அதியமான் ஔவை அருந்தமிழ் வளர்த்ததும்

நதியாம் காவிரி நன்னடைப் பயின்றதும்

இதழுடன் தருமம் இனிதே அமைத்ததும்

அதிபுகழ் தகடூர் ஆனநல் ஊரே    

எனச் சான்றோர்களால் பாராட்டப்பட்ட தகடூர் அழகிய மலைகள் சூழ இயற்கை அரண்மிக்கதாய் விளங்குகிறது. நன்செய், புன்செய் என இருவகை வளமும் மிக்கது. அதியமான் கொடையைப் பின்பற்றி பலரும் வாழ்ந்ததால் தருமபுரிஎன தகடூர் பெயர் பெறலாயிற்று. ஔவைக்கு உயிரை நீண்டநாள் காக்கும் நெல்லிக்-கனியை அதியமான் தந்து வாழ்த்தியதால் இலக்கியத்திலும் அதியமான் புகழ் நிலைத்து நிற்கிறது.

          அதியமானின் தாய் நாகையம்மை தென்பெண்ணை ஆற்றின் அருகே அமைந்த இன்றைய கம்பைநல்லூர் ஊரில் சனக்குமார நதியருகே சிவலிங்கம் கண்டு வணங்கி மகிழ்ச்சி பெற்றதால் அங்கு அவ்வப்பொழுது வந்து வணங்கி மனநிறைவு பெற்றார். இதன் காரணமாக மன்னர் அதியமான் குடும்பமும், புலவர் ஔவையாரும் வந்து சிவலிங்கத்தை வணங்கிப் போற்றினர். அதியமான் தாய் நாகையம்மையின் வேண்டுதலை ஏற்று, இங்கே அழகிய சிவன் கோயிலைக் கட்டி வணங்கிப் போற்றினார். இன்றும் ஏராளமானோர் வழிபடும் தலமாக கம்பைநல்லூர் விளங்குகிறது. பழங்காலத்தில் இவ்வூர் அதியமானின் தாயார் பெயரால் நாகையம்பள்ளி என்று பெயர் பெற்றது.

அத்தகைய அழகிய கம்பைநல்லூரில் 15-02-1962-ல் திருப்பதி-பூங்காவனம் இணையருக்கு மூன்றாம் மகனாகத் தகடூர்த் தமிழ்க்கதிர் பிறந்தார். இவருடன் ஏழ்வர் பிறந்தனர். மொத்தம் நான்கு ஆண் மக்களும், நான்கு பெண் மக்களும் என் பெற்றோரால் பெற்று வளர்க்கப்பட்டனர். என் மூத்த அண்ணார் கௌரன் அவர்கள் பின்னாளில் போற்றப்படும் அருமைமிக்க மாமனிதர் ஆனார். இவரிடம் இலக்கியம் படைக்கும் ஆர்வத்தைப் பெற்றார் தகடூர்த் தமிழ்க்கதிர்.

          என் தந்தையார், கிருஷ்ணபூசாரியின் திருமகன் திருப்பதி நிலக்கிழார் ஆவார். வேளாண்மை செய்துக் கொண்டே வாழ்நாள்வரை சித்த மருத்துவமும் செய்து வந்தார். என் மூதாதையர்களும் பரம்பரைச் சித்த மருத்துவராக விளங்கி ஆயிரக்கணக்கானோர் உயிர்களைக் காத்தனர். மருத்துவமனைகள்

அருகே இல்லாத அந்நாளில் பாம்புவிடம் போன்ற மருத்துவம் செய்து புகழ் பெற்றவர்களாக விளங்கினர். ஆற்றின் பாலம் இல்லாத காலத்தில் ஆற்றில் கூடை மூலம் வழிப்பயணம் மேற்கொள்ளவும் உதவி புரிந்தனர். கம்பைநல்லூர் பெரிய ஏரி மழை வௌ;ளத்தால் உடைவதைத் தடுத்து நிறுத்தி சாதனை புரிந்து சன்மானம் பெற்ற பாராட்டிற்குறிய பரம்பரையாகவும் திகழ்ந்தனர். என் பரம்பரை நாட்டுக்கவுண்டர் பரம்பரையாக சிறந்து விளங்கியது. தருமபுரி அருகே கடத்தூர் மணியம்பாடி வெங்கட்ரமண திருக்கோவிலின் விழாக்கொடி ஏற்றி வைக்கும் பரம்பரையாகவும் இன்றுவரை திகழ்ந்து வருகின்றனர்.

