Month: May 2016

அடையாளம் : சிரவைத் தமிழாய்வு மைய நூலகம்

வானம் பார்த்த நிலமான கொங்கு நாட்டிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு. இந்நாடு சங்க காலத்திலிருந்தே பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. இங்கு இரண்டு மடங்கள் தோன்றின. ஒன்று: வீரசைவ மடமான பேரூர் ஆதீனம். மற்றொன்று: கௌமார மடம். இதில் இரண்டாவதாக இடம்பெற்ற கௌமார மடாலாயம் சிறப்பு மிக்கது. இதன் வளாகத்தில் தமிழாய்வுக்காகவே நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பெற்றுள்ளது. இந்நூலகம் குறித்த பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது. அமைவிடம் கோவை மாநகருக்கு வடக்கே சிரவை அமைந்துள்ளது. இவ்வூர் பிற்காலத்தில் சிரவணபுரம் என்பதாகவும் சரவணம்பட்டி என்பதாகவும் திரிந்தது. அதற்கு அருகாமையில் உள்ள சின்னவேடம்பட்டியில்தான் தண்டபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. அதனருகில் அமைந்துள்ள கௌமார மடாலயத்தில்தான் தமிழாய்வு மைய நூலகம் இயங்கி வருகின்றது.  நூலகத்தின் தோற்றம் கௌமார மடாலயம் அடிப்படையில் தன்னை ஒரு சமய நிறுவனமாக அடையாளப்படுத்திக் கொண்டது. இருப்பினும் சமயம், இலக்கியம், இலக்கணம், பொதுக்கல்வி, மருத்துவம், விளையாட்டு எனப் பல்துறை சார்ந்த பணிகளையும் செய்து வருகின்றது. சிரவையாதீனம் தவத்திரு சுந்தர சுவாமிகளின் சீரிய முயற்சியால் 28.11.1997ஆம் ஆண்டு 1200 புத்தகங்களுடன் நூலகர் டாக்டர் பத்மநாபன் அவர்களால் தொடங்கப்பட்டது. முதன்மை நோக்கம் சிரவையாதீனத்தின் முதல்பணி நூல்கள் இயற்றல், உரைகாணல், பதிப்பித்தல், இதழியல் போன்றவை ஆகும். ஆபத்து இல்லாத ஒரு நல்ல நண்பன் நூல் என்பதற்கு ஏற்ப சிறந்த நண்பனாகத் திகழும் நூல்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் அரும்பணியை இம்மைய நூலகம் முக்கிய நோக்கமாகக் கொண்டு கிடைத்தற்கரிய பல நூல்களை நிலைமின் படிகளாக (Xerox Copy) சேமித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  மாந்தர் மனக் கோட்டம் தீர்ப்பது நூல் என்பதற்கு ஏற்ப தடுமாறிய உள்ளங்களைச் சீர்படுத்திச் செம்மை பெறச் செய்யும் நூல்களின் தொகுப்புக் களஞ்சியமாகவும், அறிவாலயமாகவும், அறிவுமலர்ச் சோலையாகவும் விளங்குகின்றது இந்நூலகம் என்கின்றார் சிரவையாதீனக் கவிஞரும் நூலகருமான ப.வெ.நாகராஜன். நூல்கள் விவரம் சிரவையாதீன தமிழாய்வுமைய நூலகத்தில் சுமார் 8100 தமிழ் நூல்களும், 1000 சிறப்பு மலர்களும், 510 ஆங்கில நூல்களும், 55 பிறமொழி நூல்களும், அச்சில் கிடைக்காத சில அரிய நூல்களும் உள்ளன. ஆதீன அன்பர்கள், நூலாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் தமிழகத்தின் தலை சிறந்த பேராசிரியர்கள் பலரும் அரிய நூல்களை இந்நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தந்துள்ளனர். இந்நூலகத்தில் சாமிநாதம், உ.வே.சா. முன்னுரைகள், சங்க இலக்கிய நூல்கள், பக்தி...

Read More

மரபும் நானும் (தகடூர்த் தமிழ்க்கதிர் அவர்களின் தமிழ்ப்பணிகள்)

