Month: August 2016

சிதம்பர அடிகள் நூலகம்

கொங்கு மணம் கமழும் கோவையில், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைச்சாலையில், நொய்யல் ஆற்றின் தென்கரையில் எம்பெருமான் பட்டீசுவரர் – பச்சைநாயகி குடிகொண்டு அருள் வழங்கும் அற்புதத் தலமாக விளங்குவது பேரூர். ‘பிறவா நெறி’ என்றும் ‘மேலைச் சிதம்பரம்’ என்றும் போற்றப்படும் இவ்வூரில் சிவநெறியும், பக்திநெறியும் நிறைந்து விளங்குகிறது. இத்தகைய சிறப்புப்பெற்ற பேரூர் கோவையிலிருந்து சிறுவாணி, பூண்டி செல்லும் சாலையில் சுமார் 20கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் செந்தமிழ்க் கல்லூரியாகத் தொடங்கப்பெற்று கலை அறிவியல் கல்லூரியாக வளர்ந்துள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் நூலகமாகச் செயல்பட்டுவரும் ‘சிதம்பர அடிகள்’ நூலகத்தின் உயர்தனிச் சிறப்பினை அடையாளப்படுத்துவதாய் இக்கட்டுரை அமைகிறது. செந்தமிழ்க்கல்லூரி – உருவாக்கம் தமிழ்மொழி மீது மாறாப் பற்றுக் கொண்ட தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் கொங்கு நகரமாம் பேரூர்த் தலத்தில் செம்மொழித் தமிழின் வளம் பெருக்கவும், சமயநிலை உயரவும் செந்தமிழுக்கென தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியைப் பேரூராதீனத்தில் 24.05.1953இல் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குன்றக்குடி அடிகளாரால் தொடங்கப்பெற்றது என்றும், அறியாமை இருளை அகற்றும் கல்வி என்னும் பெருஞ்செல்வத்தை ஏழை எளிய மாணவர்களும் பெற்று வளர உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பெருமகனார் இக்கல்லூரியைத் தொடங்கினார். சிதம்பர அடிகள் நூலக உருவாக்கம் பேரூராதினத்தில் தவத்திரு சாந்தலிங்கர் சைவத் திருமடத்தைத் தொடங்கிய காலம் (1914 – 1915) முதற்கொண்டே சிதம்பர அடிகள் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. அதன் பின்பு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தமது அறிவுத் தேடலுக்கு வேண்டிய நூல்களை விலை கொடுத்து வாங்காமல் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ‘சிதம்பர அடிகள்’ நூலகத்தைக் கல்லூரியுடன் இணைக்க எண்ணினர். அதன் விழைவாக 1958ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி வைக்க, அன்றைய தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ‘கர்மவீரர் காமராசர்’ அவர்களை அழைத்து திறந்து வைத்துள்ளனர். இதனைக் கல்லூரியின் நுழைவு வாயிலில் பதிக்கப்பெற்றுள்ள அடையாளக் கல்வெட்டுவழி அறிமுடிகிறது. நூலகத்தில் படிக்கின்ற சூழல் பசுமை சூழ்ந்த தென்னை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்திருக்கும் தோப்பும், சாந்தலிங்கப் பெருமான் ஜீவசமாதிமீது எம்பெருமான் லிங்கத் திருமேனி  பதிக்கப்பெற்றிருக்கும் திருக்கோயிலுடன் இனிய அமைதியான சூழ்நிலையில் நல்ல காற்றோட்டமான இடத்தில் தவத்திரு சாந்தலிங்க...

