முனைவர் சி.சாவித்ரி/Dr.Ch.Savithri[1]

Abstract: It is the duty of the best teacher to know what students are up to before they teach moral literature in the classroom and to adapt their teaching methods accordingly. Thus, it is best for students studying Masters of Tamil Literature to teach Indian literature. Thus, when we approach comparative methodology, students are introduced to a language they do not know, and the idea of ​​additional linguistics is reinvented. Moreover, it is necessary to prepare them for further education by teaching charity literature in a comparative sense.

Keywords: Comparative Teaching Approaches (Thirukkural – Vamana Satakam), Indian literature, classroom, teaching methods, Tamil Literature, Ch.Savithri, ஒப்பிலக்கியம் கற்பித்தல் அணுகுமுறைகள், திருக்குறள், வேமன சதகம், பழமரபுக் கதைகள், கற்பிக்கும், அற இலக்கியங்கள், இந்திய இலக்கியங்கள், மாணவர்கள், கற்பித்தல், சி.சாவித்ரி.

அற இலக்கியங்களை வகுப்பறையில் கற்பிக்கும் முன்பாகக் கற்கின்ற மாணவர்கள் எந்நிலையுடையவர்கள் என்பதை அறிந்து, அவர்களது தேவைக்கேற்பக் கற்பித்தல் முறைகளைக் கையாளுவது சிறந்த ஆசிரியரின் கடமையாகும். அவ்வகையில், முதுகலைத் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு இந்திய இலக்கியங்களைக் கற்பிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஒப்பீட்டு முறையைக் கையாளுவது சிறந்ததாகும் எனலாம். இவ்வாறு ஒப்பீட்டு முறையை அணுகும்போது மாணவர்கள் அறிந்த மொழியில் தொடங்கி அறியாத மொழிக்கு அவர்களைக் கொண்டு செல்வதின் வாயிலாகக் கூடுதல் மொழியறிவு பற்றிய சிந்தனை புதிதாகப் புகுத்தப்படும் வாய்ப்பு அமைகிறது. மேலும், ஒப்பீட்டு நோக்கில் அற இலக்கியங்களைக் கற்பிப்பதின் வாயிலாக அவர்களை அடுத்தகட்டக் கல்விநிலைக்கு தயார்படுத்துவதும் தேவையான ஒன்றாகிறது.

மாணவர்களுக்குக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அற இலக்கியங்களைக் கற்பிப்பதற்கு முன் அவர்களுக்கு இந்திய அற இலக்கியங்களைப் பற்றியும், அவை தோன்றுவதற்கான அவசியத்தைப் பற்றியும் அறிமுகப்படுத்தி, பின்னர்த் தேர்ந்தெடுக்கப்பட்ட அற இலக்கியங்களை ஒப்பிட்டுக் கீழ்க்காணும் வகையில் கற்பித்து மதிப்பீடு செய்யலாம்.

தமிழில் திருக்குறள், தெலுங்கில் வேமன சதகம் கற்பிப்பதற்கு முன்பாக மாணவர்களுக்கு முதலில் இந்திய அற இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் அவர்களுக்குத் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னட மொழிகளின் அற இலக்கியங்களை அறிமுகப்படுத்திய பின்னர், கற்பிக்க இருக்கும் நூல்களுக்குச் செல்லலாம். எடுத்துக்கொண்ட இரு நூல்களின் ஆசிரியர்கள், அவர்கள் வாழ்ந்த காலம், அற இலக்கியம் தோன்றுவதற்கான காரணம், யாருக்காக எழுதப்பட்டது என்பன போன்ற தகவல்களை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன்பின்பு அட்டவணை மூலமாக இரு நூல்களின் புறக் கட்டமைப்பு மற்றும் அகக் கட்டமைப்பைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எடுத்துக்காட்டவேண்டும்.