அதியமான் ஔவை அருந்தமிழ் வளர்த்ததும் நதியாம் காவிரி நன்னடைப் பயின்றதும் இதழுடன் தருமம் இனிதே அமைத்ததும் அதிபுகழ் தகடூர் ஆனநல் ஊரே     எனச் சான்றோர்களால் பாராட்டப்பட்ட தகடூர் அழகிய மலைகள் சூழ இயற்கை அரண்மிக்கதாய் விளங்குகிறது. நன்செய், புன்செய் என இருவகை வளமும் மிக்கது. அதியமான் கொடையைப் பின்பற்றி பலரும் வாழ்ந்ததால் ‘தருமபுரி’ என தகடூர் பெயர் பெறலாயிற்று. ஔவைக்கு உயிரை நீண்டநாள் காக்கும் நெல்லிக்-கனியை அதியமான் தந்து வாழ்த்தியதால் இலக்கியத்திலும் அதியமான் புகழ் நிலைத்து நிற்கிறது.           அதியமானின் தாய் நாகையம்மை தென்பெண்ணை ஆற்றின் அருகே அமைந்த இன்றைய கம்பைநல்லூர் ஊரில் சனக்குமார நதியருகே சிவலிங்கம் கண்டு வணங்கி மகிழ்ச்சி பெற்றதால் அங்கு அவ்வப்பொழுது வந்து வணங்கி மனநிறைவு பெற்றார். இதன் காரணமாக மன்னர் அதியமான் குடும்பமும், புலவர் ஔவையாரும் வந்து சிவலிங்கத்தை வணங்கிப் போற்றினர். அதியமான் தாய் நாகையம்மையின் வேண்டுதலை ஏற்று, இங்கே அழகிய சிவன் கோயிலைக் கட்டி வணங்கிப் போற்றினார். இன்றும் ஏராளமானோர் வழிபடும் தலமாக கம்பைநல்லூர் விளங்குகிறது. பழங்காலத்தில் இவ்வூர் அதியமானின் தாயார் பெயரால் நாகையம்பள்ளி என்று பெயர் பெற்றது. அத்தகைய அழகிய கம்பைநல்லூரில் 15-02-1962-ல் திருப்பதி-பூங்காவனம் இணையருக்கு மூன்றாம் மகனாகத் தகடூர்த் தமிழ்க்கதிர் பிறந்தார். இவருடன் ஏழ்வர் பிறந்தனர். மொத்தம் நான்கு ஆண் மக்களும், நான்கு பெண் மக்களும் என் பெற்றோரால் பெற்று வளர்க்கப்பட்டனர். என் மூத்த அண்ணார் கௌரன் அவர்கள் பின்னாளில் போற்றப்படும் அருமைமிக்க மாமனிதர் ஆனார். இவரிடம் இலக்கியம் படைக்கும் ஆர்வத்தைப் பெற்றார் தகடூர்த் தமிழ்க்கதிர்.           என் தந்தையார், கிருஷ்ணபூசாரியின் திருமகன் திருப்பதி நிலக்கிழார் ஆவார். வேளாண்மை செய்துக் கொண்டே வாழ்நாள்வரை சித்த மருத்துவமும் செய்து வந்தார். என் மூதாதையர்களும் பரம்பரைச் சித்த மருத்துவராக விளங்கி ஆயிரக்கணக்கானோர் உயிர்களைக் காத்தனர். மருத்துவமனைகள் அருகே இல்லாத அந்நாளில் பாம்புவிடம் போன்ற மருத்துவம் செய்து புகழ் பெற்றவர்களாக விளங்கினர். ஆற்றின் பாலம் இல்லாத காலத்தில் ஆற்றில் கூடை மூலம் வழிப்பயணம் மேற்கொள்ளவும் உதவி புரிந்தனர். கம்பைநல்லூர் பெரிய ஏரி மழை வௌ;ளத்தால் உடைவதைத் தடுத்து நிறுத்தி சாதனை புரிந்து சன்மானம் பெற்ற பாராட்டிற்குறிய பரம்பரையாகவும் திகழ்ந்தனர். என் பரம்பரை நாட்டுக்கவுண்டர் பரம்பரையாக சிறந்து விளங்கியது. தருமபுரி அருகே...

