Month: February 2016

நீலகேசியில் அரவாணிகள் சித்திரிப்பு

நீலகேசி – நூல் வரலாறு நீலகேசி நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும். பௌத்த சமயக் காப்பியமாகிய குண்டலகேசிக்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம். இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.  இது ஒரு சமயக்கருத்து நூல். யாப்பருங்கல விருத்தியுரை இதனை நீலம் எனச் சுருக்கிக் கூறுகின்றது. சமயதிவாகர வாமன முனிவர் எழுதிய சமயதிவாகரவிருத்தி எனும் சிறந்த உரை ஒன்று இந்நூலுக்கு உள்ளது.  இந்நூல் 10 சருக்கங்களையும் 895 செய்யுட்களையும் கொண்டுள்ளது. குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலையுடையவள் என்று பொருள்படுவதைப் போல நீலகேசி என்பது கருத்த கூந்தலையுடையவள் என்று பொருள்படும். குண்டலகேசிக் காப்பியத்தை மறுப்பதற்கே நீலகேசிக் காப்பியம் எழுந்தது என்பதை உறுதி செய்யும் விதமாக இதில் குண்டலகேசி வாதச் சருக்கம் என்ற பகுதி காணப்படுகிறது. நீலகேசி கதைச்சுருக்கம் நீலகேசி கதை வேறு எந்த நூலிலும் காணப்படாதது. நீலகேசி ஆசிரியர் ஒருநாள் தன் கனவில் கண்ட கதையை அப்படியே நூலாக்கியதாகக் கூறப்படுகின்றது. பாஞ்சால நாட்டில் புண்டவர்த்தனம் எனும் நகரருகே உள்ள சுடுகாட்டில் இடப்படும் உயிர்க்கொலையை முனிச்சந்திரா் எனும் சமண முனிவர் தம் தவ வலிமையால் தடுத்தார். அதனால் சினம் கொண்ட சுடுகாட்டுக்காளி, பழையனூர் நீலகேசி எனும் பேயரசியை முனிவரின் தவத்தைக் கலைக்க ஏவியது. ஆனால் முயற்சியில் தோற்ற நீலகேசி முனிவரின் மாணவியாகி, சமண சமயக் கருத்துக்களைத் தெளிவாக உணர்ந்து தடுக்க வாதத்திறமையும் கைவரப் பெற்றவளாகிறாள்.  பிற சமயவாதிகளோடு வாதிட்டுச் சமண சமயத்தின் பெருமையை நிலைநாட்டுகிறாள். பௌத்த சமயத்தைச் சார்ந்த குண்டலகேசியுடனும் வாதிட்டு வென்று சமண சமயத் தலைவியான வரலாறே நீலகேசிக் காப்பியம் கூறும் கதை. நீலகேசியில் அரவாணிகள் சித்திரிப்பு சமணர்களின் தமிழ்த்தொண்டு மிகவும் போற்றத்தக்கதாகும்.  சமணர்கள் இயற்றியுள்ள இலக்கண, இலக்கியங்கள் அனைத்தும் சமணக் கொள்கையைப் பின்பற்றி எழுதியுள்ளமையைக் காணமுடிகிறது. ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களையும், கடந்து ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் இடைநிலையில் வாழ்ந்த மனிதர்களையும் அவர்களின் வேதனைகளையும் கூறுவதாக நீலகேசி என்னும் காப்பியம் அமைகிறது. இவர்களுள் ஒரு பிரிவினரையே தற்போது அரவாணிகள் என அழைக்கின்றார்கள். அரசு “மூன்றாம் பாலினம்”, “மாற்றுப் பாலினம்” (TRANS GENDER) எனக் குறிப்பிடுகின்றது. இத்தகைய இயல்பிலி மனிதர்களை நீலகேசி அலி, பேடி என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் காலத்திலும் இவ்வியல்பிலி மாந்தர் வாழ்ந்துள்ளமையைத் தொல்காப்பியர் பதிவு...