திருக்குறள்
 

அறம்

 

பொருள்

 

இன்பம்

     பகுதி பா

யிரம்

இல்

லறம்

 துற

வறம்

ஊழி

யல்

அரசி

யல்

அமைச்

சியல்

அறணி

யல்

கூழி

யல்

படை

யியல்

நட்

பியல்

குடி

யியல்

கள

வியல்

கற்

பியல்

அதிகாரங்கள் 1-4 5-24 25-37   38 39-63 64-74

 

  75 76 77-78 79-95 96-108 109-

115

116-

133

குறள்

 

40

 

200 130

 

 10  250

 

 110   10  10   20 170 130  70  180

 

 1. அரசியல் =           250
 2. இல்லறம் = 200
 3. கற்பியல் = 180
 4. நட்பியல் =        170
 5. குடியியல் = 130
 6. துறவறம் =        130
 7. அமைச்சியல் = 110
 8. களவியல் =   70
 9. பாயிரம் =          40
 10. படையியல் =   20
 11. ஊழியல் =   10
 12. அரணியல் =   10
 13. கூழியல் =   10

——-

மொத்தம்               =        1330

வடிவம் :

 • ஈரடி – குறட்பா
 • முதலடியில் நான்கு சீர்கள், இரண்டாமடியில் மூன்று சீர்கள்
 • ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துக் குறள்கள்

மேற்கூறிய அட்டவணையின் வாயிலாகப் புறக் கட்டமைப்பைக் கற்பிக்கும்போது மாணவர்கள் தாமாகவே கீழ்க்கண்ட செய்திகளைச் சிந்தித்து விடுவார்கள்.

 • திருவள்ளுவர் எந்த அறத்தை அதிகம் வலியுறுத்திக் கூறுகிறார் என்பதையும்
 • அவர் வாழ்ந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் எந்த நிகழ்வுக்கு அறம் அதிகம் தேவைப்பட்டது என்பதனையும்
 • மேற்காணும் கருத்துக்கணிப்புப் பட்டியல் ஆய்வு மாணவர்கள் ஆய்வுத் தலைப்புக்களை தெரிவு செய்யவும், கருதுகோள்கள் அமைத்துக்கொள்ளவும் பயன்படுகிறது.
 • மேலே கூறிய கருத்துக்கணிப்பை ஆதாரமாக்கிக் கொண்டு ‘திருக்குறளில் இல்லறம்’ ‘திருக்குறள் காட்டும் அரசியல் சிந்தனைகள்’ இது போன்ற பல ஆய்வுத் தலைப்புகளை அமைத்துக் கொள்ளலாம்.

வேமன சதகம் – புறக் கட்டமைப்பு

 1. சதகம் என்றால் நூறு. வேமன சதகம் நூறு பாக்களைக் கொண்டது.
 2. நான்கு அடிகளை உடையது.
 3. ‘ஆட்டவெலதி’ என்ற பா வகையால் அமைக்கப்பட்டது.
 4. அனைத்துப் பாக்களிலும் நான்காவது அடி ஒன்றாகவே இருக்கும். இதற்கு ‘மகுட்டம்’ என்று பெயர்.
 5. இதில் பால் பகுப்போ, அதிகாரப் பகுப்போ இல்லை.
 6. பாடல்களில் சொல்லப்பட்ட கருத்தினை வைத்து உரையாசிரியர்களால் பகுக்கப் பட்டன. அதனை ஆதாரமாகக் கொண்டு அட்டவனை அமைக்கப்பட்டுள்ளது.
எண் தலைப்பு தமிழில் பாக்களின் எண்கள் மொத்தம்
1 mancivastuvu நல்ல பொருள்     1-2      2
2 cittasuddi மனத்தூய்மை     3-4      2
3 sajjanuDu நல்மக்கள்     5-6      2
4 alpuDu-sajjanuDu அற்பன் – சான்றோன்     7-9      3
5 piRikivaaDu அஞ்சுபவன்     10      1
6 guNamu பண்பு     11      1
7 guNavantuDu-guNahiinuDu பண்பாலன் – பண்பற்றவன்     12-15      4
8 kutsituDu கெடுப்பவன்     16-17      2
9 hiinuDu நீச்சன் (கல்வி)     18-19      2
10 alpuDu தாழ்த்தப்பட்டவன்     20-23      4
11 khaluDu மூடன்     24-28      5
12 niluva tagani cooTu போகா இடம்     29      1
13 taamasamu சினம்     30      1
14 Koopamu கோபம்     31      1
15 sthaanabalimi இடவலிமை     32-34     3
16 kalimi செல்வம்     35-50     16
16 prapamcam உலகம்     51—100     50
                                                                         மொத்தம்              100
 • மாணவர்கள் ஆய்வுத் தலைப்பைத் தெரிவு செய்யலாம்.
 • கருதுகோள் அமைத்துக் கொள்ளலாம்.
 • திருவள்ளுவர் மற்றும் வேமன்ன வாழ்ந்த சமூகச் சூழலைப் புரிந்து கொள்ளலாம்.
 • இருவருக்குமான ஒற்றுமை வேற்றுமைகளையும் கண்டறியலாம்.