          தகடூர்த் தமிழ்க்கதிர் பள்ளிப் பருவத்திலிருந்தே அறிவாண்மை மிக்கவராகத் திகழ்ந்தார். பள்ளியிலும் மாவட்ட அளவிலும் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்று பாராட்டுக்குரியவரானார். பள்ளி வாழ்க்கைக்குப்பின் மாநில அளவில் பல கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.  பள்ளி வாழ்க்கைக்குப்பின் மாணவர்கள் பலருக்கும் இலக்கியப் பயிற்சி அளித்தார். ஔவையார்கையெழுத்து இதழை நடத்தி சில இதழ்களை வெளிக் கொணர்ந்தார். தந்தையைப்போல் தொண்டாகக் கருதி மருத்துவமும் செய்து வந்தார். நூலகப் படிப்பில் சிறந்தவராகத் திகழ்ந்தார்.

          என் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் மாதவன் என்பது ஆகும். இவருக்கு தமிழ்க்கதிர் என்று பெயர் சூட்டியவர் கடத்தூர் சொல்லாக்கப்புலவர் நெடுமிடல் ஆவார். என் தொடர்பின் மூலம் தனித் தமிழ்பாப்புலி தரங்கை பன்னீர்செல்வனார் இவரை தகடூர் என்ற ஊர்ப் பெயருடன் அமைத்தார். எனவே தகடூர்த் தமிழ்க்கதிர் என்ற பெயர் புகழப்பெயராக மலர்ந்தது.

          கம்பைநல்லூரில் ஆரம்பப் பள்ளிப் படிப்பை படித்தார். ஆரம்பப் பள்ளியில் அக்காலத்தில் மனம் கவர்ந்த நல்லாசிரியராக விளங்கியவர் கோபாலகிருஷ்ணன் என்ற ஆசிரியர் ஆவார். நான் அவ்வப்பொழுது நற்கதைகளையும், கதைப்பாடல்களையும் பாடி மகிழ்விப்பார். எனவே அவரை மறக்க முடியாதவர் வரிசையில் தகடூர்த் தமிழ்க்கதிர் போற்றுவார். கவிஞர் கம்பைநல்லூர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும்போது புலவர் ஒ.மா.துரைசாமி அவர்கள் தமிழாசிரியராக திகழ்ந்தார். நான் மூலம் வகுப்பில் பகுத்தறிவுச் செய்திகளை அடிக்கடி கேட்பார். இவரிடம் தகடூர்த் தமிழ்க்கதிர் சந்தப்பாடல் எழுதி காண்பித்து

பாராட்டுப் பெற்றார். எனினும், மரபுப்பா எழுத விருப்பம் கொண்டு ஒன்பதாம் வகுப்பில் வெண்பா எழுதி அப்போது ஆசிரியராகப் பணியாற்றிய  பாவலர் மணிவேலன் அவர்களிடம் காட்டி திருத்தம் பெற்றார். பின்னர் இவரிடம் விருத்தம், சிந்து போன்ற யாப்பு வகைகளை எழுதக் கற்றுக் கொண்டார்.

          இதே பள்ளியில் மேல்நிலைக் கல்வியைத் தொடரும்பொழுது எழுத்தாளர் தகடூரான் அவர்கள் இவருக்கு தமிழாசிரியராக விளங்கினார். இவரிடம் கட்டுரை, சிறுகதை, புதினம், நாடகம் போன்ற படைப்புகளைப் படைக்கக் கற்றுக் கொண்டார்.

          நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. அப்பொழுது கவிதைப்போட்டியும் நடந்தது. அதில் பதினாறு பேரில் முதல் மாணவராக தகடூர்த் தமிழ்க்கதிர் வெற்றி பெற்றார். இயற்கை என்ற பொருளில் நடந்த கவிதைப் போட்டியில் தென்பெண்ணை ஆற்றின் இயற்கை வளம் என்ற தலைப்பில் நான் படைத்த பாடல் ஈரோட்டிலிருந்து வெளிவந்த பூங்கோதை இதழில் உலக குழந்தைகள் ஆண்டு மலரில், 1978ல் வெளி வந்தது.

          நான் பதினோராம் வகுப்பு பயிலும்போது பாரதியார் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியை எழுத்தாளர் தகடூரான் நடத்தினார். அப்போட்டியில் நான் அவை அடக்கம் காரணமாக விரைவாக பேசமுடியாமல் போனது. இதனில் நான் இரண்டாம் பரிசு பெற நேர்ந்தது. நூலகத்தைப் பயன்படுத்துவதிலும் ஒழுக்க விதிகளிலும் சிறந்தவராக விளங்கினார். எனவே பள்ளி வரலாற்றிலேயே எடுத்துக்-காட்டாக வாழ்பவர் (நுஓநுஆPடுயுசுலு) என தேசிய மாணவர்படை ஆசிரியர் சான்று வழங்கினார். இன்றுவரை வேறு எவரும் இப்பள்ளியில் பெற்றிடாத பெருஞ்சிறப்பு இதுவாகும்.