Read More

அடையாளம் : வாரியார் நூலகம்

நொய்யல் ஆற்றின் வளம் கொழிக்க வேளாண் செழித்த ஊராக விளங்கிய கோயம்புத்தூர் இன்று தமிழகத்தின் முதன்மையான தொழில் நகரமாக (சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம்) விளங்கி வருகின்றது. கல்வி நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிறைந்து பெருகி வரும் இவ்வூரில் பழுமரம் நாடும் பறவைகள் போல மக்கள் வந்து குடியேறுகின்றனர். இத்தகு சிறப்புமிக்க கோயம்புத்தூரில் நோக்கத்தாலும், தோற்றக் காரணத்தாலும் ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் சிறப்புடன் விளங்குகிறது வாரியார் நூல் நிலையம். அமைவிடம் கோவையிலிருந்து மருதமலை செல்லும் சாலையில் வடவள்ளி அருள்மிகு காட்டுவிநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் வெளிப்புறக் கீழ்த்தளத்தில் இவ்வாரியார் நூல்நிலையம் அமைந்துள்ளது. நூலகத்தின் தோற்றம் அருள்மிகு காட்டுவிநாயகர் அறக்கட்டளையானது அப்பகுதி மக்களுக்குத் தமிழர் பண்பாடு, இசை, நடனம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறது. இவ்அறக்கட்டளையின் செயலர் முனைவர் அ.பழனிச்சாமி அவர்களின் எண்ணங்களுக்குக் கொடுத்த செயல்வடிவம் தான் வாரியார் நூல் நிலையம். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் திறக்கப்பட்ட இந்நூலகம் வாசிப்பை ஊக்குவிப்பதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு வழிகோலுவதாய் அமைந்துள்ளது. முதன்மை நோக்கம் “நூலளவே யாகும் நுண்ணறிவு” என்னும் ஔவையாரின் வாக்கிற்கிணங்க அதிக நூல்களைக் கற்பதன் மூலமே ஒருவர் நுண்ணறிவு உடையவராய்த் திகழமுடியும். அவ்வகையில் அதிக இளைஞர்கள் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும், அதன்மூலம் சமுதாயம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதனை முதன்மை நோக்கமாய்க் கொண்டு  இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் செயலர் முனைவர் அ.பழனிச்சாமி அவர்கள், “நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்களே இந்தச் சமூகத்தை வழிநடத்தப் போகிறவர்கள். எனவே இளைஞர்களை நெறிப்படுத்தும் நல்ல நூல்களை வாசிக்கத்  தூண்டுவதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு வித்திடலாம் என்பதால் இளைஞர்களுக்காக மட்டுமே இந்நூலகம் உருவாக்கப்பட்டது” என்கிறார்.   நூல்கள் விவரம் இந்நூலகத்தில் அறக்கட்டளையின் சார்பில் வாங்கப்பட்ட நூல்களுடன், சமூக ஆர்வலர்கள் பலரும் அன்பளிப்பாக வழங்கிய நூல்களும் சேர்த்துத் தற்போது 2453 நூல்கள் உள்ளன. அவற்றில் மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், திரு.வி.க., கிருபானந்த வாரியார் முதலியோரது அறம்சார் நூல்களுடன் ஸ்ரீமத் பகவத் கீதை, பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், திருவருட்பா, பெரியபுராணம் உள்ளிட்ட ஏராளமான சமயம்சார் நூல்களும் காணப்படுகின்றன. கல்கியின் அலைஓசை, பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் உள்ளிட்ட பல்வேறு...