Read More

தமிழ் நிகண்டுகள், இலக்கண நூல்களில் மருதநில மக்கள்

குறிஞ்சி – முல்லை – மருதம் எனத் தமிழ்மக்களின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கருதுவர். இம்மருதநில மக்களே படிப்படியான வளர்ச்சி பெற்று உணவு தேடும் வாழ்க்கையிலிருந்து மானிட சமூகத்தை உணவு உற்பத்திக்கு மாற்றியவர்கள். வர்க்கப்பிரிவுகள் தோன்றினும் வேளாண் உற்பத்தி நிலைபெறச் செய்தது இந்நிலப்பரப்பில்தான். காட்டைத் திருத்திக் கழனியாக்கி, ஆற்றைத் திருப்பி நீரைத்தேக்கி குடும்பம் என்ற அமைப்பு உருவாகக் காரணமானதும்  அரசு உருவாகக் காரணமாக இருந்ததும் இந்நிலப்பகுதியில்தான். அப்படிப்பட்ட மருதநிலத்தில் எத்தனை வகையான மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிகண்டுகள், இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மருதநில மக்கள் பற்றிய குறிப்புக்களை இலக்கியத்தோடு பொருத்திக்காட்டி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இலக்கணத்தில் மருதநிலமக்கள் தமிழ் இலக்கணத்தில் முதன்மையாகக் கருதப்படுவது தொல்காப்பியம். மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல் “ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968) என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் கூறுவதிலிருந்து ஒவ்வொரு நிலத்திற்கும், அந்நிலத்தில் வாழ்கின்ற மக்கட்பெயரினைச் சுட்டிக்காட்டும் மரபு உள்ளதனை அறிய முடிகின்றது. நிகண்டினைப் போலவே ஏறத்தாழ அதே காலகட்டத்தில் (கி.பி. 9- ஆம் நூ.) தோன்றியதெனக் கருதப்படும் நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் ‘உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்’ (நம்பி. 23) என்ற நூற்பாவில் மருதநில மக்களை உழவு செய்கின்றவர;கள் என்ற அளவிலேயே அந்நில மக்களைப் பற்றியதான குறிப்பைத் தருகிறது. புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும், “களமர் கதிர்மணி காலோகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு” (புறப்.15) இவ்வாறு  இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர்  போன்ற ஒரு சில பெயர்களில்  மருதநில மக்கள்   அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது. தமிழ் நிகண்டுகளில் மருதநிலமக்கள் தமிழ்நிகண்டுகளில் மருதநில வேளாண் மக்களாக உழவர், வினைஞர், மள்ளர், கம்பளர், தொழுமர், களமர் என்று பல நிலைகளில் மருதநிலத்து மக்களைப் பற்றிக் குறிப்புக் காணப்படுகிறது. இதனைச் சேந்தன் திவாகர நிகண்டு, “களமர் தொழுவர் மள்ளர் கம்பளர் வினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் (என்று அனையவை) கழனிக் கடைந்தவர் (பெயரே)” (திவாகரம்.130) என்று குறிப்பிடுகிறது. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு, “களமர் உழவர் கடைஞர்...

Read More

மணிமேகலையில் மொழிக்கூறுகள்

மணிமேகலைக் காப்பியத்தைத் தொடக்கம்முதல் படிக்கும்போது வடசொற் கலப்பும் புத்தமதக் குறியீடுகளும் மிகுந்திருப்பதை எளிதில் காணலாம். தமிழில் பல்சமயக் கோட்பாடுகளை வாpசையாக எடுத்துக்காட்டும் முதல்நூல் மணிமேகலையே.        மணிமேகலையானவள் பிற மதங்களின் மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்து அவற்றைப் படிற்றுரைகள் என ஒதுக்கிப் பின் புத்தமதத்தைத் தெளிந்து தழுவினள் என்பதே கதைப்போக்காக அமைகின்றது. சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்ற மூன்றும் பிறமொழிச் சொற்கள் நிரம்பிய காதைகளாக உள்ளன. பிறகாதைகளிலும் அயன்மொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. சாத்தனார் வடமொழி அளவை நூற்குறியீடுகளை மிகுதியும் எடுத்துக்காட்டியுள்ளார். பக்கப் போலி யொன்பது வகைப்படும்                    பிரத்தி யக்க விருத்தம் அனுமான                    விருத்தம் சுவசன விருத்தம் உலோக                    விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர                    சித்த விசேடனம் அப்பிர சித்த                    விசேடியம் அப்பிர சித்த வுபயம்                    அப்பிரசித்த சம்பந்தம்                  (மணி.29:147-53) இக்குறியீடுகளும், இவை போன்ற மற்ற வடசொற்கள் இருந்தாலும் வடவெழுத்து காப்பியம் முழுவதும் பரவியுள்ளது. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ                    எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே  (தொல்.சொல்.401) எந்த வடவெழுத்து எந்தத் தமிழ் எழுத்தாக மாற வேண்டும் என்று தொல்காப்பியம் விதந்து கூறவில்லை.  சாத்தனார் தம் மொழிநுட்பத்தால் அயலொலிகளை முறையோடு தமிழ்ப்படுத்திக் காட்டியுள்ளார். வடசொற்களும் தொடர்களும் மணிமேகலையில் வடசொற்களும் தொடர்களும் மிக அதிகமாக இடம்பெற்றுள்ளன. எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்திலிருந்து எடுபடுமாம் இலக்கணம் என்பது பாட்டியல் நூல் கூறும் இலக்கிய மரபுக்கான வரையறையாகும்.  அவ்வகையில் மணிமேகலைக் காப்பியம் பிற்கால இலக்கண நூல்கள் சிலவற்றுக்கு விதியமைக்க வழிகாட்டியாய்த் திகழ்ந்துள்ளது எனலாம். இதனை, தேசநாமசாதி, சாமானியம், திட்டாந்தம், அநன்னுவயம், கௌடிலச் சாமம், விசேடியம், பிரத்தியக்கம், விசேடனம், உபயதன்ன விகலம், தன்மாத்திகாயம், பிக்குணி, சேதியம் இவ்வாறு வருவன பலவுள.  வீரசோழியா், நேமிநாதா், நன்னூலார் இன்ன வடவெழுத்து இன்ன தமிழ் எழுத்தாகும் என்று விரிவான ஒலிமாற்று விதிகள் கூறுவதற்கு வழிகாட்டியது மணிமேகலைக் காப்பியமே (1975:31) என்கிறார் வ.சுப.மாணிக்கம். மேலும், பௌத்தர் கூறும் சத்தியத்தை வாய்மை எனவும், துவாதச நிகானங்களைப் பன்னிரு சார்புகள் எனவும், தருமத்தை அருளரம் எனவும், புத்த தன்ம சங்கத்தை முத்திர மணி எனவும் தரும சக்கரத்தை...

