்துவரும் விடயங்கள் மற்றும் நடைமுறை நிகழ்வுகளுடன் புள்ளிவிபர ரீதியான தரவுகளுடன் ஆராய்வோம்.

வேறுபட்ட கல்வி மட்டங்களுக்கான வேறுபட்ட கூலிக்கொடுப்பனவுகள்கீழ்வரும் வரைபடம் 1.2ஆனது வேறுபட்ட கல்வி மட்டங்களுக்கான வேறுபட்ட கூலிக்கொடுப்பனவு தொடர்பான விளக்கங்களினை வழங்குகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

வரைபடம்: 1.2

மேற்படி வரைபடம் 1.2இன் படி H-H எனும் கோடானது 18 வயது உயர்கல்வி வரை கல்வி கற்ற ஊழியர்களது வருடாந்திர சம்பளத்தைக் காட்டுகின்றது. C-C எனும் கோட்டின் படி 18 – 22 வரையான 4 வருட பட்டப்படிப்பின் பின்னரே ஊழியர்கள் ஊழியச்சந்தையினுள் நுழைகின்றனர். இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய செலவீனங்களாக நேரடிச் செலவீனங்கள், மறைமுகச் செலவீனங்கள் காணப்படுகின்றன. இங்கு ஏற்படும் மொத்தச் செலவீனங்களை மனித மூலதனத்திற்கான கல்வி மீதான முதலீடுகளாகக் காணப்படுகின்றன. அதனை நேர்கோட்டினால் நிழற்றப்பட்ட பகுதிகளினூடாகக் காட்டலாம். 22 வயதுக்குப் பின்னர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து கொண்ட ஊழியர்கள் ஊழியச் சந்தையினுள் நுழைந்து உயர்கல்வி கற்றவர்களைவிட வருடாந்தம் அதிகளவு உழைத்துக் கொள்வதனைக் காணலாம். இதனை அலைவடிவிலான நிழற்றப்பட்ட பகுதியினூடாகக் காட்டலாம்.

வயது அடிப்படையில் கல்வித்தரத்தக்கு ஏற்ப வருமானங்களின் அளவு

கீழ்வரும் வரைபடம் 1.3 வரைபடமானது கல்வியும், வேலை அனுபவமும் உயர்ந்த வருமானங்களுக்கு பங்காற்றுகின்றது என்பதைத் தெளிவுறக் காட்டுகின்றது. அதாவது மூன்று கல்வித் தகமைகளை உடைய தொழிலாளர்களின் வயதின் அடிப்படையில் உழைக்கும் வருமானம் எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதனைக் காட்டுகின்றது. பல்கலைக்கழகம் அல்லது ஏனைய உயர் பட்டங்கள், உயர்தரம் அல்லது ஏனைய தகமைகள் என்பது சிறப்பாகப் பாடசாலையிலிருந்து விலகியவர்களுக்குப் பொருத்தமானதாக அமைகின்றது. அத்துடன் இவ்வட்டவணை முற்றாக தகுதியற்றவர்களுக்கு இடையிலான வேறுபாட்டையும் காட்டுகின்றது.வரைபடம்: 1.3 அதி உயர்ந்த கல்வித்தர அடிப்படையில் வயது வருவாய் அமைப்பு

மேற்காட்டப்பட்டுள்ள வரைபடமானது UKஇல் முழுநேர வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்களின் வருவாயைக் காட்டுகின்றது. கல்விமட்ட அடிப்படையிலும் வருவாய் அதிகரிக்கின்றது (Source: Reproduced with permission of the Office of Population Censuses and Surveys, General Household Survey).

இவ்வரைபடமானது இரண்டு முக்கியமான விடயங்களை உணர்த்துகிறது.

  1. உயர்கல்வித் தரமுடைய மக்கள் கூடுதலாக உழைக்கின்றனர்.
  2. வயது அனுபவ அடிப்படையிலான வேறுபாடு தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து செல்கிறது.