Read More

தொல்காப்பியர் காலம்

இப்பொழுதுள்ள இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியந்தான் மிகப் பழமையானது. இதனை இயற்றிய தொல்காப்பியர் வடமொழிப் பேரிலக்கணத்தைச் செய்த பாணினிக்கு முந்தியவர் ஆவார் என்று சில தமிழறிஞர்கள் கூறி வருகின்றார்கள். இக்கொள்கைக்குரிய முக்கியக் காரணம் தொல்காப்பியரோடு உடன்கற்ற ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் தொல்காப்பியரை ஐந்திரத்தில் வல்லவராவார் எனக் குறித்துள்ளமையேயாகும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில் வரும் ஓர் அடி. ஐந்திர வியாகரணம் பாணினீயத்திற்கு முற்பட்டதென்றும் பாணினீயம் தோன்றியபின் வழக்கொழிந்து விட்டதென்றும் இவர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியனார் காலத்துப் பாணினீயம் உளதாயிருக்குமேல், தொல்காப்பியர் அதனையே கற்று இதில் சிறந்து விளங்கியிருப்பார். பாணினீயம் கற்று வல்லவர் என்று அவரைக் கூறாமையினாலே அவர் பாணினிக்கு முன்பு வாழ்ந்தவர் என்று இந்த அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள்1. ஐந்திரம்           இக்காரணத்தை நாம் ஊன்றி நோக்கினால் அது வலிமையுடையதாகாது என்பது விளங்கும். ஏனெனில் ஐந்திரம் பாணினீயத்திற்குப் பின் வழங்கவில்லை என்று ஒரு தலையாகத் துணியமுடியாது. மேலும், ஐந்திரம்2 ஒரு தனிப்பட்ட இலக்கணமாக எப்பொழுதாவது இருந்தது உண்டா என்பதும் ஐயப்பாட்டிற்கு இடனாயுள்ளதே. பாணினீயினுடைய இலக்கண முறை ஸமிஜ்ஞை முதலியவற்றால் நிறைந்து இயற்கையான முறைகளோடு பெரிதும் மாறுபட்டுள்ளது. இதற்கு மாறாக ஓர் எளிய, இயற்கையான – யாவருக்கும் விளங்கும்படியான – வகையில் இலக்கண அமைப்பு முறை ஒன்று உளதாயிருத்தல் வேண்டும். பிராதிசாக்கியத்தில் இந்த எளிய முறை காணப்படுகிறது. இம்முறையை நமது புராணங்களில் கூறப்படும் இந்திரன் தோற்றுவித்தான் என்று நம்பினர். இவன் இந்த எளிய முறையை அமைத்து இலக்கண நூல் ஒன்று செய்தான் என்றும் கற்பித்தனர். எளிதாயிருந்தபடியாலே இம்முறையைப் பலர் கையாண்டார்கள். தனியான ஓர் இலக்கண மதமாகவும் இது கொள்ளப்பட்டது. இந்த மதம்தான் ஐந்திரம் எனப் பெயர் பெறலாயிற்று. பாணினி ஆசிரியர், பதஞ்சலி ஆசிரியர், காசிகாவிருத்தி ஆசிரியர் இவர்களுள் ஒருவரேனும் இம்மதத்தை ஐந்திரம் என்ற பெயரால் அழைத்ததில்லை. வடமொழி இலக்கணங்களை ஆராய்ச்சி செய்த கீல்கார்ண் (Kiwelhorn), பெல்வெல்க்கர் (Belvalkar) என்ற இரு பேராசிரியரும், ஐந்திர மதத்தில் கூறப்பட்டுள்ள பொருள்கள் பாணினீயத்திற்கு முற்பட்டதாயினும், ஐந்திரமதமும் அதன் பெயரும் ஏற்பட்டமை அதற்குப் பிற்பட்ட காலத்தேதான் என்று கருதுகிறார்கள்3. ஸர்வவர்மன் சுமார் கி.பி. முதல் நூற்றாண்டில் இயற்றிய காதாந்த்ரம் ஐந்திர மதத்தைச் சார்ந்தவற்றுள் சிறந்தது என்பர். இந்த இலக்கணம் கௌமாரம் அல்லது காலாபம்...

Read More

திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்?

