சென்றேன் தமிழூர்
சண்முக வேலாயுதம் சுப்பிரமணியனின் பவளவிழாவை முன்னிட்டு “ச.வே.சு.75” எனும் தொகுப்பு நூல் 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்தொகுப்பில் பேரா.தாயம்மாள் அறவாணன் ’தமிழூர் செல்லுங்கள்’ எனும் தலைப்பில் இருபக்க அளவில் கட்டுரை ஒன்றை வடிவமைத்திருந்தார். அத்தலைப்பை யொட்டியே “சென்றேன் தமிழூர்” எனும் தலைப்பில் யான் சென்ற / கண்ட அனுபவங்களை வெளிப்படுத்தும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது. இருமுறை ’’ச.வே.சு. அய்யாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மனம் நெகிழ்கிறேன். தமிழ்ச் சான்றோர்களிடம் அருகில் இருந்தாலே அவர்களின் குணாதியசங்கள் சிறிதளவாவது பெற்றுக் கொள்ளலாம் என்ற அருந்தவத்தத்தினை எதிர் நோக்கும் எண்ணம் எப்போதும் என் அகச்சிந்தையில் நிறைந்தே காணப்படும். 2014ஆம் ஆண்டு முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த காலம். காலையில் எப்போதும் நூலகம் சென்று நூல்களைத் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பது வழக்கம். நூலகத்தில் ஆய்வாளர்கள் அமர்ந்து குறிப்பெடுக்கக் கிழக்குத் திசையை நோக்கி நாற்காலி அமர்த்தப்பட்டிருக்கும். அவற்றுள் ஒன்றில் சாய்வாக அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். கடிகாரத்தின் முள் சிறிதுசிறிதாய் நகர்ந்தது. நகர்ந்த நேரத்தைக் கவனியாது நானும் ஆழ்ந்த வாசிப்பில் மூழ்கினேன். எதார்த்தமாக இடப்பக்கமாய்த் திரும்பிப் பார்க்க நேரிட்டபோது வெள்ளைநிற ஆடையணிந்து வயதான ஒருவர் அமர்ந்து கொண்டு நூலகப் பணியாளரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இவர் யாராக இருப்பார்…? என்ற சிந்தை என்னை ஆட்டிப் படைத்தது. என்னைச் சுமந்து கொண்டிருந்த நாற்காலிக்குச் சற்று ஓய்வு கொடுத்து, வெள்ளையாடை அணிந்திருக்கும் பெரியவர் பக்கம் தலைசாய்க்கலானேன். அருகில் வந்தேன். முகத்தைப் பார்த்தேன். எங்கேயோ புத்தக அட்டைப்படத்தில் பார்த்த ஞாபகம் மட்டும் என்னைத் தொற்றிக்கொண்டு யாரென்று விசாரிக்கத் துடித்தது மனம். இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் நூலகப் பணியாளர் புத்தக அலமாரிப் பக்கம் மெதுவாய் நடந்து வந்தார். அவருக்குத் தெரியாமல் அவரைப் பின்தொடர்ந்தேன். சார்… அங்க உட்காந்திருக்காருல அவரு பேரு என்ன சார்னு கேட்டேன். தம்பி… அவருதான் ச.வே.சு.னு சொன்னார். இல்ல இவர எங்கேயோ பார்த்த ஞாபகம், அதான் சார் கேட்டேன். நன்றி சார்னு சொல்லிவிட்டு அய்யாவை நெருங்கினேன். அய்யா வணக்கம். என் பேரு முனியசாமி.. இங்கதான் முனைவர் பட்டம் மேற்கொண்டு வரேங்கையா… சொன்னதும் தம்பி உக்காருப்பானு பக்கத்துல இருந்த நாற்காலியைக் காட்டினார். பெரியவங்க கிட்ட அமர்ந்து பேசுவதென்றால் தனி அலாதிதான். வாய்ப்புக் கிடைத்தது. விடுவேனா என்ன? என...
Read More