அகக் கட்டமைப்பு :

அகக் கட்டமைப்பு பொருள் அடிப்படையில் அமைந்திருப்பது.

திருவள்ளுவர் :

 • திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பாக்களை உள்ளடக்கியது.
 • அவற்றில் முதல் ஏழு குறட்பாக்கள் கருத்துக்களை நயமாகவும், இதமாகவும் கூறும் நிலையிலும்
 • ஒன்பதாவது, பத்தாவது குறள்கள் அக்கருத்துக்களைச் சற்றுக் கடுமையாகவும், வற்புறுத்தும் நிலையிலும் அமைந்துள்ளன (க.த.திருநாவுக்கரசு, திருக்குறள் நீதி இலக்கியம்,ப.110)
 • பத்துக் குறட்பாக்களும் ஐந்து வகையான கருத்தியல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. சான்றாக, ‘பேதைமை’(84) என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் பின்பற்றிய உத்திகள் –
 • முதல் இரண்டு குறட்பாக்களில் பேதைமைக்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
 • மூன்று, நான்காம் குறட்பாக்களில் பேதைமையின் சிறப்பு வகைகள் சுட்டப்பட்டுள்ளது.
 • ஐந்து, ஆறா குறட்பாக்களில் பயன்கள் கூறப்பட்டுள்ளது.
 • ஏழு, எட்டாம் குறட்பாக்களில் அறிவற்றவன் பெற்ற செல்வத்தின் பயன்களை விளக்குகிறது.
 • ஒன்பதாம் குறட்பா பேதைமைக் குணமுடையாரின் தீமையைச் சுட்டுகிறது.
 • பத்தாம் குறட்பாவில் முடிவு கூறப்பட்டுள்ளது.
 • திருவள்ளுவர் பல பாக்களில் உவமைகளைப் பயண்படுத்தி ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
 • பல பாக்களில் மறைமுகமாகவும், சில பாக்களில் நேரடியாகவும் தம் சிந்தனையை மக்களுக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

வேமன :

 • வேமன, நான்கு அடிகளைக் கொண்ட சதகத்தில் பல பாக்களில் முதல் இரண்டு அடியில் செய்திகளைச் சொல்லி, மூன்றாவது அடியில் உவமைகளையும், ஒப்புமைகளையும் கையான்டுள்ளார்.
 • சில பாக்களில் செய்திகளைக் கூறி, அதற்கான காரணத்தையும் எடுத்துக்கூறியுள்ளார்.
 • சில பாக்களில் முதல் இரண்டு அடியில் அஃறிணைப் பொருள்களைக் கூறி, மூன்றாம் அடியில் அவற்றின் பண்புகளை மானிட வாழ்வுக்கு ஒப்புமைப்படுத்திக் காட்டியுள்ளார்.

சொல் – பொருள் – இலக்கணம் கற்பித்தல்

சொற்கள் கற்பிக்கும்போது அதன் பொருளையும் சேர்த்துக் கற்பிப்பதும், அச்சொற்களுக்கான இலக்கணத்தையும், இலக்கணக் குற்ப்புகளை விளக்கிக் கூறுவதினால் மாணவர்கள் எளிதில் புரிந்துக் கொள்வது மட்டுமல்லாமல் நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியும். அறநூல்களில் உள்ள சொற்களைக் கற்பிக்கும்போது அதில் உள்ள சொற்களை எளிதாகக் கற்பிக்க ஆசிரியர்கள் கீழ்க்கண்ட அட்டவனை வாயிலாகக் கற்பிப்பது எளிமையானதாக இருக்கும்.

சான்றாக,

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற (495)

எனும் குறட்பாவினை உள்ள சொற்களைக் கற்பிக்கும்போது குறளமைப்பிலேயே பொருள் கூறாமல் அக்குறளில் உள்ள சொற்களை அசை பிரித்து நெடுக்க வரிசைப்படுத்திப் பொருளையும் சொல்லுக்கான இலக்கணத்தையும் எளிமையாகச் சொல்லி, கீழ்க்காணும் வகையில் புரிய வைக்கலாம்.