உடல் நலம் மிக்க இளம் மக்கள் தகுதியற்றவர்களாக இருந்தாலும் கடினமாக வேலைசெய்து கூடியளவான பணத்தை உழைக்க முடியும். ஆனால் மெய்க்கூலி தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் என எதிர்பார்க்க முடியாது. உண்மையாக 30ஆவது வயதில் அவர்களது உழைப்பு வருமானம் உச்சத்தை அடைந்துள்ளது. மறுதலையாக மிக உயர்ந்த கல்வித்தரம் உடையவர்கள் திறமையற்றவர்களின் கூலியை விட ஒரு சிறியளவு கூடுதலான கூலியைப் பெறுகின்றனர். ஆனால் அதன்பின்பு அவர்களது உழைக்கும் வாழ்நாளில் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வருமானத்தினையே அதிகம் பெறுகின்றனர்.

மேற்படி வரைபடம் 1.3ஆனது உயர் கல்வித் தகமையுடையவர்கள் மிகக் கடினமான தொழிலுக்குச் செல்கின்றனர் என்பதைக் குறிப்பிடுகின்றது. இதில் உயர்பதவிகளைப் பெற நீண்ட காலம் எடுக்கும். உயர்ந்த அனுபவத்துடனும், உயர்தொழில்களுடனும், உற்பத்தி திறனும், சம்பளங்களும் மிக விரைவாக அதிகரிப்படைகின்றன. உயர்கல்வித் தகமையுடையோர் நீண்டகாலம் பயிற்சிபெற வேண்டிய கடினமான தொழிலுக்குச் செல்வதனால் அனுபவ முதிர்ச்சியோடும், தொழில் தேர்ச்சியோடும் உற்பத்தித் திறனும், கூலியும் தொடர்ச்சியாக அதிகரிக்கும்.

உயர்படிப்பினை உடையவர்கள் ஏன் உயர் வருமானத்தைப் பெறுகின்றனர் என்பதற்கு இரு வேறுபட்ட முக்கியமான விளக்கங்கள் உள்ளன.

  1. கல்வி நேரடியாக ஊழியத்தின் உற்பத்தித்திறனை அதிகரித்து அதனால் உடனடியாகவோ அல்லது பிற்காலத்திலோ உயர் உழைப்பு வருமானத்தைப் பெறுவதற்கு வழிவகுக்கின்றது.
  2. ஊழியரின் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற சிறப்புத் தகுதிக்கு கல்வி பங்காற்றுவதில்லை. கல்விக்கு மேலாக வேறுபட்ட திறமைகளை தம்மகத்தே உடையவர்கள். இவ்வாறு திறமை கொண்ட உயர் இயலுமையயுடைய மக்கள் உயர் உற்பத்தித்திறன் உடையவர்கள். ஏனெனில் வேறுபட்ட கடின தொழில்களை அவர்கள் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறான திறமைகள் அனைத்தும் பிறக்கும்போதே ஏற்பட்டு விடும்.

கல்வி கற்ற ஊழியருக்கான சந்தை

உயர் கல்வித்தரம், உற்பத்தித் திறனுக்குப் பங்காற்றுகின்றது. கீழ்வரும் வரைபடம் 1.4 உயர்கல்வித்தரமுடைய தொழிலாளர்களுக்கான சந்தையைக் காட்டுகிறது.

