Month: August 2017

ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும் (சங்க அகக்குறியீடுகளை முன்வைத்து)

ஒவ்வொரு சமூகமும் ஒரு பண்பாட்டு வட்டத்திற்குள் செயல்பட்டுவருகின்றது. அவ்வகையில் தமிழ்ச்சமூகமும் தனக்கென ஒரு பண்பாட்டை வரையறுத்துக்கொண்டுள்ளது. அப்பண்பாட்டுச் சூழலால் பிணிக்கப்பட்ட மனிதன் தான் கூறவரும் கருத்துகளை வெளிப்படையாகக் கூறிவிட முடிவதில்லை. இத்தகு சூழலில் தன்னுடைய கருத்தை முழுமையாக ஒரு மனிதன் வெளிப்படுத்தக் குறியீடுகள் பெருந்துணை புரிகின்றன. சங்க இலக்கியக் கூற்று மாந்தர்கள் அனைவரும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டிய அவசியம் இருப்பதால் அக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதுடன் தத்தம் உள்ளக்கருத்துகளையும் எவ்வாறாயினும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் குறியீடுகளைப் பயன்படுத்தக் காரணமாக அமைகின்றன. அவ்வகையில் சங்கப்புலவர்கள் குறியீடுகளைப் பயன்படுத்தி எவ்வாறு பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கங்களைத் தங்களது கவிதைகளில் கட்டமைத்துள்ளனர் என்பதையும் ஃபிராய்டு பாலியலை உளவியல் நோக்கில் எவ்வாறு அணுகியுள்ளார் என்பதையும் ஆராயும் முகமாக இக்கட்டுரை விவரிக்கின்றது. பாலியல் கல்வி அகத்திணை ஓர் பாலிலக்கியம். அகத்திணையில் காதலை மையமாகக் கொண்டு நுண்மையான, அதே சமயம் அனுபவிக்கக் கூடிய உணர்ச்சிகள் பல உள்ளன. பெயரில்லாதோர் வாழ்க்கையிலிருந்து காம நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கிறது. காமம் பற்றிய ஆணுடல் பெண்ணுடலின் கூறுகளையும், இயற்கை செயற்கை திரிபு ஆகிய மனக்கூறுகளையும் உள்ளது உள்ளபடியே சொல்வது பாலிலக்கண நூல். அந்நூல் வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது, அதனைக் கற்பவர் அறிவுநிலையைப் பெறுவாரேயன்றிக் காதலுக்கு இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறமாட்டார். சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணமாட்டார். பசியும் பாலுணர்வும் உயிரினங்களுக்கு இயற்கை அளித்த கொடை. உயிரினங்களின் சந்ததிச் சங்கிலி அறுபடாமல் தொடர, தமது இனத்தைத் தொடர்ந்து பெருக்கிக் கொண்டே செல்ல, இனப்பெருக்கத்திற்கான இயல்பூக்கமாக பாலுணர்வு அமைந்துள்ளது. உயிரினங்களின் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் இதன் பொருட்டே ஆகும். அதனால்தான் சங்கப்புலவர்கள் காதலைச் சிறப்பித்துப் பல கோணங்களில் பாடியுள்ளனர். எண்ணிக்கையும் பெறுகின. ஒருவர் அனுபவிக்கும் காதல் உணர்வை மற்றவரால் அனுபவிக்க முடியும். அந்த அனுபவத்தைக் கலை இலக்கியம் வழியில் சுய அனுபவமாக வெளிப்படுத்தவும் முடியும். பெண்ணின் துயரத்தை, மகிழ்ச்சியைக் கூட ஆண் புலவர்களால் கவிதை வார்க்க முடியும். தம்மைப் பெண்ணாக மாற்றிக்கொண்டு (நாயகி – நாயகன் பாவம்) பெண் உணர்வைப் புனைய முடியும். இவையாவும் காதலால் மட்டுமே சாத்தியம். மாறாக, வீர உணர்வைப் பிறரால் ஆழமாக உள்ளார்ந்து அனுபவிக்கவோ எதிர்வினை விளைவிக்கவோ முடியாது. அதனால்தான் சங்கப்புலவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ அகப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்....