சொல் பொருள் இலக்கணம்
நெடுமை

புனல்

உள்

வெல்லும்

முதலை

அடும்புனல்

இள்

நீங்கின்

அது

பிற

 

ஆழமான

நீர்ப்பகுதி

உள்ளே

வெற்றி பெறும்

நீர்வாழ் விலங்கு

மேடான பகுதி

மீது

பிரிந்து

அதன்

உடைமைப் பொருள்

மற்றவை

பண்புப் பெயர்

பொதுப் பெயர்

வேற்றுமை உருபு

உம்மைத்தொகை

பெயர்ச்சொல்

இடப்பெயர்

இடப்பெயர்

வினைச்சொல்

சுட்டுப்பெயர்

2ஆம் வேற்றுமை உருபு

பதிலிடு பெயர்

இலக்கணம் கற்பிப்பதில் மற்றொரு முறை :

சொற்களைத் தனியாகப் பிரித்துக்காட்டி, அவற்றுக்கான விளக்கங்களைக் கீழ்க்கண்ட வரைபடம் மூலம்  கற்பிக்கலாம்.

சொல்                        பொருள்

நெடும்புனலுள்         ஆழமான நீர்ப் பகுதியுள்

          இலக்கணம்

 

நெடும்                  +        புனல்                    +        உள்

நெடிய                          பெயர்ச் சொல்           வேற்றுமை உருபு

(உள் ‘இல்’ ஆக மாறியது) அடை

சொல் ஒலிபெயர்ப்பு பொருள் இலக்கணம்
నీళ్ళు niLLu நீர் பொதுப் பெயர்
లోన loona உள் வேற்றுமை உருபு
మొసలి mosali முதலை பெயர்ச்சொல்
నిగిడి nigiDi மறைந்திருந்து வினை
ఏనుగు eenugu யானையை பெயர்ச்சொல்
తీయు tiiyu இழுக்கும் வினைச்சொல்
బయట bayaTa வெளியில் இடப்பெயர்
కుక్క kukka நாய் அஃ றிணைப் பெயர்ச்சொல்
చేత ceeta ஆல் மூன்றாம் வேற்றுமை உருபு
భంగపడును bhangapaDunu சேதமடையும் வினைச்சொல்
స్థానం sthaanam இடம் இடப்பெயர்
బలిమి balimi வலிமை அடைமொழி
ee தான் உறுதிப் பொருளுக்கான உருபு
కాని kaani தவிர தொடர்புச்சொல்
తన tana தன் பதிலிடு பெயர்
బలిమి balimi வலிமை அடைமொழி
కాదయా kaadayaa அல்லவே எதிர்மரைச்சொல்

மேற்கூறிய அட்டவணை வாயிலாகச் சொற்களுக்குப் பொருள் கூறுவது மட்டுமல்லாமல்,  இலக்கணம் தொடர்பான செய்திகளையும் மாணவர்கள் அறிய முடிகின்றது.  திருவள்ளுவரின் குறட்பாவோடு வேமன்ன பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இருவரும் இலக்கண, இலக்கிய, உவமைகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதையும், எந்த வகை இலக்கணக் கூறுகளை அதிகம் பயண்படுத்தியுள்ளார் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது எனலாம். இதுபோலவே மற்றவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

சொற்களுக்கு நேரடிப் பொருளைக் கூறியபிறகு அச்சொற்களை மீண்டும் நான்கு வகையாகப் பிரித்துப் பொருளைக் கற்பிக்கலாம்.

 1. பாவில் உள்ள சொல் மீண்டும் மீண்டும் வந்து பல பொருள்களில் வரும் நிலை
 2. பாவில் உள்ள சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளில் வரும் நிலை
 3. பாவில் உள்ள சொல் அந்நியப் பொருள்களை உணர்த்தும் நிலை
 4. பாவில் உள்ள சொல்லுக்கு நிகரான பல சொற்களை அறிமுகப்படுத்துதல்
 5. பாவில் உள்ள சொல் மீண்டும் மீண்டும் வந்து பல பொருள்களில் வரும் நிலை

ஒரு குறளில் உள்ள சொல் அதே குறளில் பல பொருள் தரும் நிலையில் பல முறைப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் குறளில் மட்டுமே பார்க்கமுடிகிறது. ஒரு செய்யுளில் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருமாயின் அது சொற்பொருள் பின்வரு நிலைஅணி என்ற அணி தொடர்பான கூடுதல் செய்தியினையும் மாணவர்களுக்கு இங்குக் கற்பிக்கலாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை               (குறள் : 12)

உண்பவர்

துப்பு                உணவு

மழை

மேற்கூறிய குறளில் ‘துப்பு’ என்ற சொல் விகுதிகளைச் சேர்த்து ஐந்து முறை வந்துள்ளது.  ஆனால் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பொருளை உணர்த்துவதாக உள்ளது. இதுபோலவே மற்ற குறள்களிலும் பார்க்கலாம்.

