Month: August 2015

கவிஞர் வெள்ளியங்காட்டான் பார்வையில் பிரம்மம்

  உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதனே உச்சம். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவே உச்சம். அறிவு வளரவளர மனிதன் வளர்கிறான். மனிதன் வளரவளர அறிவு வளர்ச்சியடைகிறது. அறிவு வளர்ச்சிக்கு உலகின் அனைத்து மனித இனங்களும் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளன. உலகின் ஒவ்வொரு பெருநிலப்பரப்பும் (நாடு) ஒரு குறிப்பிட்ட அறிவு வயப்பட்டதாக, ஒரு குறிப்பிட்ட சிந்தனையைத் தன் வாழிடத்திற்கு ஏற்ப வளர்த்தெடுத்துள்ளது. இந்நிலையில் இன்றைய இந்தியா என்ற பண்டைச் சிந்து நிலவெளிப்பரப்பில் ஆன்மீகத்தை முன்னிறுத்திய அறிவு அதாவது மெய்ஞ்ஞான விஞ்ஞானம் என்ற அறிவுத்துறை வளர்ந்துள்ளது. இதில் ‘பிரம்மம்’ என்ற கருத்தாக்கத்தைக் கவிஞர் வெள்ளியங்காட்டான் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. கவிஞர் வெள்ளியங் காட்டான் சிறுகுறிப்பு கவிஞர் வெள்ளியங்காட்டானின் இயற்பெயர் இராமசாமி. பெற்றோர் நாராயணசாமி நாயுடு, காவேரியம்மாள். இவர் கோவை மாவட்டம் வெள்ளியங்காடு என்ற கிராமத்தில் 21.08.1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1942 முதல் கவிதை, காவியம், கட்டுரை, சிறுகதை, பொன்மொழிகள், மொழிபெயர்ப்புப் போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார். சிலகாலம் கோவையிலிருந்து வெளிவந்த நவஇந்தியா இதழில் மெய்ப்புத்திருத்துநராகப் பணியாற்றியுள்ளார். 1960 முதல் கர்நாடகம் சென்று கன்னடம் கற்றுக் கன்னடப்படைப்புகள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1991 – இல் தனது 87ஆம் வயதில் காலமானார். இவர் வைதீகத்தின் ஒரு தத்துவப் பிரிவான அத்துவிதச் சிந்தனையை முன்னிறுத்தி ஆன்மீகத்தின்வழிப் பொதுவுடைமையை வலியுறுத்தும் சிந்தனையாளர்களுள் ஒருவர். மேலும் இவர் சித்தர்களின், குறிப்பாகத் திருமூலர் வழிச் சைவசமயம் மற்றும் சிவனை முன்னிறுத்தும் சிந்தனையாளர்.     பல கடவுள் வழிபாடும் ஓரிறைக் கோட்பாடும் மனிதன் என்று சிந்தித்தானோ அன்றே வழிபாடும் தோன்றிவிட்டது. மனிதன் தனக்குப் பயனுடையவைகளையும், பயத்தை ஏற்படுத்துபவைகளையும், குல முன்னோரையும் வழிபட்டு வந்தான். இந்நிலையில் சிந்தனை வளர்ச்சியின் விளைவாகவும், பேரரசு உருவாக்கத்தின் விளைவாகவும் ஒரே உலகம், ஒரே அரசன், ஒரே கடவுள் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு பெருநிலமும் (நாடு) ஒரு குறிப்பிட்ட கடவுளை முன்னிறுத்தியது. “பலகடவுள் கொள்கையிலிருந்து ஒரு கடவுள் கொள்கைக்கு முன்னேறியதை அடையாளப்படுத்தும் கட்டங்கள் இருந்தது என்பதற்குத் தலைமைக் கடவுள் கோட்பாடு ஒரு சான்றாக உள்ளது. மேலும் வேதகால ஆரிய இனத்தினரின் சமயம் பலகடவுள் சமயமாக இருந்தது என்ற பொதுவான கருத்திற்கு அப்பால் கடவுள் கருத்தில் அபிவிருத்தி இருந்தது...