வரைபடம்: 1.4

மேற்படி வரைபடத்தின் படி நிலைக்குத்தச்சு உயர்கல்வித்தரமுடைய, உயர்கல்வித்தரமற்ற தொழிலாளர்களுக்கான கூலி வேறுபாட்டினைக் காட்டுகின்றது. இது உயர்கல்விக்கான கூலிக்கட்டணமாகும். கிடையச்சில் உயர்கல்வித் தரமுடைய ஊழியப்படையின் விகிதத்தை அளவிடுகின்றோம். D யானது உயர்கல்வித் தரமுடைய தொழிலாளர்களுக்கான கேள்வி வளையியாகும். உதாரணமாக B புள்ளியில் கூலி வேறுபாடு மிக உயர்வாகும். அத்துடன் இம்மேலதிக கல்வித்தரத்துடன் சிறியளவு விகிதாசாரத் தொகை தொழிலாளர்களை நிறுவனம் வேண்டி நிற்கின்றது. மிகக் குறைந்த வேறுபாடுடைய C புள்ளியில் படித்த தொழிலாளர்களுக்கான கேள்வி மிக உயர்வாகும். கீழ்நோக்கி சரிந்து செல்லும் கேள்வி வளையியானது (D) உயர்கல்வித் தரமுடைய தொழிலாளர்கள் அதிக உற்பத்தித்திறன் வாய்ந்தவர்கள் எனக் கருதுக. ஆனால் படித்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதால் நிறுவனம் குறைந்து செல்லும் விளைவினை எதிர்கொள்கிறது. எவ்வாறிருந்தும் கடந்தகால கல்வித்தரத் தீர்மானங்களில் இத்தகைய தொழிலாளர்களின் நிரம்பல் நிலையானதாகும்.

குறுங்கால நிரம்பல் வளையி (S) என்பதாக நிலைக்குத்தாகக் காணப்படுகிறது. ஏனெனில் குறுங்காலத்தில் கல்வித்தரம் கொண்ட ஊழியர்களை உருவாக்குவது கடினம். அதனால் அதனுடைய நிரம்பல் நிலையானதாகக் காணப்படும். நீண்ட காலத்தில் உயர்கல்வித் தரமுடைய தொழிலாளர்களுக்கான S1 நிரம்பல் வளையி மேல்நோக்கி சரிவடைகின்றது. உயர்கல்வித்தரத்திற்கு கூடியளவான கூலி வழங்கும் செயற்பாடானது பாடசாலை விட்டு விலகும் மாணவர்கள் வேலை பெறுவதைத் தவிர்த்து மேலதிக படிப்பை மேற்கொள்வதை ஊக்குவிக்கும். கல்வி கற்ற தொழிலாளர்களுக்கான நீண்டகால நிரம்பல் வளையி மேல் நோக்கி சரிந்து செல்கின்றது.

குறுங்காலத்தில் கல்வி கற்ற தொழிலாளர்களுக்கான N0இல் நிலையாக உள்ளது. ஆனால் நீண்டகாலத்தில் கல்விகற்ற தொழிலாளர்களுக்கான கூலி அதிகமாகக் காணப்படுவதனால் அதிகளவில் பல்கலைக்கழகம் செல்ல தூண்டுவதால் நீண்ட கால நிரம்பல் வளையி S1ஆகக் காணப்படும். D என்பது கல்வி கற்ற ஊழியர்களுக்கான கீழ்நோக்கிச் சரிவடையும் கேள்வி வளையியாகும். ஆரம்பச் சமநிலை E புள்ளியில் இருந்து கூலி வேறுபாடு WDயுடன் கல்வி கற்ற தொழிலாளர்களுக்கான கேள்வி வளையியின் நகர்வு ஆரம்பத்தில் மேல்நோக்கி கூலி வேறுபாட்டில் கூடுதலான அதிகரிப்பான WD1க்கு வழிவகுக்கின்றது. படிப்படியாகக் கூடுதலான மக்கள் உயர்கல்வியைப் பெற புதிய நீண்ட கால சமநிலை E2 புள்ளியில் ஏற்படுகின்றது.

சந்தையின் குறுங்கால மற்றும் நீண்டகால சமநிலை E புள்ளியில் ஆரம்பித்தால் கூலி வேறுபாடு WD ஆகும். (WD கூலியானது மேலதிக கல்விக்காக ஏற்பட்ட செலவையும் கல்வியைத் தொடர்ந்து பெறுவதற்கு வேலை செய்யாமல் விடுபட்ட கூலி போன்றவற்றுக்கான நட்ட ஈடாகும்). உயர்தொழில்நுட்பப் பயன்பாடு காரணமாக படித்தவர்கள் வேலை செய்வது தொடர்பாகப் பட்டதாரிகளுக்கான கேள்வி அதிகரிக்கும்போது இங்கு கல்விகற்ற தொழிலாளர்களுக்கான கேள்வி வளையி D1ஆக நகர்வடையும்போது அத்தொழிலாளர்களுக்கான நிரம்பல் மாறாதிருக்கும் நிலையில் கூலி வேறுபாடு WD1ஆக உயர்வடைகிறது. கல்வித்தரம் மிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறையாகக் காணப்படுவதனால் நிறுவனங்கள் அவற்றின் கூலியை உயர்த்துகின்றன. தற்போது பொருளாதாரம் E1 என்ற புள்ளியில் காணப்படுகிறது.