Read More

நற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக வரலாற்று மீட்டெடுப்பும் வரலாற்றெழுதுதலும்

நமக்குக் கிடைக்கப்பெறும் அகப்புறச் சான்றுகளின் வழியாகப் பண்டுதொட்டு நம் தமிழ்ச்சமூக வரலாறு மீட்டெடுக்கப்பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதானது சிற்றிதழ்களிலும் சிறுபத்திரிக்கைகளிலும் மட்டுமே சுருங்கிப் போனதொரு பேருண்மை. வரலாறு என்பதும் வரலாறெழுதுதல் என்பதும் கீழிருந்து மேலெழுதல் என்ற தருக்கவடிவினதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதே இன்றைய வரலாற்று மறுவாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. அகழ அகழக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பேழைகளை, தொல்லெழுத்துச் சான்றுகளை வெளிக்கொணர விடாமல்  அருங்காட்சியகங்களின்  தனியறைகளில் பூட்டிவைத்து நுண்அரசியல் செய்யும் இக்கட்டான சூழலில் பரந்துவிரிந்து கிடக்கும் தமிழிலக்கியச் சான்றுகளை இன்னும் சரிவரத் தூசு தட்டாமல் இருப்பது இந்த நிமிடம் வரை நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். பண்டுதொட்டு இங்கிருந்த வரலாற்றுத் தொல்லெச்சங்களை மறைத்து எல்லாவற்றையும் தங்களுக்கானதாக அடையாளப்படுத்திப் புராண இதிகாசக் கருத்தாக்கங்களை இந்நிலத்திற்கான ஆதி வரலாறென நம்பவைத்த வரலாற்று மோசடியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை.  அவ்வகையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பெற்ற செவ்விலக்கியப் பிரதிகளை மையமிட்டுப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் எழுந்த உரைகளினூடாக அமைந்த பாட, உரை வேறுபாடுகளின் நுண்ணரசியலை அடையாளப்படுத்தி வரலாற்றுக் குறிப்புகளை மீட்டெடுப்புச் செய்வது இவ்வாய்வுரையின் நோக்கம். இவ்வாய்வுரைக்கு நற்றிணையின் முதற்பதிப்பான பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரையும் 1966, 1968களில் எழுந்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை உரையும் முதன்மையாகக் கொள்ளப் பெறுகின்றன. நற்றிணையின் 75, 77 ஆகிய இரு பாடல்கள் மட்டும் இங்கு ஆய்வெல்லையாக அமைகின்றன. கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்           பச்சூன் பெய்த பகழி (நற்.75 : 6-7) என்ற பாடத்தை ஏற்றுக்கொண்ட பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ‘வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை எய்து கொன்று அதன் பசிய தசையிற் பாய்ச்சியதனாலே சிவந்த அம்பினைப்போல’ என உரை கொள்கின்றார். இப்பாடத்திற்கும் உரைக்கும் மாற்றாக, கோடைப் பொருநன் கோட்டுமா தொலைச்சிய           பண்ணி எய்த பகழி (நற்.75 : 6-7) என்ற பாடத்தை ஏற்றுக்கொண்ட ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை ‘கோடைமலைப் பொருநனாகிய கடியன் நெடுவேட்டுவனது உயர்ந்த கொம்புகளையுடைய யானையைக் கொல்லுதற்குப் பண்ணி என்பவன் எய்த அம்பு போல’ என உரை கொள்கின்றார். இவ்விரு பாடவேறுபாடுகளினாலும் அதனாலெழுந்த உரை வேறுபாடுகளினாலும் வரலாற்றுக் குறிப்பொன்று அறியப் பெறுகின்றது. தமிழ்ச்செவ்விலக்கியப் பனுவல்களில் அமைந்த உவமைகளில் வரலாற்றுக் குறிப்புகளை அளித்தல் என்பது தமிழ்ச்செவ்விலக்கியப் பண்பென்று கொண்டாலும்...