Read More

பொறித் தமிழ்

நீண்ட நெடுங்காலமாகப் பனை ஓலை எழுதுபொருளாகப் பயன்பட்டு வந்தது.  எழுத்தாணி கொண்டு ஓலையில் கீறினர். பண்டை இலக்கியங்கள் எல்லாமே ஓலையிலிருந்து பிரதி செய்த வகையில் கிடைத்தவைகளே ஆம். அவ்வப்போது பல ஒப்பந்தங்கள் கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்டன. ஊர் மக்கள் படித்துப் பயன்பெறும் பொது இடங்களில் அவை இருந்தன. கால மாற்றங்களால் இன்று பனை ஓலையின் பயன்பாடு அருகிவிட்டது. இளைய தலைமுறை எழுத்தாணியைக் கண்டதில்லை. காகிதம், பேனா, தட்டச்சுப்பொறி, அச்சுப்பொறி, மோனா டைப், லைனோ டைப், எலக்ட்ரோ டைப், டெலிபிரிண்டர், கம்ப்யூட்டர், பிராட்மா பிரஸ் முதலான தற்கால சாதனங்களில் சிலவற்றை உயர் பதவிகளில் உள்ளவர்கள் கூடக் கேட்டதில்லை. ஆனால் அவற்றின் விளைவுகள் எங்கும் பரவியுள்ளன. பொதுமக்கள் அன்றாடம் துய்க்கும் வகையில் இடம் பிடித்துள்ளன. எல்லாப் பணிகளும் முடிந்தபிறகு எழுதப்பட்ட காகிதமாகக் கைகளில் விழுவதால், அதன் செயல்முறை பற்றி எண்ணிப்பார்க்கத் தோன்றவில்லை. சுட்ட இட்டலியைத் தட்டிலே காணுவது போன்ற நிலை இதுவாகும். இட்டலி வேகும்போது அடுக்களையில் அன்னை படும்பாட்டை அறிவார் யார்?  சமையலறையில் வசதிகள் உள்ளனவா?  புகை சரியாகப் போகின்றதா?  நல்ல வெளிச்சம் உள்ளதா?  காற்றோட்டம் உள்ளதா?  ஏண்ணிப் பார்ப்போர் எத்தனைபேர்?  இட்டலி சுவையாக உள்ளது, அதனால் அங்கு எல்லா வசதிகளும் இருக்கும் என்று எண்ணிக்கொள்வது பொருந்துமா? கல்வி அறிவு பெருக, அச்சுத்தொழிலின் இன்றியமையாமை வெள்ளிடைமலை. அதிலுறும் இடர் களைந்து, செலவைக் குறைத்தால் பொருளாதார வளம்பெருகும். தமிழ் மொழியில் செப்பங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் யோசனைகளைத் தமிழ் வளர்க்கும் தொண்டாகக் கருதாமல், தமிழ்நாட்டின், தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டு முயற்சியாகக் கருதுதலே முறை. வரிவடிவம் தமிழ் நெடுங்கணக்கில் ஒருசில மாறுதல்களைச் செய்து கொண்டால் நாட்டு வளர்ச்சியில் ஒரு முடக்கம் உண்டாகும். தற்போதுள்ள 247 எழுத்துக்களைத் தட்டச்சில் 65 வடிவங்களாகவும், அச்சில் 120 வடிவங்களாகவும் சுருக்கிக்கொண்டுள்ளோம். அவற்றை மேலும் சுருக்க இயலுமா? எப்படிச் சுருக்கலாம்? பெரியார் புழங்கியபடி : லை, ளை, ணை, னா,ணா, றா (இதனால் ஏழு வடிவங்கள் மிச்சம். ஆகார, ஐகார உயிர் மெய் வரிசைகள் முழுக்கச் சீர்மை பெறுகின்றன.) உகர, ஊகார உயிர்மெய்களுக்குப் பக்கக்குறி சேர்த்தல் (இதனால் 36 எழுத்துக்கள் மிச்சம். இரண்டு வரிசைகள் சீர்மை பெறுகின்றன.) உயிர் நெடில்களுக்குக் கால் சேர்த்தல் : அா, இா, உா, எா,...

Read More

பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகமும் ‘தமிழி’ எழுத்துப் பொறிப்புகளும் (தொல்லியல் களஆய்வை முன்வைத்து)