சுருக்கம் (Abstract) பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகிய திருக்குறள் பழங்காலத்தில் சுவடிகளில் எழுதப்பட்டுக் கற்கப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. பனையோலை எழுதும்முறைகளில் இருந்த சிக்கல்கள் எண்ணற்றவை. அச்சுக்கலையின் வருகை எழுதுவதில்; கற்பிப்பதில் பலவசதிகளைப் பரப்பியது. கி.பி.1554இல் போர்ச்சுகலில் இலிஸ்பன் நகரில் ரோமன் எழுத்துக்களில் அச்சிடப்பட்ட லூசோ தமிழ் வினா விடை என்பதே தமிழின் முதல் அச்சு நூலாகும் என்பர். அதன் பின்னர்த் தமிழ் இலக்கியங்களில் அச்சான முதல் நூல் திருக்குறள் ஆகும் என்ப. அந்நூல் 1812இல் அச்சானது. அப்பதிப்பின் பதிப்பாசிரியர் பற்றிய செய்திகளை எடுத்துரைப்பது இக்கட்டுரை. குறிச்சொற்கள் (Keywords) திருக்குறள், அம்பலவாணக்கவிராயர், பதிப்பாசிரியர், முதல்பதிப்பு, ஞானப்பிறகாசன், மாசத்தினசரிதைஅச்சுக்கூடம், 1812. உரைக்களம் / முன்னுரை (Introduction) தமிழ் இலக்கியங்களில் முதல் அச்சு கண்ட நூல் எனக் கருதப்படுகின்ற திருக்குறள் 1812 இல் முதற்பதிப்பாக வெளிவந்தது. அப்பதிப்பு தஞ்சை நகரம் மலையப்பபிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் பதிப்பிக்கப்பட்டது எனப் பலரும் கருத்துரைத்துள்ளனர். அப்பதிப்பின் பதிப்பாசிரியர் அம்பலவாணக் கவிராயர் என்றும், பதிப்பாசிரியர் தெரியவில்லை என்றும் கூறுப. அக்கருத்துக்களின் பொருத்தத்தை ஆராய்ந்து விளக்குவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். தரவுகளும் ஆய்வு அணுகுமுறைகளும் (Materials and Methods) திருக்குறள் 1812ஆம் ஆண்டுப் பதிப்பு இவ்வுரைக்கு முதன்மைத் தரவாகும் (இப்பதிப்பு தற்போது பார்வைக்குக் கிட்டவில்லை. எனினும், அப்பதிப்பின் முதல் இருபக்கங்கள் கிடைத்துள்ளன. ஒருபக்கம் படப்படியாகவும், மற்றொருபக்கம் நூல்களில் எடுத்தாளப்பட்ட நிலையிலும் கிடைத்துள்ளது. அவையே இங்கு மூலங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன). திருக்குறள் பற்றிய ஆய்வு நூல்களும், அச்சுக்கலை பற்றிய நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. சிக்கலை மையமிட்ட இந்த ஆய்வு, விளக்கமுறை (Descriptive Method), ஒப்பீட்டுமுறை (Comparative Method), மதிப்பீட்டுமுறை (Evaluative Method) ஆகியவற்றைப் பின்பற்றி, வரலாற்று அணுகுமுறையில் (Historical Approach) அமைந்ததாகும். முடிவுகள் (Results) பதிப்பாசிரியர் கருத்து வேறுபாடுகள்             1812 இல் வெளிவந்த திருக்குறள் மூலபாடம் என்னும் பெயரிய நூலே தமிழ் இலக்கிய நூல்களில் முதன்முதலில் அச்சானநூல் எனக் கருதுப (தி. தாமரைச்செல்வி  2012: 24). திருக்குறள் மூலபாடம் எனத் தலைப்பிடப்பட்டிருந்தாலும், அப்பதிப்பானது நாலடியார்; திருவள்ளுவமாலை ஆகியவற்றின் மூலபாடங்களையும் கொண்டது என அறிஞர் கூறுப. ‘19ஆம் நூற்றாண்டில் அச்சான இலக்கியநூல்கள்’ என்னும் தலைப்பில் 1812ஆம் ஆண்டுத் திருக்குறள், நாலடியார்ப் பதிப்பினைக் குறித்துள்ள மயிலைசீனீ. வேங்கடசாமி (1962:...