Read More

தொல்காப்பியனார் காலம்

இதழ் 5இன் தொடர்ச்சி… தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் தொல்காப்பிய விதிக்கு மாறான சொல்வழக்குகள் சில திருக்குறளிலும் சங்கத் தொகை நுல்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியனார் காலத்தில் கள் என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டுமே வழங்கியது. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே, கொள்வழி  யுடைய பலவறி சொற்கே, என வரும் சூத்திரத்தால் இவ்வுண்மை புலனாம். பூரியர்கள் (919), மற்றையவர்கள் (263) எனத் திருக்குறளிலும், தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல (கலி-26) எனக் கலித்தொகையிலும் உயர்திணைப் பெயரையடுத்துக் கள் விகுதி பயின்று வழங்குவதற்குத் தொல்காப்பியத்தில் விதி கூறப்படவில்லை. அன் விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே யுரியதெனத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். இவ்விதிக்கு மாறாக இரப்பன் இரப்பாரை யெல்லாம் என வருந் திருக்குறளில் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்குகின்றது. இவ்வாறே கைவிடுக லேனே (அகம்-193), உதவியோ வுடையன் (அகம்-186), நினைக்கியான் கிளைஞ  னல்லனே (அகம்-343), யான் வாழலனே (அகம்-362), உள்ளா ராயினு முளனே (அகம்-378), மிகுதிகண் டன்றோ விலனே (அகம்-379), நனியறிந்தன்றோ விலனே (அகம்-384), அமளி தைவந் தனனே, அளியன் யானே (குறுந்-30), நீயலன் யானென (குறுந்-36), யான் இழந் தனனே (குறுந்-43), விடல்சூ ழிலன்யான் (குறுந்-300), யான்கண் டனனோ விலனே  (குறுந்-311), உளனே  (குறுந்-316), உரைத்தனன் யானாக (புறம்-136), அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே (புறம்-201), கூறுவன் வாழி தோழி (நற்-233), உள்ளின னல்லனோ யானே (நற்-326), யான்தொடங் கினனாற் புரந்தரவே (ஐங்-428) என இவ்வாறு எட்டுத்தொகை நூல்களிலும் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்கப் பெற்றுளது.[1] இவ்வாறே  தொல்காப்பியத்திற் காணப்படாத புது வழக்குகள் சில சங்க நூல்களிலும் திருக்குறளிலும் காணப்படுகின்றன. அல்லால் (குறள்-377), சூழாமல் (1024), செய்யாமல் (101, 343), அல்லனேல் (386), இன்றேல் (556), செய்வானேல் (655), வேபாக் கறிந்து (1128) எனத் திருக்குறளிலும், பொருளல்லாற் பொருளு முண்டோ (14), கூறாமற் குறித்ததன் மேற்செல்லும் (1), முற்றாமல் (19), தீராமல், தெருளாமல் (38) காணாமல் (39), கேளாமை (108), காணாமையுண்ட கடுங்கள்ளை (115), நில்லாமை நனிவௌவி (138) எனக் கலித்தொகையிலும் ஆல்,  ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியையுடைய வினையெச்சங்கள் பயில வழங்கப்பெற்றுள்ளன. இவை தொல்காப்பியத்திற் கூறப்படவில்லை. மாரைக்கிளவியும் பல்லோர் படர்க்கை, காலக் கிளவியொடு முடியுமென்ப...