வேமன சதகத்தில் இந்த மாதிரியான சொல் பயன்பாடு இல்லை.

 1. பாவில் உள்ள சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளில் வரும் நிலை :

திருக்குறள் மற்றும் வேமன சதகத்திலும் ஒரே பாவில் மீண்டும் மீண்டும் வரும் சொற்கள் அனைத்து இடங்களிலும் ஒரே பொருளை தருகிறது. இதைச் சொற்பொருள் நிலை அணி எனபர்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை     (குறள் : 411)

இந்தக் குறளில் ‘செல்வம்’ என்ற சொல் ‘சொத்து’ என்கிற ஒரே பொருளில் வந்துள்ளது. இது போன்று பல பாக்கள் குறளில் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.

koopamunaku ghanata konjamaipoovunu

koopamunaku migula gooDu galugu

koopa maNaceneeni koorika liiDeeru

vis’vadhaabhiraama vinuraveemaa! – வேமன சதகம்

இதில் ‘கோபம்’ என்ற சொல் ‘சினம்’ என்ற ஒரே பொருளில் மூன்று முறை பயன்படுத்தப் பட்டுள்ளது.

 1. பாவில் உள்ள சொல் அந்நியப் பொருள்களை உணர்த்தும் நிலை :

பாக்களில் வரும் சொற்கள் பாக்களுக்குத் தொடர்பில்லாத அந்நியப் பொருள்களைப் பற்றியும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

நெடும்புனலுள் வெல்லும் முதல் அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற     (குறள் : 495)

ஆறு

குதலை

புனல்            நீர்

குளிர்ச்சி

கருவி

 

ஒழித்தல்

வெற்றி அடைதல்       வெல்லும்

ஒத்தல்

 

பிரிதல்

நீக்கம்

நீக்கல்                   நீட்டல்

நீளல்

மாறுபாடு

மாற்றம்

 

நீக்கல்

நீக்கு                     பிளப்பு

மீதி

விலங்கு

வேமன :

Vaana kuriyakunna caccunu kshaamambu

Vaana kuriceneeni varada baaru

Varada karuvu reNdu varusoloo neruguDi

                பேதரிகம் (வருமை)

க்ஷாமமு       கருவு  (தும்பம்)

கஷ்டம் (துன்பம்)

 1. பாவில் உள்ள ஒரு சொல்லுக்கு நிகரான பல சொற்களைக் கற்பித்தல் :

மாணவர்களுக்கு பல சொற்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் கற்பிக்கப் படும் பாடத்தில் உள்ள சொற்களுக்கு நிகரான சொற்களையும் கற்பிக்க வேண்டும். அந்த வகையில் இரு மொழியில் உள்ள சொற்களுக்கு நிகரான சொற்களை இவ்வாறாகக் கற்பிக்கலாம்.

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்

எண்ணப் படவேண்டா தார்             (குறள்.922)

தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் நீர்

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் நீர்

கள்                         மதுபானம்

கள்ளச் சாராயம்

உண்டாக்கு   (புறப்பொருள் வெண்பாமாலை)

Kulamu galuguvaaDu gootrambugalavaadu

Vidyaceeta virraviiguvaaDu

pasiDi galuguvaani baanisa koDukulu

vis’vadhaabhiraama vinuraveemaa! – வேமன சதகம்

கனகம்

பஸிடி                பங்காரம்

(தங்கம்)               புத்தடி

தனம்

மேலிமி

கருத்தியல் ஒற்றுமை

இரு மொழிக் கவிஞர்களும் வாழ்ந்த சமுதாயத்திற்கேற்ப அறக் கருத்துக்களைச் சொல்லியிருந்தாலும் அவர்களுக்கிடையே பல நிலைகளில் கருத்தியல் சிந்தனைகளில் ஒற்றுமை காணப்படுவதற்குப் பல பாடல்கள் சான்றாக அமைந்துள்ளன. அவற்றில் சில –

தலைப்பு திருக்குறள் வேமன்ன சதகம்
இடமறிதல் 1.  நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற     (50/495)

2.    2.  கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா

வேலாள் முகத்த களிறு   (50/500)