Read More

ஔவையார் பாடல்களில் பெண்ணியம்

பழங்கால இலக்கியங்களை நோக்கும் போதுஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தாலும்பாரம்பரியமாகப் பெண்கள் பற்றி வழங்கி வருகின்ற புனைவுக் கருத்துகளைத் தகர்ப்பனவாக அமைந்தாலும் ஆணாதிக்கச் சார்பானவையாகவேகொள்ளப்படும். இதற்கு மாறாக அவை, ஆண் – பெண் சமத்துவத்தை ஏதோ வகையில் மறுப்பனவாக அமைந்தாலும், பெண்கள் பற்றி – அவர்களை அடிமையாக்கும் வண்ணம் – காலம் காலமாக வழங்கி வருகின்ற சமூகப் படிமங்களை மேலும் வலியுறுத்துவனவாக அமைந்தாலும்அத்தகைய இலக்கியங்கள் பெண்ணியத்திற்கு எதிரானவை என்றே கருதப்படும். சங்ககாலப் புலவர்களின் கவிதைகளை ஆராயும்போது இந்த அளவுகோல்களின்  வாயிலாகவே அவர்தம் சிந்தனைகள் பெண்கள் சார்பானவையா அன்றிப் பெண்களுக்கு எதிரானவையா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் ஓரே ஆசிரியரே, ஒரு சமயத்தில் அல்லது ஒருசில கருத்துகளில் பெண்களுக்குச் சார்பானவராகவும், ஒரு சில கருத்துகளில் பிறிதொரு சூழ்நிலையில், பெண்களுக்கு எதிரான கருத்தமைவு கொண்டவராகவும் புலப்படுத்தல் கூடும். அவ்வாறு அமைந்தால் அவர்தமது காலத்தினாலும் சூழலினாலும் தம்மீது ஆதிக்கம் செலுத்துகின்ற சிந்தனைகளிலிருந்து எவ்வளவு விடுபட்டுள்ளார் அல்லது அதற்கு ஒத்துப்போயிருக்கிறார் என்பதை வைத்தும், மொத்தத்தில் அவரது சிந்தனைகள் பெரும்பான்மை அளவில் எவ்வாறு இயங்குகின்றன என்பதை வைத்தும் அவரை மதிப்பிட முடியும். அகம் – புறம் பாகுபாடு சங்க இலக்கியங்கள் அகம் – புறம் என்னும் இருதிணைப் பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளன. அகம் என்பது தலைவன் தலைவி இருவருக்கு மட்டுமே உரிய அந்தரங்க நடவடிக்கைகள், உணர்வுகள் என்றும், புறம் என்பது அனைவரும் அறிய / உணரத்தக்க பொதுவான நடவடிக்கைகள் அல்லது உணர்வுகள் என்றும் கருதப்படுகின்றன. அகப்பாடல்களில் தலைவி, தலைவனுக்கே உரியவளாக – அவன் அன்பை யாசிப்பவளாக  – அவன் பிரிந்தால் அவனது வரவை எதிர்நோக்குபவளாக – அவன் அலட்சியத்திற்கு வருந்துபவளாக மொத்தத்தில் அவனே உயிராக, அவனே வாழ்வாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் தலைவனோ, தலைவியின் அன்பை யாசிப்பவனாக – அவள் காதலை மட்டுமே போற்றுபவனாக – அவள் பிரிவிற்கு வருந்துபவனாகக் காட்டப்படுகின்ற இடங்கள் குறைவு.பாலைப் பாடல்களில் ஒரு சில மட்டும் இத்தகைய போக்கின என்று இரா.பிரேமா தன்னுடைய ‘பெண்ணியம் – அணுகுமுறைகள்’ என்ற நூலில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.இதனை ஆணின் சமூக மேலாண்மையைக் காட்டுவதாகவும், பெண்ணின் அடிமைத் தன்மையைக் காட்டுவதாகவும் கொள்ள இடமுண்டு. புறப்பாக்கள் அனைத்தும் தலைவனுக்கே உரியவனாக அமைந்துள்ளன.குறிப்பாக மன்னனின் வீரம், கொடை, புகழ் பற்றிப்...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Next publishing us! 2018 (FEBRUARY)

அடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.

Current Issues – Nov 2017