உயர்கல்வித்தரமுடையவர்களுக்கான மிகை ஊதியம் தற்போது மிகஉயர்வாகும். ஆகவே அதிகளவிலான மக்கள் கல்விபெறத் தீர்மானிக்கின்றனர். நீண்டகாலத்தின் படித்த தொழிலாளர்களுக்கான நிரம்பல் அதிகரிக்கும். இந்நிகழ்வுடன் பற்றாக்குறையாக இருந்த தொழிலாளர்களுக்கான மிகை ஊதியம் மீண்டும் குறைவடைகின்றது. நீண்டகாலத்தில் E2 புள்ளியில் கூடிய எண்ணிக்கையான படித்த தொழிலாளர்களுடன் கூலி வேறுபாடு WD2 உடன் சமநிலை ஏற்படுகிறது. நீண்டகாலத்தில் படித்த மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.

மேலும் ஒரு சிறப்பான ஒரு உதாரணத்துடன் ஆராய்கின்றபோது கனடா நாட்டில் கல்வித்தரம் கூடியவர்களினுடைய வருமான மட்ட நிலை எவ்விதம் காணப்படுகின்றது என்பதனைக் கீழ்வரும் வரைபடம் 1.5 தெளிவுறக் காட்டுகின்றது. அந்த வகையில் 2010ஆம் ஆண்டுக்கான கல்வித்தர வேறுபாடுகளுக்கு அமைவான வருமான விபரங்கள் அடங்கிய சதவீத வரைபு கீழ்வருமாறு.

வரைபடம்: 1.5

மேற்படி வரைபில் வருமான மட்டத்தினை நோக்கும்போது கல்வித் தரத்துக்கு ஏற்ற வகையில் எவ்விதம் வருமானம் உயர்வாகக் காணப்படுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது. அந்த வகையில் வருமான மட்ட விபரங்கள் வருமாறு,

  • The median income was $27,900 per year
  • The top 10% earners had incomes of over $80,400
  • The top 5% earners had incomes of over $102,300
  • The top 1% earners had incomes of over $191,100

ஆகவே கனடா நாட்டில் கல்வித்தரத்துக்கு ஏற்ற வகையில் வருமானம் அதிகளவில் அழிக்கப்படுகின்றமையினைக் காணலாம். இதனை விடவும் ஐக்கிய அமெரிக்காவில் 2010ஆம் ஆண்டில் கல்வித்தரத்துக்கு எற்ற வகையிலான சராசரி வருமான மட்டமானது கீழ்வரும் வரைபு 1.6 இல் காட்டப்பட்டுள்ளது.

வரைபடம்: 1.6

மேற்படி வரைபின்படி கல்வித்தரம் அதிகரித்துக்கொண்டு செல்வதற்கேற்ப சராசரி வருமானமும் அதிகரித்துக்கொண்டு செல்வதனை அவதானிக்கலாம்.

மனித மூலதனத்தில் முதலிடல் அல்லது செலவு நன்மை ஆய்வு

பாடசாலையை விட்டு விலகிய ஒருவரின் கல்வியைத் தொடர்வதா அல்லது தொழிலைப் பெறுவதா என்ற தீர்மானத்தின் போது கல்வியில் மேலும் முதலீடு செய்வது பயன் உடையதா என ஆராயும்போது இரு நன்மைகளும் இரு செலவுகளும் காணப்படுகின்றன.