          என் ஆசிரியர்களில் ஒருவரான திருமதி. புலவர் த. மீனாட்சிசுந்தரி அவர்கள் அன்பும் அமைதியும் குன்றா விளக்காய் திகழும் உனக்கு, வாழ்க்கையின் இறுதிவரை அவ்வாறே திகழ கடவுள் அருள்புரிவாராக, உன் தமிழ்ப் புலமையும் தமிழ்ப்பற்றும் சிறப்பாக வளர என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளார். பள்ளி வாழ்க்கைக்குப்பின் நான் கொள்கை தளராமல் நின்றபோது, தனித்தமிழ்பாப்புலி தரங்கை பன்னீர்ச்செல்வனார்

அவர்கள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு வென்று வெற்றிக் கனிகளை எய்தும் மனவுறுதியும் அறிவுத் தெளிவும் தங்கள்பால் அமைந்திருக்கும் அருந்திறல்! தொடர்க் துயர்வென்று சிறக்க விழைகின்றேன்! என்று வாழ்த்தியுள்ளார்.

          பாவேந்தர் பாரதிதாசன் திருமகளார் திருமதி. வசந்தா தண்டபாணி அவர்கள் 4-5-1990 ஏற்காடு படகுப் பாட்டரங்கின்போது, கவிஞர் அவர்களை, ஆசிரியர் பெருமகனாய் வாழ்ந்து தமிழ்ப்பாலை குழந்தைகட்குப் புகட்டுக! என் விருப்பம் அதுவே! ஏன் எனில் தந்தையார் ஆசிரியர்! என்று வேறு பணிக்குச் செல்லாது ஆசிரியப் பணியையே தேர்வு செய்து பணி தொடர வாழ்த்தினார்.

          என் தொடக்க காலத்தில் இவருக்கு ஆய்வுக் கட்டுரை எழுதக் கற்றுக் கொடுத்தவர் பாவலர் மணிவேலன் ஆவார். நான் தம்முடன் மற்ற ஆறு அறிஞர்கட்கும் ஆய்வுப் பயிற்சியளித்து கட்டுரை எழுதச் செய்து முதுமைச் சிக்கல்களும் அவற்றுக்குத் தீர்வுகளும் என்ற நூலை தொகுத்து வெளியிட்டார். அந்த அறுவரில் ஒருவராக தகடூர்த் தமிழ்க்கதிர் திகழ்கிறார்.

          பள்ளிப் படிப்பின்போதே நாட்டுப்புற இலக்கியம் தொகுக்கும் ஆர்வத்தைப் பெற்றார். பின் பள்ளி வாழ்க்கைக்குப்பின் தகடூர் நாட்டுப்புறப்பாடல்கள், தகடூர் வட்டார சிறுகதைகள், தகடூர் நாட்டுப்புற பழமொழிகள், தகடூர் நாட்டுப்புற விடுகதைகள் போன்றவற்றைத் தொகுத்து ஈரோடு வளரும் தமிழ் உலகம்என்ற மாத இதழில் தொடராக 1995 முதல் நான்காண்டுகள் வெளியிட்டார். இவ்விதழின் ஆசிரியர் பன்மொழிப் புலவர் மு.ச. சதாசிவம் என் நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

          பள்ளி மாணவர்க்கான மாலைப்பள்ளியை தகடூர்த் தமிழ்க்கதிர் தமது இல்லத்தில் நடத்தினார். அப்போது கவியரங்கம், கருத்தரங்கம் என தொடர்ந்து நடத்தினார். இதில் பாவலர் மலர்வண்ணன் மற்றும் இசையாசிரியர் சின்னு ஆகியோர் விழாவில் பங்கு பெற்றனர்.

          தனது மூத்த அண்ணார் கௌரன் என் இலக்கியப் பணிகளுக்கு பெரிதும் உதவினார். இவரால் ஊக்கம் பெற்று பல்வேறு இலக்கியப் பணிகளை நான் ஆற்றினார். தொகுப்புக்கலை தனது அண்ணாரிடமிருந்து கற்று பலரும் பயன்படும்

வகையில் அதை ஆக்கினார். இலக்கியத் தொகுப்பாக 1. தகடூர்த் தமிழ்க்குயில்கள், 2. பாரதிதாசனார் நூற்றுக்கு நூறு, 3. பேரறிஞர் அண்ணா மணிமாலை ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட்டார்.

இதழ்ப்பணி

          பல்வேறு இதழ்களில் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதைகள் எழுதிய நான் தமிழ்ப்பணிக்காக இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். மேலும் தானே இதழையும் நடத்தியும் வருகிறார். அதனைப் பற்றி இங்கு காண்போம்.

