தங்களின் ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பீடு செய்யப் பெறுவதால், தங்களின் ஆய்வுத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். இதில் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- ஆக்கம் தங்களுடையதாக மட்டுமே அமைதல் வேண்டும்.
- தங்களின் கட்டுரையின் முதல் பக்கத்தில் முழு முகவரியும் இடம்பெறல் வேண்டும்.
- கருத்துத் திருட்டு எனப் பின்னர் அறிந்தால், வலைதளப் பக்கத்திலிருந்து உடனே நீக்கப்பெறும்.
- கட்டுரைகள் ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode font) தட்டச்சு செய்து அனுப்பப் பெறுதல் வேண்டும்.
- தங்களின் ஆய்வுக் கருத்துக்கள் தரமுடையதாகவும், புதிய நோக்குடனும் அமையப் பெறுதல் வேண்டும்.
- பழம்பாடலுக்கு விளக்கம் அளித்தல் போன்று இருத்தல் கூடாது.
- சொல்லாய்வி (Word) கோப்பும், சொல்லாய்விக் (PDF) கோப்பும் அனுப்பப் பெறுதல் வேண்டும்.
- மேற்கோள் தனித்துக் காட்டப்பெறுதல் வேண்டும்.
- தங்களின் கருத்துப் போன்று காட்டுதல் கூடாது.
- [email protected] எனும் மின்னஞ்சலுக்குத் தங்களின் கட்டுரைகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.
- நாட்டுடைமை ஆக்கப்பெற்ற மூத்த தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூலின் தேர்ந்தெடுத்த சில பகுதிகள், இதழின் ஒவ்வொரு பதிப்பிலும் வெளியிடப் பெறும்.
- ஒவ்வொரு இதழ்ப் பதிப்பிலும் நூல்மதிப்புரை எனும் பகுதி இடம்பெறும். நூல்மதிப்புரைக்கு நூலாசிரியர் நூலின் இரண்டுபடிகளை அஞ்சல்வழி அனுப்புதல் வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரிக்குத் தொடர்புக்கு எனும் பகுதியை நோக்குக.
- கட்டுரைகள் ஒவ்வொரு காலாண்டின் முதல் வாரத்தில் வெளியிடப்பெறும்.
- கட்டுரைகளுடன் தங்களின் ஒளிப்படத்தையும் அனுப்புதல் வேண்டும்.