இணைய வழியிலான நூலாக்கத்திற்குச் சில நிறுவனங்கள் வழிவகை செய்துள்ளன என மின்னூல் பதிப்புநெறிகள் எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது (த.சத்தியராஜ்:2016). அந்நிறுவனங்களில் pressbooks, booktango, lulu, foboko, bookrix, pothi, kindle ஆகிய நிறுவனங்களே மின்னூல் உருவாக்கத்திற்கு எளிதானவை. பிற நிறுவனங்கள் எந்த நாட்டிலிருந்து இயக்கப்படுகிறதோ, அந்நாட்டினரா இருத்தல் வேண்டும் என்கின்றன.

இவை தவிர்த்த பிற நிறுவனங்கள் இல்லையா? இருக்கின்றன. அவை நாமே நூல் உருவாக்கத்திற்குரிய வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, அந்நிறுவனத்தாருக்கு மின்னஞ்சல் மூலமாக, நமது புத்தகத்தை அனுப்பினால், அதனை அவர்கள் மின்னூலாக்கி வெளியிடுவர். இத்தன்மையில் அமைந்த மின்னூல் நிறுவனங்களாக freetamilebooks, kakithampublications போன்றவை அமைந்துள்ளன.

மின்னூல் உருவாக்கத்தில் பெரிதும் துணையாக இருப்பது லூலூ நிறுவனம் என்றால் மிகையாகாது. இந்நிறுவனம் பிற இரண்டு நிறுவனங்களைக் காட்டிலும் இந்நிறுவனம் தரக்குறியீட்டு (ISBN)எண்ணுடன் நூல் வெளியிடுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் அச்சுநூல் (Print Book) உருவாக்கிக் கொள்ளலாம். அதன் வழிமுறைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

உறுப்பினராதல்

இந்நிறுவனத்தின் மூலம் நூல் வெளியிடுவதற்கு முதலில் அந்நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ளல் வேண்டும்(இதற்கான வழிமுறையை மின்னூல் பதிப்பு நெறிகள் எனும் கட்டுரையில் பார்த்துக் கொள்ளலாம்).

இதில் உறுப்பினர் ஆனவுடன்,  புதிதாக உருவாக்கு (New create) என்பதைச் சொடுக்கவும், அதன்பின்பு அது நூல் வெளியிடுவதற்கான ஆறு வழிமுறைகளைக் காட்டும். அதில் முதல் வழிமுறை நூல் அமைப்பு முறையாகும். இதில் நூல் அளவு, அட்டைக்கோப்பின் அளவு போன்றவை கேட்கப்படும். அவற்றைக் குறிப்பிடும் படங்கள் வருமாறு:

(படம்: 1)

இப்படத்தில் குறிப்பிட்டுள்ளபடி நமக்கு வேண்டிய நூல் கட்டமைப்பைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

(படம்: 2)

இப்படத்தின்படித் தேர்வு செய்யப்பெற்ற நூல் கட்டமைப்புக் குறிப்பைப் பார்த்துவிட்டு, நூல் உருவாக்கத்தை மேற்கொள்ளலாம். நூல் கட்டமைப்பின் அளவு தெரியவில்லை என்றால், மாதிரி அமைப்பைப் பதிவிறக்கி, அதில் தட்டச்சிட்டுக் கொள்ளலாம்.

(படம்: 3)

இப்படத்தின்படி நூல்கட்டுமானம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்பு, நூல் தலைப்பு, ஆசிரியர் பெயர் பதிவுமுறை ஆகியவற்றைப் பூர்த்தி செய்தல் வேண்டும். அதனைக் காட்டும் படம் வருமாறு:

(படம்: 4)

இதனைப் பூர்த்தி செய்தவுடன் சேமித்துத் தொடரவும் (save & continue).  அதன் பிறகு திருத்தும் தன்மையுடைய நூலாக்கக் கோப்பை உள்ளீடாகத் தர வேண்டும். அதன் வழிமுறையைக் காட்டும் படம் கீழ்வருமாறு:

(படம்: 5)

இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் Choose file என்பதைச் சொடுக்க, கணினியில் பதிவுசெய்யப் பெற்றிருக்கும் பதிவு அடைவிற்குச் செல்லும், நாம் உள்ளிடும் கோப்பைத் தெரிவு செய்யவேண்டும். பின்பு பதிவேற்றம் (Upload) எனும் பொத்தானைச் சொடுக்க, அக்கோப்பு வெளியீட்டுக்கு ஏற்றதா என்பதைச் சோதனை செய்யும். அதனைக்காட்டும் படம் வருமாறு:

(படம்: 6)

இச்சோதனையின் மூலம் ஏற்கத் தகுந்த கோப்பு என்றால், ஏற்கப்பட்டதற்கான தன்மை வெளிப்படும். அதனைச் சேமித்துத் தொடர, அக்கோப்புப் பதிப்புக்கு ஏற்றதா என்பதைச் சோதனை செய்யும். இதில் முந்தைய வழிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய வழிமுறையைச் சரியாகப் பின்பற்றவில்லை என்றால், என்ன தவறு செய்திருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும். அதனைக் குறிக்கும் படம் வருமாறு:

(படம்: 7)

இப்படம் பதிவேற்றம் செய்த கோப்பு ஏற்புடையதா எனச் சோதித்துப் பார்க்கிறது.

(படம்: 9)

இப்படங்களின்வழிச் சரிசெய்த பின்பு சேமித்துத் தொடர வேண்டும். பின்பு அட்டை வடிவமைப்புப் பகுதிக்குச் செல்லும். அங்கு அந்நிறுவனமே ஏற்படுத்தி வைத்திருக்கும்  மாதிரி (Template) அட்டை வடிவமைப்பு இருக்கும். அதில் வடிவமைப்புச் செய்யலாம். அல்லது ஏற்கனவே வடிவமைப்புச் செய்து வைத்துள்ள படங்களை உள்ளீடாகத் தந்தும் வடிவமைக்கலாம். அதற்கான படங்கள் வருமாறு:

(படம்: 10)

இப்படம் அட்டையில் மாதிரிப் படம். இதன் வலது ஓரத்தில் இருக்கும் Project Images எனும் தொடர்பு நூலட்டையைப் பதிவேற்றம் செய்வதற்கான வழியாகும்.

(படம்: 11)

இப்படத்தின் வலது ஓரத்தில் இருக்கும் இரண்டு படங்களும் உள்ளீடாகத் தரப்பெற்றவை. இவற்றைச் சுட்டியைக் (mouse) கொண்டு இழுத்து மாதிரி வடிவமைப்புக்குள் தர, அங்குப் பொருந்திவிடும். இங்குத் தரக்கூடிய படம் தெளிவானதாக இருத்தல் வேண்டும். அவ்வாறு உள்ளீடாகத் தரப்பெற்ற அட்டைக்கோப்பு பின்வருமாறு அமைந்து காட்சி தரும்.

(படம்: 12)

(படம்: 13)

இப்படங்கள் காட்டும் வழிமுறைகளின்படி அட்டைவடிவமைப்பை உள்ளீடாகத் தந்துவிட்டு நூலட்டை தயார் (Print ready cover) எனும் பொத்தானை அழுத்தவும். அதை, அழுத்த அவ்வட்டை வடிவமைப்பு நூல் உருவாக்கத்திற்கான வழிமுறையைத் தொடரும்.

(படம்: 14)

இப்படம் காட்டும் சோதனையில் சிக்கல் இல்லை என்றால், அடுத்த நகர்விற்குச் சென்றுவிடும். அதில் வெளியீட்டுக்கான தகுதியைக் காண்பித்துவிடும்.