பெருங்கற்காலம் என்பது கி.மு.1000 – கி.மு.300 வரையிலான காலக்கட்டம். இவ்விடைப்பட்டதான காலக்கட்டத்தில் உலகெங்கிலும் ஒரே விதமான பண்பாடு நிலவியதெனத் தொல்லியல் அறிஞர்கள் தரவுகளை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளனர்.  தகவல் தொடர்புகளற்ற காலக்கட்டத்தில் கண்டங்கள் தாண்டி இப்பண்பாடு ஓர்மையுடையதாய் அமைந்திருந்தது என்பது வரலாற்றின் வியப்புக் குறியீடு. இனக்குழுப்போர், ஆநிரைகாத்தல், எல்லைப்போர், விலங்குகளோடு சண்டையிடல் என ஏதோவொரு காரணம் கருதி மாண்டு போன ஒருவனுக்கு (வீரன்) அல்லது வயது முதிர்ந்து இயற்கை மரணம் கொண்ட ஓர் இனக்குழுத் தலைவனுக்கு (Tribal leader) அமைக்கப் பெற்ற ஈமச்சின்னங்களாகவே பெருங்கற்காலத் தரவுகள் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.  ஒரு சில தரவுகள் மட்டுமே ஈமச்சின்னங்கள் அல்லாத தரவுகளாகக் கிடைக்கின்றன. பெருங்கற்களால் அமைக்கப் பெற்ற கற்பதுக்கை (cist), கற்குவை (cairn), பரல்உயர் பதுக்கை (cairn circle), கற்கிடை (dolmen), நெடுநிலைக்கல் (menhir), குடைக்கல் (umbrella stone), நடுகல் (Hero stone), முதுமக்கள் தாழிகள் (urns) முதலியனவற்றைப் பெருங்கற்கால ஈமச்சின்னங்களாகத் தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.  இப்பெருங்கற்கால நீத்தோர் சின்னங்கள் அமைவிடங்களையொட்டி அமைந்த சில குடியிருப்புப் பகுதிகளும் கண்டறியப் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து அகழாய்வு செய்யப்பெற்றுக் கொணரப் பெற்ற புழங்கு பொருட்களும் பெருங்கற்காலத் தரவுகளாகக் கருதப்பெறுகின்றன.  அப்பொருட்களில் எழுதப்பெற்றுள்ள எழுத்துப் பொறிப்புகள், கீறல் குறியீடுகள், முத்திரைக் குறியீடுகள் இவற்றைக் கொண்டே அச்சமூகத்தின் வரலாறும், தொன்மையும் கண்டறிந்து எழுதப் பெறுகின்றன. அதனூடாக அவ்வினக்குழுவினரின் இலக்கியப் பிரதிகளும் ஆய்விற்குட்படுத்தப் பெற்றுப் பண்பாட்டு அடையாளங்கள் மீட்டெடுக்கப் பெறுகின்றன. அத்தகைய பெருங்கற்காலத் தொல்லியல் தரவுகளையும் இலக்கியப் பிரதிகளில் அமைந்த தரவுகளையும் ஒப்பிட்டு நோக்கித் தமிழ்ச் சமூகப் பண்பாட்டின் தொன்மையினையும் உண்மை நிலைப்பாட்டினையும் ஆய்வு செய்யும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.  இவ்வாய்விற்குக் கொடுமணல் தொல்லியல் களமும் அங்குக் களஆய்வு செய்யப் பெற்றுக் கிடைக்கப்பெற்ற தரவுகளும் முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன. தமிழ்ப்பிராமி (தமிழி) எழுத்துகளின் காலத்தைக் கி.மு.2ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்டு வரையறை செய்த ஐராவதம் மகாதேவன் அவர்களுடைய கருத்துக்கணிப்பினை முற்றிலும் மறுத்துச் சரியான தொல்லியல் தரவுகளுடன் நிறுவியுள்ளார் கா.ராஜன். அசோகர் பிராமியிலிருந்தே தமிழ்ப்பிராமி தோற்றம் பெற்றது என்ற கருத்தாக்கத்தினைத் தனது கொடுமணல் தொல்லியல் ஆய்வுக்களம் வழிக்கண்டறியப் பெற்ற தரவுகளின் வழி மறுத்துரைத்துள்ளார். இவரைத் தவிர்த்து கே.வி.இரமேஷ், கே.வி.இராமன், நடன.காசிநாதன், சு.இராசவேலு ஆகியோரும் தமது கருத்துக்கள் வழி ஐராவதம் மகாதேவன்...