Read More

கண்ணகி மரபு: தமிழ் இன அடையாள உருவாக்கமும் அடையாள அழிப்பின் அரசியலும்

பகுதி ஒன்று சிலப்பதிகாரம் எனும் பிரதி ஒற்றைப் பொருண்மை கொண்டதன்று. அது கண்ணகி தொன்மம் – இளங்கோவடிகளின் அரசியல் நிலைப்பாடு – காப்பியநிலை – எனப் பன்முகப்பட்டது. இம்மூன்றையும் ஒற்றைப் பொருண்மை உடையனவாகக் கருதும்போது பல முட்டுப்பாடுகள் தோன்றக் கூடும். புராதன தாய்ச்சமூக மரபிலிருந்து தோன்றி வழங்கி வந்த கண்ணகி தொன்மத்தை அரசியல் துறவியாகிய இளங்கோவடிகள் (கவனித்தல் வேண்டும் அவர் சமயத் துறவி அல்லர்) பேரரசு உருவாக்கம் என்னும் கருத்தியலின் அடிப்படையில் சிலப்பதிகாரம் எனும் காப்பியமாக உருவாக்குகின்றார். பேரரசு உருவாக்கத்தின் இலக்கிய ஆக்கமாகவும் சிலப்பதிகாரத்தைக் கருதுதல் வேண்டும். எனவேதான் கண்ணகி தெய்வமாகிய பின்னரும் சிலப்பதிகாரத்தின் கதை நீட்சி பெறுகின்றது. (விரிவிற்குப் பார்க்க: சிலம்பு நா. செல்வராசு.2006) பன்முகமாக நிலைகொண்ட இனக்குழு அரச மரபுகளை ஒற்றை நிலையிலான பேரரசு அமைப்பிற்குள் கொண்டுவரும் சமூக வளர்நிலையில் சிலப்பதிகாரம் அவ்வளர்நிலையை நியாயப்படுத்துவதாக அமைகின்றது. இளங்கோவின் அரசியல் துறவறமும் இந்த நியாயப்படுத்துவதன் கூறாகக் காணுதல் வேண்டும். இவ்வளர்நிலை தமிழ்ச் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுபாவாக இழையோடுவதை உணர முடியும். குடும்பம், அரசு, சமயம் எனும் இச்சமூக நிறுவனங்களும் பன்மை நிலையிலிருந்து ஒற்றைப்பொருண்மை நிலை நோக்கி நகரத் தொடங்கின. ஒருகணவ மணமுறைக் குடும்பம் அல்லது பெருங்குடும்பம், பேரரசு, பெருஞ்சமயம் என்னும் சொல்லாடல்களாக அவை வடிவெடுத்தன. இவற்றை உள்கட்டுமானமாகக் கொண்டு சிலப்பதிகாரம் தம் அரசியலை நிகழ்த்தத் தொடங்கியது. இந்த அரசியல் எனும் நாணயத்தின் இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியம் எனும் கருத்தியலாக வடிவெடுத்தது. இதுபற்றிச் சிறிது விளக்கமாக அறியமுடியும். கண்ணகி தொன்மம் எப்பொழுது தோன்றியது என்பதை அறுதியிட்டு உரைத்தல் இயலாது. ஆயின் அது சிலப்பதிகாரமாக ஆக்கம் பெற்றபோது இளங்கோவடிகள், சாத்தனார், செங்குட்டுவன் எனும் வரலாற்றுப் பாத்திரங்களின் சமகாலத்துத் தன்மையை அடைந்தது. சாத்தனார், கண்ணகி கதை நடந்த காலத்தில் அதாவது மதுரை பற்றி எரிந்தபோது அவ்விடத்தில் இருந்தமையையும் கண்ணகி வரலாற்றையும் இளங்கோ வடிகளிடம் கூற அவர் சிலப்பதிகாரத்தை எழுதினார் எனப் பதிகம் உரைக்கின்றது. இன்னுமொரு கருத்துச் சங்க காலத்திலேயே கண்ணகி தொன்மம் அறியப்பட்டிருந்தது என்பதாகும். நற்றிணை கூறும் திருமாவுண்ணி கதையும் பேகன் கண்ணகி கதையும் இதற்குச் சான்றுகளாகும். திருமாவுண்ணி, கண்ணகி அல்லள் என்பதும் ஒருமுலை அறுத்த செயல் ஒன்றே ஒற்றுமையுடன் காணப்படுகின்றது என்பதும் இருவரும் வேறுவேறானவர்...