Cost:    உடனடிச் செலவு – புத்தகங்கள், கட்டணங்கள் என்பவற்றின் மீது செலவிடப்படும் செலவு, சந்தர்ப்பச் செலவு – கல்வியைத் தொடராமல் தொழில் செய்து அதன் மூலம் பெறும் வருமானம் இழக்கப்படும்.

Benefits: எதிர்காலத்தில் உயர்கல்வித்தரம் உடைய தொழிலாளர்கள் தொடர்ந்து உழைக்கக்கூடிய மேலதிக கூலிகள் என்ற வகையில் ஏற்படுகிறது.

இது பணரீதியற்ற வடிவில் உடனடியாக ஏற்படுகிறது. அதாவது கல்லூரிக்கு அல்லது பல்கலைக்கழகத்திற்குச் செல்வதனால் ஏற்படும் நுகர்வுப் பெறுமதி அல்லது மனமகிழ்ச்சி ஆகும். பெரும்பாலான மாணவர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். அதிகமான மாணவர்களுக்கு புதிய மாணவர்களைச் சந்திப்பதற்கும் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. எந்தவொரு முதலீட்டுத் தீர்மானத்தினைப் போலவே உயர்கல்வியை தொடர்வது தொடர்பான தீர்மானம் நடைமுறை செலவுகளையும், நன்மைகளையும் (பொதுவாக தேறிய செலவு) எதிர்காலத்தில் தொடர்ந்து பெறுகின்ற செலவுகளையும் நன்மைகளையும் (பொதுவாக தொடர்ந்து பெறும் தேறிய நன்மைகள்) ஒப்பிட்டு ஆராய்வதில்தான் தங்கியுள்ளது. நிகழ்கால நன்மை, நிகழ்கால செலவு எனின் மனித மூலதன வளர்ச்சிக்காக கல்விக்கான முதலீட்டினை மேற்கொள்வது அர்த்தமானதாகும். நிகழ்கால நன்மை < நிகழ்கால செலவு எனின் கல்விக்கான முதலீடு பயனற்றதொன்றாகக் காணப்படும். மேலும் உயர்கல்வியில் முதலீடு செய்தல் தொடர்பான மேலதிக விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்குக் கீழ்வரும் வரைபடம் 1.7இனை நோக்குவோம்.

வரைபடம்: 1.7

மேற்படி வரைபடமானது வயதுப் பாங்கான வருமானத்தினை 18 வயதில் பாடசாலையை விட்டு விலகி ஊழியப்படையில் சேருகின்றவர்களுக்கும், 21 வயதில் ஊழியப்படையில் சேருகின்றவர்களுக்கும் தருகின்றது. கறுப்பான பகுதி மேலதிகமான ஒரு மாணவன் இறுதியாக எவ்வளவு உழைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றது. மென்மையான நிறப்பகுதியில் 0-க்குக் கீழுள்ள பகுதி பல்கலைக்கழகத்தில் இருக்கின்றபொழுது ஏற்பட்ட ஏனைய செலவுகளினதும், வருமானங்களினதும் பெறுமதியினைக் காட்டுகின்றது. வரைபடத்தின்படி இச்செலவுகள், நன்மையினைவிட கூடுதலாக உள்ளது என எடுகோள் கொள்ளப்படுகின்றது. பல்கலைக்கழகத்திற்குச் செல்வதா இல்லையா என்ற தீர்மானத்தினை கறுப்புப் பகுதியினை மொத்த மென்மையான நிறப்பகுதியுடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம். செலவு நன்மை ஆய்வானது தொழிற்சாலையைக் கட்டுவதா? அல்லது பல்கலைக்கழகத்தைக் கட்டுவதா? என்ற நீண்டகாலத் தீர்மானங்கள் பற்றிய வழிமுறையாகும்.  இங்கு நிகழ்கால நடவடிக்கை எதிர்கால நடவடிக்கைமீது செல்வாக்கு உடையதாகக் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சமிக்ஞை காட்டுதல்