 • ஔவையார்-காலாண்டிதழ் ஆசிரியர், (2003-2015) இரண்டு ஆண்டுகள்.
 • வாழ்வியல் முன்னேற்றம் – இதழ் ஆசிரியர்க் குழுவில் பணி 2014 முதல்.
 • இலக்கியச்சோலை மாத இதழில் 2015 முதல் தருமபுரி மாவட்ட பிரதிநிதியாக பணி.
 • தமிழ் உறவு – இணையாசிரியர் பணி (2014-2015) இரண்டு ஆண்டுகள்
 • தமிழ் வழிக்கல்வி வெண்பா விளக்கு மாத இதழின் சிறப்பாசிரியர் பணி 2015 முதல்.

இயக்கப்பணி

எப்பொழுதும் நாட்டிற்கும் இலக்கியத்திற்கும் தமிழ் வளர்ச்சிக்கும் திருக்குறள் சமுதாயம் வளர்வதற்கும் பாடுபட்டு வருபவர் தகடூர்த் தமிழ்க்கதிர் ஆவார். அவரது பொறுப்புகள் மற்றும் பணிகளைக் காண்போம்.

 • ஔவைத் தமிழ் மன்றம் என்ற அமைப்பை நிறுவி, அதன் தலைவராகவும் 1987 முதல் பணியேற்று பல்வேறு கருத்தரங்குகள், கவியரங்குகள் நடத்தி இன்றுவரை பணி புரிந்து வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள் மன்றத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
 • கவிக்குயில் கழகம் என்ற மாநில இயக்கத்தின் தருமபுரி மாவட்ட அமைப்பாளராக 1986 முதல் 1987 வரை பணியாற்றினார்.
 • உலகத் தமிழ்க் கவிஞர் பேரவைக் கிளையின் தருமபுரி மாவட்ட அமைப்பின் துணைச் செயலாளராக 2004 முதல் 2005 வரை இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
 • கிளை நூலக வாசகர் வட்ட அமைப்பில் 2003-லிருந்து 2014 வரை வாசகர் மன்றத் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளார்.
 • தமிழ்நாடு திருக்குறள் இயக்கங்களின் வடக்கு மண்டல தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக 2013லிருந்து பணியாற்றி வருகிறார்.
 • உலகத் தமிழ்ப்பண்பாட்டு பேரவையின் மாநில துணைத் தலைவராக 2013 முதல் 2014 வரை பணியாற்றியுள்ளார்.
 • வள்ளுவர் மன்றம் என்ற அமைப்பை நிறுவி அதன் செயலாளராக 2005 முதல் இன்று வரை பணியாற்றி வருகிறார்.

ஆய்வுப்பணி

          தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் என் ஆய்வுக் கட்டுரை ஆய்வுத் தொகை நூல்களில் வெளி வந்துள்ளன. மேலும் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் வெளியிட்ட ஆய்வுத்தொகை நூல்களில் என் கட்டுரைகள் வெளி வந்துள்ளன.  தொகை நூல்கள் மற்றும் இதழ்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. ஓரிரு ஆய்வுக் கருத்தரங்க நிகழ்விற்கு தலைமை ஏற்றும் பணி புரிந்துள்ளார். சிறந்த ஆய்வுக் கட்டுரைக்காக செந்தமிழ்த் திலகம் விருது 24-8-2010 அன்று சென்னையில் தமிழய்யா கல்விக் கழகம் மூலம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது 18-03-2012 அன்று சென்னை வைணவக் கல்லூரியில் சிறந்த ஆய்வுக்கான செந்தமிழ்ச்சுடர் விருதை கவிஞர் முனைவர் துரைகோ வழங்கிச் சிறப்பித்தார். 2003இல் உலக அளவிலான மலேசியா உலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் வென்று பரிசும் பாராட்டும் தகடூர்த் தமிழ்க்கதிர் அவர்கள் பெற்றுள்ளார்.

இதுவரை வெளிவந்த நூல்கள் :

கவிதை :

 • தமிழ்க்கதிரின் எழில்வானம்! (1999)
 • மழை ஒலி (2010)
 • ஓடையின் பாடல்கள்! (2015)
 • கவிதைச் சங்கு! (2015)

சிறுவர் கவிதை :

 • அடைக்கலன் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும் (2004)
 • தம்பி நீ கேளடா (2012)
 • சிறுவர்ப் பு+க்கள் (2013)
 • பசுவும் பாப்பாவும் (2013)
 • வாழ்க்கை நூல் (உரைநடை)
 • ஐங்குறள் அமிழ்தம் (2014)
 • இந்தியாவின் காவல், புலனாய்வு மற்றும் நீதித்துறை (2014)

இதழில் வெளிவந்தவை (1995 முதல் 1998 வரை)

 • தகடூர் நாட்டுப்புறப் பாடல்கள்
 • தகடூர் வட்டார நாட்டுப்புறக் கதைகள
 • தகடூர் வட்டார பழமொழிகள்
 • தகடூர் வட்டார விடுகதைகள்