1.   niiLLaloona mosali nigiDi yeenugu diiyu

bayaTa kukka ceeta bangapaDunu

sthaana balimigaani tana balimi     kaadayaa

 

2.  niiLLaloona miinu nigiDi duuram

bayaTa muuraDaina paaraleedu

staana balimigaani tana balimi kaadayaa

வாழ்க்கைத்

துணை நலம்

1.   சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை   (6/57)

2.   புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை     (6/59)

1.  aapadainaveLa arasi bandhuvu juuDa

bhayamuveeLa juuDa baNTutanamu

peedaveeLa juuDu peNDlaamu guNamu

 

2.  aalimaaTalu vini yannadammulabaas

veerepoovuvaaDu verrivaaDu

kukkatooka baTTi goodaavariidunaa?

கல்வி 1.   அரங்கின்றி வட்டாடி யற்றே நிரப்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் (41/401)

 

2.    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும்

கற்றார்

கடையரே கல்லா தவர்    (40/395)

1.  hiinuDu enni vidyalanu neercinagaani

ghanuDugaaDu hiinajanuDe kaani

parimaLamulu mooyu kharamu gajamaunee?

2.  Vidyaleeni vaaDu vidyaadhikula centa

 uNdinanta paNDituDu kaaDu

 kolani hamsalkaDa kokkera lunnaTlu

நன்றிஇல்

செல்வம்

 

1.     அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம்

மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று   (1007)

 

2.    நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று     (1008)

1.   dhanamu  kuuDabeTTi dharmambu ceeyaka

taanu tinaka lessa daacu gaaka

teeneTiiga kuurci teruvari kiyyadaa

 

 

 

மேற்கூறிய கருத்து ஒற்றுமையில் ஒன்றை மட்டும் விளக்கிக் கூறலாம்.

உலகில் பலருக்கு அதிக செல்வங்கள் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவ்வாறாகச் சேர்த்து வைத்த செல்வங்களை ஒரு சிலரே அறவழிச்சென்று பல நல்ல காரியங்களுக்குச் செலவு செய்பவராகத் திகழ்வர். மாறாக, செல்வங்கள் கோடியிருந்தும் பிறருக்கு உதவாமல் தனது தேவைகளுக்குக்கூடப் பயன்படுத்தாமல் வருபவரை ‘கஞ்சன்’ எனக் கூறுகிறோம். இப்படி யாருக்கும் எவ்விதமான பொருள் உதவியும் செய்யாமல் இருக்கும் கஞ்சனைப் பற்றி இரு கவிஞர்களும் தம் நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். சான்றாக, திருக்குறளில் வள்ளுவர் கஞ்சனைப் பற்றிப் பத்துக் குறட்பாக்களில் கூறியதை வேமன நான்கு பாடல்களில் கூறியுள்ளார். கஞ்சன் சேர்த்து வைத்த பொருளுக்குப் பல உவமைகளைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களிலும், வேமன ஒரு பாடலிலும் கூறியுள்ளனர். அவற்றை மட்டும் சான்று காட்டி விளக்குகலாம்.

திருக்குறள் : நன்றிஇல் செல்வம் (101)

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று (1007)

 

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று (1008)

 வேமன சதகம்danamu kuuDabeTTi darmambuceeyaka

Taanutinak lessa daacukonaka                   

teeneTiika kuurci teruvari kiyyadaa

பொருள் :

தேனீ தான் சேர்த்து வைத்த தேனை வழிப்போக்கனுக்குத் தாரைவார்த்தது போல, கஞ்சன் தான் சேர்த்து வைத்த செல்வத்தைத்  தனக்கும் பயன்படுத்தாமல், மற்றவருக்கும் கொடுக்காமல் இறந்து போகிறான்.

இதில் கஞ்சனைப் பற்றிய கருத்து இரு கவிஞர்களையும் ஒத்த சிந்தனையுள்ளவராகக் காட்டுகிறது.

இருப்பினும், இரு கவிஞர்களும் உவமைகளைக் கூறுவதில் வேறுபடுகின்றனர்.

                                                   உவமைப் பொருள்

 

 

திருவள்ளுவர்                                                        வேமன

 1. தனிமையில் வாழும் பெண்ணின் அழகு    தேன்கூட்டில்  தேன்
 2. நச்சுமரப் பழம்

மேற்கூறிய உவமைப்பொருள் எழுப்புவதற்குக் காரணம் யாது எனும் வினாவினை மாணவர்களிடம் கேட்டு அவர்களுக்குச் சிந்திக்கும் எண்ணத்தைத் தூண்டச் செய்யலாம். சான்றாக, கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் முதலில் ஓரிரு காரணங்களைக் கூறி, பின் மாணவர்களிடம் பதிலை வரவழைக்கலாம்.