வங்கியில், ஒரு வரலாற்றுப் பட்டதாரி ஏன் கூடியளவு உழைக்கக் கூடியதாக உள்ளது? மனித மூலதனக் கோட்பாட்டின்படி கல்வி மற்றும் தொழிலில் ஏற்படும் பயிற்சி தொழிலாளரின் உற்பத்தித்திறனை அதிகரிப்படையச் செய்யும். மேலும் கல்வி மீதான முதலீட்டுக் கோட்பாடு இன்னுமொன்று காணப்படுகின்றது. இதுவே சமிக்ஞை காட்டுதல் பற்றிய கோட்பாடாகும். இக்கோட்பாட்டின்படி கல்வி நேரடியாக தொழிலாளரின் எல்லை உற்பத்திக்கு மேலதிகமாக ஏதும் பங்களிப்புச் செய்யவிட்டாலும்கூட அதியுயர் செலவுடைய கல்வியில் முதலீடு செய்வது பகுத்தறிவுடையது எனக் குறிப்பிடப்படுகிறது. வரலாற்றுப் பட்டதாரிகள் வங்கியில் ஏன் பெருமளவு வருமானம் பெறுகின்றனர் என்பதை விளக்குவதற்கு இக்கோட்பாடு அதிகளவுக்கு உதவியாக அமையலாம்.

உயர்கல்வி உற்பத்தித் திறனுக்கு ஏதும் பங்காற்றவில்லை என்ற வாதத்தினை நாம் ஏற்றுக் கொள்வதாகக் கருதுவோம். மனித முதலீட்டிலான இத்தகைய உயர் செலவை மேற்கொள்வதற்கு முன்னர் பாடசாலையை விட்டு விலகுபவர்கள் ஆரம்ப செலவை ஈடுசெய்யக்கூடிய வகையில் எவ்வாறு கூலியை உயர்த்திக் கொள்வதற்காக உறுதிப்படுத்த முடியும்? சமிக்ஞை காட்டுதல் கோட்பாட்டின்படி திறமையான தொழிலாளர்கள்தான் எதிர்காலத்தில் உயர் உற்பத்தித்திறன் உடையவர்கள் என்ற சமிக்ஞையை வேலை வழங்குனருக்கு அறிவிக்கின்றனர். உயர்கல்வியானது உற்சாகமுள்ள உயர் உற்பத்தித் திறனுடைய தொழிலாளர்களை வெளிப்படையாக அடையாளம் காட்டுகிறது. நிறுவனங்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்குக் கூடுதலாக வேதனம் வழங்கமுடியும். ஏனெனில் அவர்களே உயர் ஆற்றல் படைத்த தொழிலாளர்கள் என நிறுவனங்கள் உறுதிப்படுத்த முடியும்.

வெளிப்படையாக அடையாளம் கண்டு கொள்ளும் செயன்முறை, உயர் ஆற்றல் பெற்ற தொழிலாளர்களை ஏனைய தொழிலாளர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது. குறைவான ஆற்றல் உடைய தொழிலாளர்கள் ஏன் பல்கலைக்கழகம் செல்வதில்லை? என்பதுடன் அவர்களுக்கு உயர்கல்வியை வழங்கும் முறையில் நிறுவனங்களை அவர்கள் ஏன் ஏமாற்றுவதில்லை? இதற்கு இரண்டு விடைகள் உள்ளன. முதலாவது, குறைவான ஆற்றல் உடைய தொழிலாளர்கள் சித்தியடைவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. கல்வியிலான இரண்டு முதலீட்டுக் கோட்பாட்டிற்கும் சுவாரஸ்யமான ஒப்பீட்டினை நாம் அவதானிக்கலாம். கல்வி கற்பது உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்யுமாயின் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற மாணவர்களுக்கு நிறுவனங்கள் உயர் கூலியினை வழங்குதல் வேண்டும்.

சில நிறுவனங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதிப்பரீட்சை முடிவதற்கு முன்பே அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. இச்சான்றுகள் சமிக்ஞை சார்பாகக் கோட்பாட்டுக்கு எதிரானவையா? இவ்வாறு இருக்கத் தேவையில்லை ஏனெனில் வெளிப்படையாக அடையாளம் கண்டுகொள்ளும்முறை இன்னொரு முறையிலும் செயற்படுகிறது. குறைவான ஆற்றல் உடைய மக்கள் பல்கலைக்கழகம் செல்வதில்லை என தீர்மானிக்கலாம். அதிகமான மக்கள் அவர்களின் சொந்த திறமைகளை அறிந்து கொள்கின்றமையால் பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் இருக்கின்றவர்கள் உயர்தேர்ச்சி உடையவர்கள் என நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம்.