வெளிவந்த தொகுப்பு நூல்கள் :

 • தகடூர் தமிழ்க்குயில்கள் (1988)
 • பாரதிதாசனார் நூற்றுக்கு நூறு (1990)
 • பேரறிஞர் அண்ணா மணிமாலை (2009)

ஆசிரியர் பணியில் கவிஞர்

          நான் ஆசிரியர் பணி பயிற்சி பெற்று பாவக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1999இல் ஆசிரியராகப் பணியேற்றார். பாவக்கல் அருகே அமைந்த தூவல் என்ற இயற்கை அதிசய ஆறு சென்று பார்வையிட்டார். அங்கே அமைந்த பாறைக்கு வாணிதாசன் பாறை என்று பெயரிட்டார், அப்பொழுது,

          தென்பெண்ணை ஆறு தெளிந்தநீர் தூவும்நல்

      நன்காட்சி வாணிதாசன் நாட்டிடும் – இன்னிசைப்

      பாக்கள்போல் எங்கும்தேன் பாவாம் எழிற்காட்சி

      ஆக்கிடும் தூவல் அகம்

என்ற பாடலைப் பாடினார். இன்றும் அழகுமிகு ஆற்றின் காட்சியைக் காணலாம்.

          2003ல் மொரப்பூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் பணியாற்றியபோது என் புதுநானூறு தொகுப்பு நூலில் இடம்பெற்ற பாடலில் ஐந்து வரியை பள்ளி ஆசிரியர்கள் தீர்மானமாக அனுப்ப தருமபுரி உதவி தமிழ் வளர்ச்சி இயக்குநர் தீர்மானத்தை ஏற்று கீழ்க்கண்ட பாடலை முத்திரை வரியாக அறிவித்தார். அறிஞர்கள் பலர் இதனைப் பராட்டி எழுதியுள்ளனர்.

கவிஞரின் அந்த புதுநானூற்றுப் பாடல் வரிகள்:

          நங்குறள் குமுகம் நலம்பெற வேண்டின்

      சட்ட மன்றம் செல்லுநர்; மற்றையோர்;

      பட்டம் பெற்றுப் பணியினை ஏற்பவர்,

      குறள்நெறி, தேர்ந்தபின் கொள்ளுக்

      மருள்நெறி மாங்க! மலர்கவள் ளுவமே!

என்ற இப்பாடல் வரிகள் புதுமாற்றத்தை உருவாக்கும் தன்மையன. பேராசிரியர் ஆறு.அழகப்பன் தொகுத்த புதுநானூறு நூலில் தகடூர்த் தமிழ்க்கதிர் அவர்களால் எழுதப்பட்ட செவ்வாய் உலகம் கவிதைக் கனவு நிறைவேறியதைத் தொடர்ந்து இவருக்கு இலக்கியச்சோலை இதழ்ச் சார்பில் 19-10-2014 அன்று திரைப்பட இயக்குநர் கலைமாமணி எஸ்.பி. முத்துராமன் அவர்களால் சாதனைச் சுடர் விருது சென்னையில் வழங்கப்பட்டது. இக்கவிதையை 2008-ல் சந்திராயன் விஞ்ஞானி மதிப்புமிகு மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடம் காட்டி பாராட்டுப் பெற்றார்.

          உலகெங்கும் திருக்குறள் மூலம் எண்ணற்ற அறிஞர்கள், விஞ்ஞானிகள் உருவாகியுள்ளனர். தமிழ் வழிக் கல்வி மூலம் திருக்குறள் பயின்ற பலர் விஞ்ஞானியாக உருப்பெற்றுள்ளனர். அமெரிக்க நாசாவில் பணியாற்றிய மதிப்புமிகு விஞ்ஞானி பார்த்தசாரதி, ஏவுகணை விஞ்ஞானி மாண்புமிகு அப்துல்கலாம், மதிப்புமிகு அறிவியல் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, மதிப்புமிகு நிலா, செவ்வாய்கிரக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மதிப்புமிகு செய்வாய் கிரக விஞ்ஞானி அருணன் சுப்பையா, தற்பொழுது திருவனந்தபும் இந்திய விஞ்ஞான கழக தலைமை விஞ்ஞானி சிவன் போன்றவர்கள் தமிழ்வழிக் கல்வி மூலம் திருக்குறள் பயின்றவர்களே!  நான்களின் பங்கே இந்திய விஞ்ஞான பணியில் பெரும்பங்கு சிறப்புடன்  திகழ்ந்திருக்கிறது. நான்களால் முதல் முயற்சியிலேயே சந்திர, செவ்வாய் கிரக பயணப்பணி வெற்றியடைந்துள்ளன. இதனைக்காட்டும் வெண்பாவை கவிஞர் தகடூர்த் தமிழ்க்கதிர் இருபதாம் நூற்றாண்டிலேயே பாடியுள்ளார். இவ்வெண்பா பலருடைய மனப்பாடத்திற்குரியதாக விளங்கி வருகிறது.  அவ்வெண்பா,

          மண்ணில் திருக்குறளை மாசறக் கற்பவன்

      விண்ணில் நடப்பினும் வீழானே! – எண்ணம்தான்

      வண்ணமுறத் தோன்றி வளர்விக்கும் விஞ்ஞானம்

      திண்ணமுற வாழ்வளிக்கும் சீர் –  என்பதுவாகும்.