Read More

Nature resister: English & Tamil Poets

In the world, all are changeable, apart from natural things. It provides us variety of beautiful flowers, attractive birds, animals, Air Mountains, valleys, hills and many more things. When we throw lights on literature, nature plays a prominent role. Remember that, great poet; novelist had registered many precious works to the world, regarding nature. The article aims to know the difference between the Tamil and English poet, how portrayed nature in their works. While having a glance at English literature, the renowned poet, John Keats, begins his famous poem: Endymion with the line. A thing of beauty is a joy forever. A thing of beauty touches the human heart as nothing else does. It elevates the human soul man feels some inexpressible inner joy. The experience is unforgettable. Here, the poet makes a link between the beauty and the human heart. The poet generally talks about the beauty, so it may be flowers, birds, plants, blue sky, running rivers etc. Further, Tamil literature can also be manifesting the roll of nature in their writings. In line with feelings, ideas environment society, nature may be, attain different position in their writings. Here point out that the idea’s of poets is different, even the natural things are same, A well-known Tamil poet. M. Metha (மு.மேத்தா) stretched on the status of flower in his output KaNNIr pUkkaL (கண்ணீர் பூக்கள்). பூக்களிலே நானுமொரு பூவாய்த்தான்...

Read More

வேந்தர்களின் தலைவிதியை வரையறுத்தவன் மலையமான் திருமுடிக்காரி

முதுகுடிமன்னர்களை விடச் சற்று மேலான நிலையில் இயற்கை வளம் சார்ந்த மலைப்பகுதிளை ஆட்சியெல்லையாகக் கொண்டு அரசாண்டவர்கள்தான் குறுநில மன்னர்கள். இக்குறுநில மன்னர்களுள் குறிப்பிடத்தகுந்தவன் கடையெழுவள்ளல்களில் ஒருவனான மலையமான் திருமுடிக்காரி. இவன் வேந்தர்களுக்கிடையே நிகழும் போரில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பேராற்றல் வாய்ந்தவனாக விளங்கினான் என்பதை, சங்க இலக்கியப் பதிவுகளின்வழி அடையாளப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகிறது. மலையமான் திருமுடிக்காரி தென்னார்க்காடு மாவட்டத் திருக்கோவலூர்க்கு மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் பண்டை நாளில் மலாடு என்ற பெயரில் வழங்கப்பெற்று வந்தது. அதற்குக் கோவலூரே தலைநகர். அக்கோவலூரிலிருந்து ஆட்சி புரிந்தவனே மலையமான் திருமுடிக்காரி. இம்மலையமான் என்ற சொல் சேர அரசரைக்குறிக்க அமைந்தது. மலைநாடுடைமை பற்றி அவர்களுக்கு வழங்கிய அப்பெயர் காலப்போக்கில் சிறு, சிறு மலைகளையுடைய நாட்டுப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களுக்கு வழங்கலாயிற்று என்பார் இரா. கிருஷ்ணமூர்த்தி (2011-1). மலையமான் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் தொல்தமிழர்களின் வாழ்வியல் கருவூலமாகக் கருதப்பெறும் சங்க இலக்கியத்தில் குறுநில மன்னனான மலையமான் திருமுடிக்காரி குறித்து 18 பதிவுகள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. அவை பின்வருமாறு: மலையமான் திருமுடிக்காரி குறித்த பதிவுகள் – 18 நற்றிணை – 5 77:1 – மலையமா, 100:9 – மலையன், 170:6-7 – மலையனது, 291:7-9 – முள்ளூர் மன்னன், 320:5-6 –  காரி குறுந்தொகை – 2 198:5-6- மலையன், 312:1-2- மலையர் அகநானூறு -2 35:14-16- காரி, 209:12-16 காரி, புறநானூறு – 8 121:3-4 மாவன் தோன்றல், 122:1-2 காரி, 123:2-3 மலையன்,124:4-5 – மலையற், 125:12-15 மலையன், 126:7-8 – முள்ளூர் பொருந, 158:5-6 – காரி, 174:13 -20 – முள்ளூர் சிறுபாணாற்றுப்படை -1 110 -111: காரி மேற்குறிப்பிட்ட மலையமான் பற்றிய 18 பதிவுகளையும் இருபெரும் பிரிவாகப் பிரித்து ஆராயப்பெற்றுள்ளது. புறநா.174:12-13இல் பதிவு செய்யப்பெற்றுள்ள ‘நும்முன்’ தந்தையா? இளவலா? என ஆராய்தல். மலையமான் வேந்தர்களுக்கு அடங்கிய குறுநில மன்னனா? அல்லது வேந்தர்களின் தலையெழுத்தை வரையறுத்த வல்லவனா? என ஆராய்தல். ‘நும்முன்’ தந்தையா? இளவலா? எள்அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, ………   ………   ………   ……… சுரும்பார் கண்ணி, பெரும்பெயர் நும்முன் ஈண்டுச்செய் நல்வினை ஆண்டுச்சென்று உணீஇயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன்...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Next publishing us! 2018 (FEBRUARY)

அடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.

Current Issues – Nov 2017