கல்வி (மிக உயர்ந்த மட்டங்களிலாவது) உற்பத்தித் திறனுக்கு ஓரளவுக்கு பங்காற்றுகின்றது என்பது சாத்தியமானது. தூய கல்விசாராப் பயிற்சிகள் தவிர்ந்த ஏனையவைகளில் வெளிப்படையாக அடையாளம் காணல் என்றவொரு விடயம் காணப்படலாம். பொறியியல், சட்டம், மற்றும் வணிகப்பட்டங்கள் என்பன மெய்யியல், வரலாறு, மற்றும் அரசியல் என்பவற்றினைவிட உற்பத்தித்திறனுக்கு அதிகளவு பங்காற்றுகின்றன.

கல்வித் துறைக்கான முதலீடு பற்றிய ஆய்வு தொடர்பில் முடிவுக்கு வரும் முன்னர் முக்கிய ஒரு விடயத்தினை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இது தனிப்பட்ட ஒருவருக்கு நல்லது எது? சமூகம் முழுவதுக்கும் நல்லது எது? என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டில் கவனம் செலுத்துகிறது. கல்வி நேரடியாக உற்பத்தித்திறனை அதிகரிக்குமாயின் சமூகத்திற்கு அது நன்மையானது. ஊழியப்படை உற்பத்தி செய்யக்கூடிய வெளியீட்டின் தொகையினை அது அதிகரிக்கச் செய்யும்.

எவ்வாறாயினும், உயர்கல்வியின் ஒரே ஒரு தொழிற்பாடு தொழிலாளரின் உயர்ந்த ஆற்றலை சமிக்ஞை செய்வதாக மட்டும் கருதிக் கொள்வோம். இந்நிலையிலும்கூட பல்கலைக்கழகம் செல்கின்றவர்களுக்கு இது பொருத்தமானதாகும். ஆனால் சமூகம் முழுவதற்கும் இது பொருந்துமா? உற்சாகமுடைய தொழிலாளர் யார் என்பதை அறிவதில் சமூக நன்மை ஒன்று உள்ளது. கடினமான தொழில்களுக்குத் திறமையான தொழிலாளர்களை அமர்த்துவதன் மூலம் சமூகம் உயர்தளவு வெளியீட்டினைப் பெற்றுக்கொள்ளும். இன்றைய பொருளாதார உலகிலே ஆண்கள், பெண்கள் என்பவர்கள் கல்வித்தரம் அதிகரிக்க அதிகரிக்க வருமானங்களை உயர்ந்தளவாகப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனாலும் அதில் பெண்கள் ஆண்களின் உழைப்பில் மூன்றில் இரண்டு பங்கினைத்தான் பெறுகின்றார்கள் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். இதற்கான காரணம் ஆண்கள் மேற்படிப்புக்களைச் செய்வதற்கும் அதன் மூலம் வருமானத்தினை ஈட்டிக் கொள்ளவுமே சிந்திக்கின்றனர்.

நடைமுறை உதாரணங்கள்

எனவே எந்தவொரு நாடாக இருந்தாலும் சரி மனித மூலதனத்தில் கல்வி என்பது முக்கிய பங்கினை வகிக்கின்றது. எந்தவொரு நாட்டில் வாழும் உயர் வருமானம் உழைக்க வேண்டும் என்கின்ற நபர்களில் பெரும்பாலானோர் கல்வியில் முதலீடு செய்கின்றனர். பாடசாலைக்கே செல்லாதவருக்கும், பல்கலைக்கழகம் வரை உயர்பட்டம் பெறுபவருக்கும் ஒரே அளவான கூலி வழங்குதல் என்பது சாத்தியமற்றது. ஏனெனில் இருவரது வேலைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேறுபட்ட கல்வித் தகமை கொண்டவர்கள் ஒரே வேலை செய்யக் கூடிய ஒரு நிலை இருந்தால்கூட அங்கு உயர்கல்வித்தரம் கொண்டவர்களின் சம்பள மட்டம் உயர்வாகவே காணப்படும். சில நேரங்களில் மாறான நிலைமைகளும் தோன்றலாம்.