          என் பள்ளி வாழ்க்கையில் ஓய்வுநேர வகுப்பில் ஆசிரியரில்லா சமயத்தில் மாணவர்களுக்கு திருக்குறள் சொற்பொழிவு ஆற்றுவதுண்டு. அதேபோல் மாணவர் விரும்பும் வண்ணம் பாடல் கரும்பலகையில் இயற்றுவதுண்டு. ஒரு சமயம் மாணவர்கள் இரண்டு வரியில் திருக்குறளைச் சிறப்பித்து பாடக் கேட்டபோது,

          கதிரவனின் ஒளிகூட அரைநாள் தானே

      கவின்குறளோ எப்போதும் ஒளிரும் தேனே!

  என்று பாடி அசத்த மாணவர்கள் இதனை அப்படியே அசைபோட்டு வருகிறார்கள். இவ்வாறு குறும்பாடல்கள் ஏராளமாக பாடியுள்ளார்.

          2010-ல் தேசிய பசுமைப்படை மாணவர்களை களப் பயணமாக ஒடசல்பட்டி அரசினர் பழத்தோட்டம் மற்றும் கர்த்தாங்குளம் சென்று மாணவரிடை உரையாற்றும்போது கர்த்தாங்குளம் அருகே உள்ள குன்று மீது மாணவர்களை

அமர வைத்து முடியரசனாரின் இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை பாடலைப் பாடினார். பின்னர் அக்குன்றுக்கு முடியரசன் குன்று என்று மாணவர்கள் கரம் ஒலிக்க பெயரிட்டார். அப்போது

          மயில்வந்து குன்றத்தில் மாண்புசேர் தோகை

      பயில்நலம் காட்சிபோல பாங்காய்-குயில்சிறார்

      பாடும் முடியரசன் பாமழை குன்றிசைக்கும்!

      நாடும் தமிழின் நலம்

என்ற பாடலைத் தகடூர்த் தமிழக்கதிர் பாடினார்.

          2004 முதல் கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு நேர வகுப்பில் படைப்புத்திறன் உருவாக்க மாணவர்களுக்கு கரும்பலகையில் குறும்பாக்களை எழுதினார். அதன் விளைவாக பின்னர் மாணவர்களுக்கு ஆலமரத்தடியில் பயிற்சி தொடங்கினார். அது பின்னர் ஆலமரத்தடி மாணவர் மன்றமாக உருபெற்றது. இதன் மூலம் ஆண்டுதோறும் போட்டி நடத்தி பரிசு வழங்கி பாராட்டி வருகிறார். இதனைப்போல திருக்குறளை மனம் செய்து ஒப்புவிக்கும் மிகச்சிறந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறார்.

          பள்ளியில் பாடங்களை நடத்தும்பொழுதே புதுமைகளைப் புகுத்தி ஆராய்ச்சி உணர்வை வளர்ப்பதையும் படைப்பாற்றல் வளரவும் சிறந்த அறிவுக் களஞ்சியங்களை அடையும் மூன்று புதிய செயலாய்வுகளைக் கவிஞர் உருவாக்கினார்.

          2007இல் ஐந்தங்க கற்பித்தல் முறையும், 2009இல் படைப்பாற்றல் ஐந்தங்க கற்பித்தல் முறையும், 2010இல் அறிவியல் ஆறு கற்பித்தல் முறையையும் உருவாக்கி அரசிடம் சமர்ப்பித்தார். இதனை பிற ஆசிரியர்களையும் நடைமுறைப்படுத்தச் செய்து அதன் விளைவுகளை வெளிப்படுத்தினார்.

          2006-2007ஆம் கல்வியாண்டில் சிகரம் தொட்ட ஆசிரியர் என்ற விருதுக்கான போட்டியில் வென்று சிகரம் தொட்ட ஆசிரியர் விருதை கல்வி அலுவலரிடமிருந்து பெற்றார். 2009இல் தேசியப் பசுமைப்படையின் சிறந்த ஆசிரியருக்கான விருதை அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மதிப்புமிகு பெ.அமுதா அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு அனைவராலும் பாராட்டப்பட்டார்.