Read More

SCIENCE IN THIRUKKURAL

Introduction The literature of an era often provides an insight into the state of knowledge of the people living in that period. Viewed from this angle, Thirukkural is a veritable mine of information on the progress of civilization in ancient Tamilnadu. That Thirukkural- considered by many scholars to have been composed about 2000 years ago-is an excellent treatise on social ethics and morality is well known; not so well recognised is the fact that it also represents a compact encyclopedia of science, agriculture and medicine.  In this article, an attempt is made to collect all those couplets in Thirukkural which have a scientific back-ground, and to classify them under several headings in physical and biological sciences. In the sections that follow, the serial numbers of the couplets under reference are given in parentheses. Physical Sciences There are many couplets in Thirukkural which indicate a high level of understanding and knowledge of the physical sciences, namely, astronomy, mathematics, physics, chemistry and geology. Some examples are given below. 2.1: Astronomy  There is a reference to lunar eclipse in couplet 1146: கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.[1] “when the moon is devoured by the serpent, darkness spreads in the world; likewise spreads the rumour even of one chance meeting of the lovers”. Although the explanation of the lunar eclipse as due to the serpent of the skies (known in Hindu mythology...

Read More

அக இலக்கியங்களில் மிதவை மாந்தர்கள்

அக இலக்கியங்கள் அக்காலத் தமிழரின் அகவாழ்வியலை எடுத்தியம்பும் தன்மையன.  அக இலக்கியங்களில் மிதவை மாந்தர் என்போரின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிலையில், மிதவை மாந்தர்கள் ஆற்றிய பணிகளையும், தலைவன் தலைவியரிடையே கொண்ட உறவு நிலைகளையும் எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது. தலைவன், தலைவி, பரத்தை ஆகியோரிடையே தூது செல்லும் வாயில்கள் பட்டியலில் மிதவை மாந்தர்களுக்கும் இடம் உண்டு. இவ்வாயில்களில் மிக நீண்ட தொலைவு பயணம் செய்து செய்தி உரைப்பதற்கு உரியவராகக் கூத்தரும் பாணரும் குறிக்கப்படுகின்றனர் என்பதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது. தலைவனின் பரத்தமை ஒழுக்கம் காரணமாகச் சினம் கொண்ட தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களாக மிதவை மாந்தர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். மருதத்திணைப் பாடல்கள் பலவற்றில் இத்தகைய சூழலில் மிதவை மாந்தர்களைச் சந்திக்க முடிகிறது. பெரும்பாலும் தலைவியின் சின மொழிகளுக்கும், இகழ்ச்சிக்கும் உள்ளாகின்றவர்களாகவும், சில நேரங்களில் பரத்தையரால் கடியப்படுகின்றவர்களாகவும் மிதவை மாந்தர்கள் காட்சி தருகின்றனர். தலைவன் பொருள் தேடவோ வேறு வினை காரணமாகவோ வேற்று நிலங்களுக்குப் பிரிந்து சென்றிருக்கும் சூழலில், தலைவி தலைவனுக்கிடையில் தூதுவராக மிதவை மாந்தர்கள் செயலாற்றி உள்ளனர். முல்லை, நெய்தல் திணைப் பாடல்கள் இத்தகைய சூழல்களில் மிதவை மாந்தர்களைச் சித்திரிக்கின்றன. மேலும், தலைவன் தன் அகவாழ்வு அனுபவங்களை நெருங்கிய நண்பனிடம் பகிர்ந்து கொள்வதைப் போல், பாணனுடன் பேசி மகிழும் காட்சிச் சித்திரங்களையும் அகப்பாடல்களில் காண முடிகிறது. எனவே, மிதவை மாந்தர்கள் தலைவனிடம் கொண்ட உரிமையையும் உறவையும், தலைவியிடம் கொண்ட பணிவையும் இடைவெளியையும், தலைவியின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ஆட்பட்ட நிலையையும், அச்சூழலில் மிதவை மாந்தர்தம் எதிர்வினையையும் பற்றி எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தலைவனுக்கும் மிதவை மாந்தர்களுக்கும் உள்ள உறவுநிலை வினைவயிற் பிரிந்துறையும் தலைமகன், தலைமகள் விட்ட தூதாய் வந்த பாணனிடம், ‘அவள் சொல்லிய திறம் கூறு” (ஐங்.478), ‘நீ சொல்லும் போதெல்லாம் எனக்கு இனிமையாக உள்ளது” (ஐங்.479) என்று கூற, அது கேட்ட பாணன், ‘இளவேனில் வந்துவிட்டது. அவனோ பரத்தையரின் இன்பத்தை உண்பவனாக என்னை மறந்து அங்கேயே தங்கி இருப்பானோ? கூடிக் கழித்திருப்பானோ? என்று புலம்பி வருந்துகின்றாள். பணிந்து நின் அடிசேராத பகைவர் நீ அவருக்கு அளிக்கும் தண்டனையை எண்ணி எண்ணி நடுங்குவதைப் போல அவள் தன் உள்ளம் நடுங்குகின்றாள். எனவே அவளைக் காக்க நீயும் விரைந்து...