 • திருவள்ளுவருக்குத் திருமணமாகி வாசுகி என்ற மனைவி இருந்தாள் என்பதற்குச் சான்றுகள் கிட்டுகின்றன.  அவ்வாறு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும்போது பல உறவுமுறைகள் சூழ்ந்து காணப்பட்டிருப்பர். அச்சூழலிலேதோ ஒரு பெண் திருமணம் செய்யாமல் தனிமையான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவ்வாரு வாழ்ந்து கொண்டிருந்த பெண்ணை வள்ளுவர் கண்டுகொண்டு, அவளின் தனிமையான வாழ்க்கையினை ‘கஞ்சன்’ வாழ்க்கைக்கு ஒப்பிட்டிருக்கலாம்.
 • இரண்டாவது குறளில் ஊர் நடுவில் பழுத்த நச்சுமரம் என்று பயன்படுத்தியுள்ளார் திருவள்ளுவர். இதற்குக் காரணம் ஏற்கனவே சொன்னது போல வள்ளுவர் குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர். பல குடும்பங்கள் சேர்ந்தால் ஊராகும். அந்த ஊருக்கு நடுவில் நல்ல நிகழ்வுகள் இருந்தால் அது அந்த ஊர் மக்களுக்கு நல்ல விதத்தில் பயண்படும். கெட்ட நிகழ்வுகள் இருந்தால் யாருக்கும் பயன்படாது. அதனால்தான் திருவள்ளுவர் நச்சு மரத்தை ஊரின் நடுவில் கொண்டு வந்து வைத்துள்ளார்.
 • மற்றொரு காரணம் நான்கு திணைகளுள் மருதத்திணைதான் மக்கள் விரும்பி வாழும் இடமாகும். மக்கள் வாழ்கின்ற இடத்தை ஊர் என்பார். அறம் என்பது மக்களுக்குச் சொல்லப்படுகின்ற ஒன்று என்பதால் வள்ளுவர் ஊர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் எனலாம். அதுமட்டுமல்ல, நச்சுமரம் ஊரில் எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதனையும் உனர்ந்து இருப்பதினால் ஊர் நடுவில் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதாவது ஊருக்கு நுழைவாயில் இருந்தாலும், ஊர்க் கோடியில் இருந்தாலும் அந்தப் பொருள் ஊரில் உள்ள அனைவராலும் அறிய முடியாது. ஊருக்கு நடுவில் உள்ளதை ஊர் முழுக்க அறிய முடியும். எல்லாரும் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் நச்சுமரத்தை ஊர் நடுவில் வைத்திருக்கிறார்.
 • வேமன்ன ஒருயோகி. முற்றும் துறந்த முனிவர். இவர் காடுகள், மலைகள் என்று சுற்றித் திரிந்தவர். காட்டுவழியாகப் போகின்றபோது வழிப்போக்கர்களால் தேன் எடுப்பதைப் பார்த்து, தேனீக்களால் உருவான தேனானது அத்தேனீக்களுக்குப் பயன்படாமல் மற்றவர்ககளுக்குப் போகிறதே என்று வேமன நினைத்திருக்கலாம். அந்த நினைப்பை வைத்து இந்த உவமையைக் கையாண்டு இருக்கலாம்.
 • வேமன காடு கழனிகளில் போகும்போது பல நிகழ்வுகள் அவர் பார்த்திருக்கக்கூடும்.. காட்டில் பல வண்ணமலர்கள் பூத்து மடிவதைப் பார்த்திருக்கலாம். பௌர்ணமி நிலவு காய்ந்து யாருக்கும் பயன்படாமல் போவதையும் உணர்ந்திருக்கலாம். இவற்றையெல்லாம் உவமைகளுக்குப் பயன்படுத்தாமல் ஏன் தேன்கூட்டில் உள்ள தேனை உவமையாகப் பயன்படுத்தினார் என்ற கேள்வி எழுகிறது.
 • காட்டில் காய்கிற நிலவு தேயும் மீண்டும் வளரும், காட்டில் பூத்த மலர்கள் உதிர்ந்தாலும் மீண்டும் காலம் வரும்போது பூக்கும், ஆனால் ஒரு முறை கூட்டில் சேர்க்கப்பட்ட தேன் பறிபோய்விட்டால் அந்தக் கூட்டில் எக்காலத்திற்கும் மீண்டும் தேன் உருவாகாது.
 • கஞ்சன் செல்வத்தைச் சிறுகச்சிறுகச் சேர்த்து வைக்கிறான். அப்படிச் சேர்த்துவைத்த செல்வமானது மற்றவர்களால் களவாடப்படும்போது அந்தச் செல்வம் திரும்பக் கிடைக்காமலே போகிறது.