ஒரு நபர் தனது கல்வித் தரத்தினை உயர்த்திக் கொள்ளுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வருமான மட்டம் ஏதோ ஒரு தொகையினால் அதிகரிக்கப்படும் என்பதும் உண்மையாகும். ஒரு நபர் தனது கல்வித் தரத்தினை உயர்த்திக் கொள்ளுவதற்கான அடிப்படைக் காரணம் வருமான உழைப்பு நோக்கம் என்று கூறலாம். இலங்கையினைப் பொறுத்தவரையில் கல்வித்தரம் கூடியவர்கள்தான் அதிகளவில் சம்பாதிக்கின்றார்கள். அந்த வகையில் உதாரணமாக இலங்கை முழுவதற்குமான சேவைகளான இலங்கை நிர்வாக சேவை (SLAS), இலங்கை விஞ்ஞானவியலாளர் சேவை (SLScS) மற்றும் இதுபோன்ற பல சேவைகளின் மூலம் உயர்கல்வியால் உள்வாங்கப்படுகின்ற ஊழியர்களுக்கு இலங்கையில் அதிகளவான சம்பளமட்டம் வழங்கப்படுகின்றது. இவ்வாறான தொழில்கள் White collar job என அழைக்கப்படுகின்றன. இதனைவிடவும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போன்ற உயர்கல்வித்தரம் கூடியவர்களும் அததிளவில் சம்பாதிக்கின்றனர். கல்வித் திணைக்களங்களில் வேலை செய்பவர்கள் அவர்களின் கல்வித் தரத்துக்கு ஏற்ற வகையில் வேறுபட்ட சம்பளங்களைப் பெற்றுக்கொள்கின்றார்கள். கல்வித்தரத்தில் உயர்நிலை பெறாதவர்கள் பெரும்பாலான நேரங்களில் அவர்களைவிட ஒப்பிட்டு ரீதியில் குறைந்தளவான வருமானத்தினைப் பெற்றுக் கொள்கின்றனர்.

முடிவுரை

ஒட்டுமொத்த ரீதியில் நோக்கும்போது வருமானம் பெறுவதற்குப் பல வழிகள் காணப்படுகின்றன. அதில் சில பிரிவினர் கல்வி மீதான மனித முதலீட்டில் தங்களை வளர்த்தெடுக்கின்றனர். அவ்வாறன நபர்கள் தங்களது கூடியளவான கல்வித்தரத்தினால் கூடியளவு சம்பாதிக்கின்றனர். அவர்கள் தாம் கல்விக்காகச் செலவிட்ட காலப்பகுதியை வேறு ஏதாவது விடய்ஙகளில் முதலிட்டிருந்தாலும் கல்வி பெற்றுத்தருகின்ற வருமானம் ஒப்பிட்டு ரீதியில் அதிகமாகவே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மாறாக, சில நிலைமைகளின்போது கல்வித்தரம் கூடியவர்கள் அதிகளவு சம்பாதிக்கமுடியாத ஒரு நிலையும் தோன்றலாம். அத்தகைய சந்தர்ப்பத்திற்கான வாய்ப்பு சிறிதளவே காணப்படும். இத்தகைய ஒரு நிலை ஊழியச் சந்தையினது மாற்றங்களுக்கு ஏற்ப தாக்கம் செலுத்தக்கூடியது எனலாம்.

துணைநின்றவை

……………………………………….

வினாயகமூர்த்திவசந்தா

கலைமாணி மாணவர், பொருளியல் துறை

கலைகலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்

வந்தாறுமூலை, இலங்கை.

nirovasa2919@gmail.com