Read More

புதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள்

தமிழ்க் கவிதைமரபு சங்க காலம், சங்க மருவிய காலம், பக்தி இயக்கக் காலம், காப்பியக் காலம், பிரபந்தக் காலம், தற்காலம் என நீண்ட வரலாற்றைக் கொண்டு திகழ்கிறது. இவ்வரலாற்றைப் பார்க்கும்போது காலந்தோறும் கவிதையில் நிகழ்ந்துள்ள உருவ – உள்ளடக்க மாறுதல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககால கவிதைகள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடலையும், சங்க மருவிய காலக் கவிதைகள் வெண்பாவையும், காப்பியக் கால கவிதை, பத்தி இலக்கியக் கால கவிதை, பிரபந்த இலக்கியக் கால கவிதை முறையே தொடர்நிலைச் செய்யுள், விருத்தப்பா மற்றும் அனைத்துப் பாவகைகளையும் அதன் இனங்களையும் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கால மாற்றத்திற்கேற்பத் தமிழ்க்கவிதை வடிவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் பல மாற்றங்கள் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தன. இம்மாற்றம் தமிழ்க்கவிதை அமைப்பிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலைத்தேயக் கவிதையிலாளர்களான வால்ட் விட்மன், எஸ்ரா பவுண்டு, டி.எஸ். எலியட் முதலியோரின் புதிய முயற்சிகள் தமிழ்க்கவிதை மரபிலும் அதன் பாதிப்பை உண்டாக்கின. இந்தப் பின்புலத்தில் வசன கவிதை, புதுக்கவிதை தோற்றம் பெற்றன. தமிழில் முதல் வசன கவிதை முயற்சியாகப் பாரதியாரின் காட்சிகள் கவிதையைக் குறிப்பிடலாம். பாரதி பல்வேறு யாப்பு வடிவிலான கவிதைகளை எழுதினாலும் அவ்வப்போது நிகழும் புது முயற்சிகளையும் தம் கவிதை வடிவத்தில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். பாரதியைத் தொடர்ந்து மணிக்கொடி பரம்பரை, எழுத்து பரம்பரை, வானம்பாடி பரம்பரை என மூன்று பரம்பரைகள் தோன்றின. இம்மூன்று பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்கள் – எழுத்தாளர்கள் புதுக்கவிதையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இம்முயற்சிகளின் வழிப் புதுக்கவிதை பல பரிமாணங்களை அடைந்தது. தமிழ்ச் சூழலில் புதுக்கவிதையின் பரிமாணங்கள் குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. புதுக்கவிதை இலக்கண வரையறைக்குட்பட்டு வந்த தமிழ்க் கவிதை மரபில் இருந்து வேறொரு பரிமாணத்தைப் பெற்றது என்றும், புதிய பரிமாணத்தைப் பெற்றுவிட்டாலும் மரபுக்கவிதையின் தாக்கமும், அதன் கூறுகளும் இதில் காணக் கிடக்கின்றன என்றும் இருவேறு நிலைப்பாட்டினர் வாதிட்டனர். இந்நிலைபாடுகள் பல சுவையான தகவல்களைத் தருகின்றன. இது குறித்து வல்லிக்கண்ணன் தமது புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். புதுக்கவிதை குறித்த சுவையான விவாதத்திற்கு அடித்தளம் இட்டவர் க.நா.சுப்பிரமணியன். க.நா.சுப்பிரமணியன் மயன் என்ற புனைபெயரில் சூறாவளியில் ஒரு வசனகவிதையை...

