பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று ‘புத்தகம்’ தமிழ்ச் சமுகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின்வழி அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் உ.வே.சாமிநாதையர் (ப.சரவணன், சுவாமிநாதம், 2015). இவரைப்போன்றே ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் போன்ற சிலர் ஏட்டுச்சுவடிகளில் தவழ்ந்த பழந்தமிழ் நூல்களைக் காகிதப்பிரதிக்கு அரியனை ஏற்றி  உயிர்கொடுத்து ஆவணப்படுத்தினர்.

அவ்வாறு ஆவணப்படுத்திய  பழந்தமிழ் நூல்கள் இன்று மீண்டும் விளிம்புநிலையில் உயிருக்குப் போராடுகின்றன. இவ்வாறு விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பழந்தமிழ் நூல்களைத் தேடிக்கொணா;ந்து சாகாவரம் பெற்ற கணினியில் பதிவேற்றம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால்தான் இனிவரும் தலைமுறையினர் தமழ்மொழியின் சிறப்புப் பற்றியும் தமிழின் தொன்மை பற்றியும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

அவ்வாறான நூல்களின் முகப்பு அட்டைகள் கீழே அடைவுபடுத்திக் கொடுக்கப்பெற்றுள்ளது. இம்முகப்பு அட்டைகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மையநூலகம், கோவிலூர் மடாலய நூலகம், மதுரைத் தமிழ்ச்சங்க நூலகம், மதுரை சாந்தி முருகேசன் தனிநபர் நூலகம், பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி சிதம்ர அடிகள் நூலகம் முதலிய பல்வேறு நூலகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. (அனைத்து நூலகத்தாருக்கும்,   நூலகருக்கும் நன்றி).

முனைவர் . இராஜேந்திரன்,

தமிழ் உதவிப்பேராசிரியர், மொழித்துறை,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,

கோவை – 28.