          2011இல் தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (சென்னை) நடத்திய கல்வி ஆய்வுக் கட்டுரைப் போட்டியிலும் சேவைத்தகுதியிலும் பங்குபெற்று ஆசிரியர் செம்மல் என்ற விருது பெற்றார். பள்ளியில் புத்தகப் பூங்கொத்து நூலகராகவும், உள்ளுர் அரசு நூலக ஒருங்கிணைப்பாளராகவும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி மாவட்ட நூலக அலுவலரின் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார். நான் மாணவர்களுக்காக எழுதிய அடைக்கலான் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும் நூலை உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் 25-05-2004இல் தருமபுரியில் வெளியிட்டு இவரை பள்ளிகளின் கதாநாயகன் என பாராட்டிப் பெருமை சேர்த்தார்.

நான் பெற்ற பாராட்டுகள் :

1985ல் அரூரில் திரு.வி.க. நகர் பெயர் பலகை திறக்க வந்த தமிழ் முனிவர் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் இவரை தமிழ்நதியின் எழுச்சி போன்றார்என்று பாராட்டி பொன்னாடைப் போர்த்திச் சிறப்பித்தார்.  அப்போது அடிகளாரின் மணிவிழா வாழ்த்தாக தகடூர்த் தமிழ்க்கதிர் இவ்வாறு பாடினார்.

          காவி உடுத்தியும் கன்னியின்மேல் ஆசைவைத்து

      ஆவி அவளென்று ஆர்த்துமே-மேவி

      தமிழ்வளரத் தொண்டுதரும் தண்டமிழ்ச் சான்றோய்!

      அமிழ்தொக்கும் உங்கள் அகம்

என்ற இப்பாடலைக் கேட்டு அடிகளார் திகைத்துப்போனார்.

          தமிழ்க்கதிரின் எழில்வானம்! என்ற நூலைப் படைத்த கவிஞரின் பாடல்களில் தனிப்பாடல்கள் பகுதியைப் படித்த உமைக்கவிஞர் சுரதா இவரை மனமுவந்து கீழ்க்கண்டவாறு பராட்டி வாழ்த்தினார். அப்பாடல்,

          தன்மானக் கவிஞர் தகடூர்த் தமிழ்க்கதிர்

      நன்மை பயத்திடும் நற்கவி தருபவர்

      இவருடைய கவிதைகள் இலக்கிய உலகில்

      தலைமை தாங்கிச் சாதனை புரியும்

      என்பதைக் கூறி இவரைநான் வாழ்த்தி

      மூத்த கவிஞன்நான் பூத்து மகிழ்கிறேன் 

என்று மகிழ்வுடன் பாடினார்.

          1990-ல் பாவேந்தர் பாரதிதாசனார் நூற்றாண்டு நிகழ்வில் அப்போதைய முதல்வர் மாண்புமிகு கவிஞர் மு.கருணாநிதி அவர்கள் இவருக்கு கவிமாமணி என்ற விருதை வழங்கினார். 2000-ல் தமிழ்க்கதிரின் எழில்வானம் என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கிய மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பரம்பரைக்குப் பெருமை சேர்க்கும் கவிஞராகத் திகழ்பவர் கவிமாமணி. தகடூர் தமிழ்க்கதிர் ஆவார், புரட்சிக் கவிஞரின் உணர்வையும், கொள்கையையும் குறிக்கோளாகக் கொண்டு, நற்றமிழ் நடையிலும் பாபுனையும் திறனிலும் வல்லவராய் விளங்கும் கவிஞர் இயற்றியுள்ள பாடல்களைப் படிக்கும்போது, புரட்சிக் கவிஞரின் குரலே கேட்கின்றது என்று பாராட்டியுள்ளார்.

          2010-ல் மழை ஒலி நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய பன்மொழிப் புலவர் மு.ச.சிவம் அவர்கள், தகடூர்த் தமிழ்க் கவிஞர் ஓர் இயற்கைக் கவிஞர், இயல்பாகப் பாடும் ஆற்றல் வாய்ந்தவர், இவருடைய கருத்துக்கள் யாவும் குமுதாயச் சீர்திருத்தத்தை முதன்மையாகக் கொண்டவை என்று மதிப்பீடு செய்துள்ளார்.

          2010ல் மழையொலி கவிதை நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்கள்,

          இன்பத் தமிழை வளர்த்தல் இனியதமிழ்

      துன்பம் வருங்கால் துடித்தெழுதல்-வன்பகை

      சாடல் தகடூர் தமிழக்கதிரான் சான்றோன்

      கூடப் பிறந்த குணம்

என்று பாராட்டியுள்ளார்.