Read More

மகாபாரதப் படைப்பின்வழி விதுரரின் குணநலன்

இலக்கியங்கள் ஒரு நாட்டின் மொழிவளம் மற்றும் மக்களின் மனவளத்தைக் காட்டும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. இராமாயணமும் மகாபாரதமும் பாரத நாட்டின் இருபெரும் இதிகாசச் செல்வங்களாகும். மனிதன் எப்படி வாழவேண்டும், மனித வாழ்வு எந்த இலட்சியத்துக்காக முற்பட வேண்டும் என்பவற்றை  எடுத்தியம்புவதில் இவ்விரண்டு இதிகாச நூல்களும் தனித்தன்மை வாய்ந்தவை.இதில் மகாபாரதம் மகரிசிகளின் உபதேசங்கள், மன்னர்களின் வரலாறுகள்,உபகதைகள் மற்றும் மனித வாழ்க்கை முறைகளை (சூதின் தீமை,சகோதரர்களுக்கிடையே ஏற்படும் போரின் கொடுமை, பொறாமையால் மனித மனங்கள் அடையும் புன்மைகள்) எடுத்துக்காட்டும் ஊடகமாகஅமைந்துள்ளது. மகாபாரதம்பரத வம்சத்தின் வழிவந்த குரு வம்சத்தினரான கௌரவ மற்றும் பாண்டவ குலத்தாரிடையே நடந்த பெரும் போரைத் தழுவியதாகும். அதனாலேயே அது மகாபாரதம் என்று அழைக்கப்பட்டது. வடமொழியான சமசுகிருதத்தில் வேதவியாசரால் மகாபாரதம் முதலில் இயற்றப்பட்டது. மகாபாரதத்தின் கதையை விரும்பாதவர் இலர். ஏனென்றால், அது பெண்மையைக் காக்கும் அடையாளமாக உள்ளது. பெண்மைக்கு மதிப்புக் கொடுக்கும் விதமாகவும் பெண்விடுதலையைப் போற்றும் விதமாகவும் எழுதப்பட்டதே வில்லிபுத்தூராரின்வில்லிபாரதம் ஆகும். வில்லிபாரதத்தில் வரும் கதைமாந்தர்கள் அனைவரும் நல்ல மற்றும் தீய பண்புகளின் அடையாளங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். மனிதன் முக்குணங்களுக்கு உட்பட்டவன் ஆவான். அது சாத்வீகம், இராசசம் மற்றும் தாமச குணமாகும்.வேதங்கள் பரம் மற்றும் இகத்தைப் பற்றிப் தெளிவாகப் பேசுகின்றன. அவை பரத கண்டத்தின் சமயமான இந்து சமயத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். மும்மூர்த்திகளான அயன், அரி, அரன் ஆகிய மூவரும் முக்குணங்களின் அடையாளமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனர். அவைதனில் அயன் சாத்வீக குணமாகவும் (படைத்தல்)  அரி இராசச குணமாகவும் (காத்தல்) அரன் தாமச குணத்தின் (அழித்தல்) வெளிப்பாடாகவும் உள்ளனர். இவ்அடிப்படைக் குணங்களைக் கொண்டு மகாபாரதத்தில் இடம்பெறும் முதன்மை கதாபாத்திரமான விதுரரின் பாத்திரப்படைப்பை  ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். விதுரர் பிறப்பு விதுரர் அத்தினாபுரத்தின் அரசனான விசித்திரவீரியனுக்கும் அவரது பணிப் பெண்ணுக்கும் வியாசரின் அருளால் மகனாகப் பிறந்தார். அவர் எமதர்மனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். எமனாக இருந்தவர் தர்மம் வழுவியதன் விளைவாக ஆணிமாண்டவ்யரின் சாபத்தினால்; அரச குலத்தில் விதுரராகப் பிறப்பெடுத்ததை, அம்பிகைக்கொடி தோழியை விடுத்தன ளவள்புரித வந்தன்னால் உம்பரிற்பெறு வரத்தினாற் றருமன் வந்துதித்திடும் பதம்பெற்றாள் (ஆதி.சம்-20) என்ற வில்லிபாரத அடிகள் மெய்ப்பிக்கின்றன. அரசகுலத்தில் பிறப்பெடுத்தும் அரியணை ஏற முடியாதவராய் நற்பண்புகளை உடைமையாகக் கொண்டு தர்மத்தின் அவதாரமாய் வாழ்ந்தவர் மகாத்மா விதுரர். இவர் திருதராட்டிரர்,...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Next publishing us! 2018 (FEBRUARY)

அடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.

Current Issues – Nov 2017