மதிப்பீடு :

 • இருவரும் கருத்தில் ஒத்துப் போனாலும் சொல் பயன்பாட்டில் வேறுபட்டு நிற்கின்றனர்.
 • உவமைகள் பயன்பாட்டிலும் வேறுபட்டு நிற்கின்றனர். அதற்குக் காரணம் வள்ளுவர் குடும்பச் சூழலில் வாழ்ந்தவர். வேமன துறவியாக இருந்து ஊர்ஊராகச் சுற்றித் திரிந்தவர்.
 • அதனால் வேமன்ன பல மொழிகள் அறிந்தவர் என்பதற்கு அவருடைய ஒரு பாட்டு சான்றாக இருக்கிறது –

kuNDa kumbha manna koNDa parvatamanna

uppu lavaNa manna voNTi gaadee?

Bhaasha liTTe veeru paratattva mokkaTee

viswathaabhiraama vinura veemaa!

[பானையைக் கலசம் என்று சொன்னாலும், மலையைப் பர்வதம் என்று சொன்னாலும்,           உப்பை லவணம் என்று சொன்னாலும் ஒன்று தானே? மொழிகளும் இவ்வாறே           வேறுபடுகின்றன, ஆனால் அவற்றில் சொல்லப்படுகின்ற பரமனின் தத்துவம் ஒன்றுதான்].

 • திருவள்ளுவர் சொன்ன உவமைகள் வாயிலாகக் கஞ்சனின் செல்வம் யாருக்கும் பயன்படாது என்று கூறியுள்ளார். எந்த ஒரு பொருளும் தனக்குப் பயன்படாவிட்டாலும் யாரோ ஒருவருக்கோ, அல்லது ஏதோ ஒன்றுக்கோ நிச்சயம் பயன்படும். அந்தவகையில் வேமன கூறிய உவமைப்பொருளான தேன் தேனீக்களுக்குப் பயன்படாவிட்டாலும் அது யாரோ ஒருவருக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. அதுபோலத்தான் கஞ்சனின் செல்வமும் அவனுக்குப் பயன்படாமல் போனாலும் அரசுக்கோ அல்லது, மற்றவர்களுக்கோ அது பயன்படுகிறது.
 • இதுபோல, பல கருத்துக்கள் ஒத்துப் போனாலும் பல பாடல்களில் சொல்லாட்சியில், பொருள்விளக்க நிலைகளில் வேறுபட்டுத்தான் இருக்கின்றன.

 துணை நின்றவை

 • சிவசங்கரன் வ., 2014(ஆ.ப.), திருக்குறள் தெளிபொருள், பொதிகை வெளியீடு, சென்னை.
 • திருமலை. ம., 2011, ஒப்பிலக்கியம், செல்லப்பா பதிப்பகம், மதுரை.
 • செல்வகணபதி சண்முக., 2014(மூ.ப.), ஒப்பிலக்கிய நோக்கில் தமிழிலக்கியம், ராஜா பதிப்பகம், திருச்சி.
 • …., 2014, ஒப்பிலக்கிய வரம்பும் செயற்பாடும், ராஜா பதிப்பகம், திருச்சி.
 • வேங்கட சேஷகவி. அனுமுல., 1983, வேமன சதகமு உறை, பாலசரஸ்வதி புக் டிப்போ, சென்னை.
 • சாஸ்திரி த்வா.நா., 2001, தெலுகு சாகித்ய சரித்ர, விசாலாந்திர பதிப்பகம், ஹைதராபாத்.

…………………………………………………….

Date of submission: 2019-05-19

Date of acceptance: 2019-07-20

Date of Publication: 2019-08-05

Corresponding author’s

Name: முனைவர் சி.சாவித்ரி

Email: [email protected]

…………………………………………………………..

[1] இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – தமிழ்நாடு, [email protected]