Read More

ஆண்டலைப்புள் : ஆந்தையா? கோழியா?

பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ‘ஆண்டலை’ எனும் உயிரினத்தைப் பற்றி விளக்கம் தரும் உரையாசிரியர்கள் ‘ஆந்தை’ எனவும் ‘கோழி’ எனவும் (குழப்பத்துக்குள் நுழைய விரும்பாமல்) ‘ஆண்டலைப்புள்’ எனவும் குறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஆண்டலை எனும்  உயிர் எவ்வினத்தைச் சேர்ந்தது என்பதை நிறுவும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது. ஆண்டலை : இலக்கியப் பதிவுகள்                                                                                  ஆண்டலை குறித்த இலக்கியப் பதிவுகளாகப் பின்வருவன அமைகின்றன. “பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின் ஆண்டலை வழங்கும் கானுணங்கு கடுநெறி” (பதிற்.25:7-8) “ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே” (கலி.94:6) “சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் புலவூண் பொருந்திய குராலின் குரலும் ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்” (மணி.6 : 75-77) “அழுகுரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்” (பட்டினப்.258) “மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் ஆண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர” (முருகு.226-27) “கூகையோடு ஆண்டலை பாட ஆந்தை கோடதன் மேற்குதித்து ஓட…” (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்-3) “ஊமைக் கூகையும் ஓரியும் உறழ்உறழ் கதிக்கும் யாமத் தீண்டி வந்த ஆண்டலை மாண்பில அழைக்கும்” (நீல.தரும.29) “நீண்டபலி பீடத்தில் அரிந்து வைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத் தன்னினம் என்றெண்ணி ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ” (கலிங்கத்.4:16) ஆண்டலையின் இயல்புகள் மேற்குறித்துள்ள பாடற்குறிப்புகளின்வழி ஆண்டலையின் இயல்புகளாகப் பின்வருவனவற்றை வருவிக்க முடிகின்றது. ஆண்டலை கொடிய காட்டில் வாழும் உயிரி. இது பிணங்களை உணவாகக் கொள்ளும் உயிரி. கூகையோடு சேர்ந்து ஆண்டலை ஒலியெழுப்பும். இது யாமத்திலும் ஒலியெழுப்பும் உயிரி. பலிபீடத்தில் நேர்த்திக்கடனாக அரிந்து வைக்கப்படும் வீரர்களின் தலையைத், தன் இனத்தைச் சேர்ந்த உயிரியின் தலையோ என ஐயுற்றுப் பார்ப்பது. எனவே, இது ஆணின் தலை போன்ற தலையுடைய உயிரி. ஆண்டலை : இலக்கியப் பதிவும் உரைக்குறிப்பும் திருமுருகாற்றுப்படையில் இடம்பெறும் ‘ஆண்டலை’ பற்றிய குறிப்புக்கு ஓர் உரையாசிரியர் கோழி என்றே மயங்கிப் பொருள் கூறினார் என்பார் பி.எல்.சாமி (1976:303). முருகாற்றுப்படையில் இடம்பெறும் குறிப்பானது ‘ஆண்டலைக் கொடி’ என அமைவதால் (227) ‘கோழிக் கொடியோன்’ என வழங்கப்பெறும் முருகப் பெருமானின் கொடியை இக்குறிப்பு அடையாளப்படுத்துவதாக எண்ணி அவ்வுரைகாரர் ஆண்டலைக்கொடி என்பதற்குக் கோழிக்கொடி எனப் பொருள் கொண்டிருக்கலாம். “ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே” எனும் கலிப்பாடலடியில் இடம்பெற்றுள்ள ஆண்டலைக்குப் பொருள் கூற வந்த உரையாசிரியர்களுள் சிலர், ஆண்டலைப்புள் (நச்சினார்க்கினியர், புலியூர்க்கேசிகன், சுப.அண்ணாமலை,...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Next publishing us! 2018 (FEBRUARY)

அடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.

Current Issues – Nov 2017