1996இல் உலகத் தமிழியக்கம் என்ற அமைப்பை பன்மொழிப் புலவர் மு.ச. சிவம் அமைத்தார். அப்போது அதில் முதல் உறுப்பினராகவும், பின்னால் அவரால் அமைத்த தமிழ்ப் பாதுகாப்புப்படை என்ற இயக்கத்தில் தளபதி பொறுப்பிலும் தகடூர்த் தமிழ்கதிர் சிறிது காலம் பணியாற்றினார்.

          1994இல் தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் இலக்கிய முழு நிலவு இரவு நிகழ்வாக உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் தலைமையில் நடந்தது. அந்த நிகழ்வில் தகடூர்த் தமிழ்குயில்கள் என்ற தொகுப்பு நூலுக்காக தகடூர்த் தமிழ்க்கதிர் அவர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார்.

          2012இல் சோலைக் குயில்கள் இலக்கிய அமைப்பு சார்பில் சிறந்த நூல் போட்டிகள் நடைபெற்றதில் தகடூர்த் தமிழ்க்கதிர் எழுதிய நூலான மழை ஒலி நூலுக்கு சிறந்த நூல் விருது திரை இசைக் கவிஞர் மு. மேத்தா அவர்கள் கவிஞருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

          திருவள்ளுவர், ஔவையார், பாரதி, பாரதிதாசனார், சுரதா, வாணிதாசன், முடியரசனார் பாடல்களில் ஆய்வும், தோய்வும் உடைய நான் யார் கவிஞன்? என்ற முடியரசனாரின் பாடலுக்கு இலக்கியமாகத் தகடூர்த் தமிழ்க்கதிர் திகழ்கிறார்.

நான் பெற்ற விருதுகள் :

       விருது நாள் வழங்கியவர்
பாவேந்தர் படகுக் கவிஞர் 04.05.1990 உவமைக் கவிஞர் சுரதா
கவிமாமணி 17.07.1990 கலைஞர் மு.கருணாநிதி
திருக்குறள் 1993 முனைவர் கு. மோகனராசு
தண்டமிழ்த் தாரகை 16.10.1994 சாஸ்திரி வெங்கட்ராமன்
கவியருவி 25.02.1996 முக்தா சீனிவாசன் (திரைப்பட இயக்குநர்)
சிகரம் தொட்ட ஆசிரியர் 18.11.2006 முனுசாமி
கல்வி சேவா ரத்னா 16.12.2009 வைத்தியநாதன்
இலக்கியத் தென்றல் 03.04.2011 கவிஞர் த.மாசிலாமணி
கவித்தென்றல் 20.04.2011 மாம்பழம் ஆ.சந்திரசேகர்
மரபுமாமணி 20.07.2011 பாட்டறிஞர் இலக்கியன்
கவிமுகில் 16.10.2011 ஆடிட்டர் என்.ஆர்.கே
செந்தமிழ்ப் பாரதி 18.03.2012 டாக்டர் ச.நரசிம்மன்
இன்பத்தமிழ் இனியர் 29.04.2012 ஆடிட்டர் என.ஆர்.கே
செந்தமிழ்ச் சுடர் 2012 முனைவர் பா.நடராசன்
கவிமுரசு பட்டயம் 15.01.2013 கா.லியாகத் அலிகான்
திருக்குறள் சுடர் 23.02.2013 முனைவர் முகிலை இராச.பாண்டியன்
பாவேந்தர் பாரதிதாசன் கல்விச் செல்வர் 13.10.2013 கலைமாமணி சிலம்பொலி செல்லப்பன்
தமிழ் இலக்கியமாமணி 14.11.2013 இலக்கியச்சுடர் இறைமறைதாசன்
நங்கூரக் கவிஞர் 19.04.2014 கலைமாமணி எஸ்.பி. முத்துராமன்
ஔவையார் 02.10.2014 முனைவர் மு.கலைவேந்தன்
பாவலர் மணி பாராட்டுப் பதக்கம் 07.10.2014 கி. வீரமணி
குறள் உரைச்செம்மல் 25.10.2014 முனைவர் க.ப.அறவாணன்
குறள்மணிச் செல்வர் 2014 மருதாசல அடிகள்
கவிப் போராளி 17.05.2015 முனைவர் வே.த.யோகநாதன்
பாரதி  பணிச்  செல்வர் 11.12.2015 கோ . பெரியண்ணன்
கவித் தென்றல் 2015 நா.முத்துலிங்கம் (திரைப்படப் பாடலாசிரியர்)

தமிழில் வெளிவந்த 40க்கும் மேற்பட்ட இதழ்களில் என் ஏராளமான கவிதைகள் வெளிவந்துள்ளன.  An Anthology of modern Tamil poetry (2013) நூலில் ஆறு பாடல்களும் Glimpses of modern Tamil poetry (2015) நூலில் ஏழு பாடல்களும் கவிக்குயில் ஆனைவாரி ஆனந்தன் அவர்களால் என்னுடைய பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.