Read More

சங்கஇலக்கியத்தில் தாய்வழிச்சமூகக் கூறுகள்

சங்க இலக்கிய நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் சங்ககாலப் பெண்களின் தலைமை சான்ற இருப்புநிலையை நம் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர். தாய்வழிச்சமூகத்தில் மேற்கொண்ட இயற்கை வழிபாட்டில் பெண் முதன்மைப்படுத்தப்பட்டதும், பெண் தெய்வ வழிபாடுகளும், அத்தெய்வங்களுக்குரிய இயல்புகளும் பெண்ணின் சிந்தனையைப் பரந்துபட்ட நோக்கமாகக் காட்டியுள்ளன. தந்தைவழித் தலைமையில் நிலவுடைமைச் சமுதாயத்தின் தோற்றம் பெற்ற காலங்களிலும், பொதுவுடைமைச் சிந்தனையோடு திகழ்ந்த பெண்களின் தன்னியல்பு தெய்வத்தை முதன்மையாக வழிபட வைத்து, அவற்றுக்கான சடங்குகளில் அவளை ஈடுபடுத்தி ஆணைச் சார்ந்து வாழும் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டதனை அறிய முடிகின்றது. தந்தைவழிச் சமூகத்தில் அகவாழ்க்கையிலும், புறவாழ்க்கையிலும் சமூகக்கட்டமைப்புக்கு ஏற்ப தனது இருப்பை நிலைப்படுத்தியும், நிறைவு செய்தும் வாழ்ந்த பெண்களின் அடையாளங்கள் தாய்வழிமரபின் எச்சநிலைக் கூறுகளாக அமைந்துள்ளன என்பதற்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன. அத்தகைய தாய்த்தலைமைக்கான அடையாளங்களை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தாய்த்தலைமைக்கான கூறுகள் தமிழ்ச்சமூக அமைப்பில் தாய்த்தலைமைக்கான கூறுகள் எட்டுத்தொகை நூல்களில் காணக்கிடக்கின்றன. சிறுவர்தாயே பேரிற் பெண்டே                                          (புறம்.270:6) செம்முதுபெண்டின் காதலஞ் சிறாஅன்                             (புறம்.276:3)             வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்                            (புறம்.277:2) முளரி மருங்கின் முதியோள் சிறுவன்                                 (புறம்.278:2)             என்மகள் ஒருத்தியும் பிறள்மகள் ஒருவனும்                     (பாலைக்கலி:8)             ஒலிஇருங் கதுப்பின் ஆயிழை கணவன்                            (புறம்.138:8) என்று பெண்களின் அடையாளத்தில் ஆண்கள் சுட்டப்படுவதனை அறியமுடிகின்றது. இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விருந்தோம்பல் பண்புகள் குறித்த பாடல்கள் பெண்களின் விருந்தோம்பல் இயல்புக்குச் சான்று பகர்கின்றன. வருவிருந்து அயரும் விருப்பினள்                           (புறம்.326:12) வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துகின்றது. அன்றைய நாட்களில் பெண்ணை வாழ்த்தும்போது, பேரிற் கிழத்தி ஆக                                                   (அகம்.86:19) என்று சுற்றத்தார் வாழ்த்துவதன் மூலம் குடும்ப அமைப்பில் பெண்ணுக்கான இருப்பினை உணரவியலுகின்றது. விருந்து பேணுவதில் சிறப்பும், மகிழ்வும் கொண்டவள் என்பதைச் சங்ககால ஆடவர்களும் நன்குணர்ந்திருந்தனர் என்பதனை, தங்கினர் சென்மோ புலவீர்! நன்றும்             சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி                      (புறம்.333:7-8) என்ற பாடல் பகுதி மூலம் அறியலாகின்றது.       இல்லறம் பேணுதலில் பெண் கொண்டிருந்த தலைமைப்பண்பினை, மனைவி                                                                     (நற்.121:11) மனையோள்                                                              (குறுந்.164:5) வளமனைக் கிழத்தி                                                  (அகம்.166:10) இற்பொலி மகடூஉ                                                   (புறம்.331:9) என்று இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. பெண்களின் தலைமையில் சமூகம் அமைக்கப்பட்டிருந்ததும், ஆண்கள் பெண்களின் நுண்மாண் நுழைபுலத்திறனை...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Next publishing us! 2018 (FEBRUARY)

அடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.

Current Issues – Nov 2017