(படம்: 15)

இப்படம் காட்டுவதுபோல் நூல்கோப்பும், நூலட்டையும்  நினைத்த மாதிரி வந்துவிட்டால் சேமித்துத் தொடரவேண்டும். அடுத்து, நூல் குறிப்பைத் தருதல் வேண்டும். இதில் நூல்வகை (சான்று: ஆய்வு, குழந்தையிலக்கியம்) குறியீட்டுச் சொல் (Keyword), நூற்குறிப்பு (Description), மொழி, உரிமைக்குறிப்பு, உரிமை, பதிப்புக்குறிப்பு, பதிப்பகம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இக்குறிப்புகளில் குறியீட்டுச் சொல்லைத் தெளிவாகத் தருதல் வேண்டும். ஏனெனில் அதுதான் கூகுளில் தேடிச் செல்வதற்கு வழிவகை செய்து தருவது. இக்குறிப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டிய வழிமுறைப் படங்கள் வருமாறு:

(படம்: 16)

(படம்: 17)

இது நிறைவு பெற்றவுடன், அடுத்து நூலின் விலையைக் குறிப்பிட வேண்டும். அதனைக் காட்டும் படம் வருமாறு:

(படம்: 18)

இப்படத்தின்படி வெளியிடும் நூலின் தொகையைத் தரலாம். இது டாலர் மதிப்பில் இருக்கும். நூலின் விலைக்கு ஏற்றாற்போல் நமக்கான வருமானத்தையும் காட்டும் குறிப்பு இடம்பெறும். சான்றாக, ஒரு நூலின் விலை 210 எனில் நமக்கு உரூபாய் 60 வருமானமாகக் கிடைக்கும். அதாவது 20 விழுக்காட்டுத் தொகை நமக்குக் கிடைக்கும். அத்தொகையை எப்படிப்பெறுவது? என்பதைப் பின்வரும் படங்கள் காட்டும்.

(படம்: 19)

இப்படத்தின்படித் தொகைபெறுவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ளத் தொகை பெறல் குறிப்பு (Setup Payment Information) எனும் பொத்தானை அழுத்த, பின்வரும் படம் தோன்றும்.

(படம்: 20)

இப்படத்தின்படிப் பயனாளர் அடையாளம் இட்டுச் செல்ல வேண்டும். அதன்பின்பு தொகை பெறுவதற்கான வழிமுறைப் படிவம் தோன்றும்.

(படம்: 21)

இப்படத்தின்படி பணமில்லா வர்த்தகம் (Paypal) மூலமாக வேண்டுமா? காசோலை மூலமாக வேண்டுமா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இது நிறைவடைந்ததும் பதிப்பிக்க என்பதை அழுத்த, பதிப்பானதற்கான குறிப்புடன் பின்வரும் படங்கள் தோன்றும்.

(படம்: 22)

(படம்: 23)

இதனைச் சரிபார்த்த பின்பு சேமிப்பை முடித்துக்கொள்ள வேண்டும். நூலின் ஒரு படி லூலூ நிறுவனத்திடமிருந்து பெறவேண்டும் என்றால் பின்வரும் வழிமுறைப் படத்தின்வழிப் பெற்றுக் கொள்ளலாம். அதற்குரிய தொகையைச் செலுத்துதல் வேண்டும். தொகையைச் செலுத்தி விட்டால், ஓரிரு வாரங்களில் உங்கள் முகவரிக்கு நூல் வந்தடைந்துவிடும். அதன் வழிமுறைப்படம் வருமாறு:

(படம்: 24)

அதன்பின்பு நூல் வெளியிடப்பெற்றதா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள, லூலூ பக்கத்திலோ அல்லது கூகுள் தேடல் பக்கத்திலோ நூலின் பெயரைத் தட்டச்சிட்டுத் தேடிப் பார்த்துக் கொள்ளலாம். அவ்வாறு தேடப் பின்வரும் வெளியிட்டதற்கான படங்கள் தோன்றும்.

(படம்: 25)

(படம்: 26)

நிறைவாக, இதுவரை விளக்கப்பட்ட வழிமுறைகளின்வழி ஒரு நூலை இணையத்தின் மூலம் வெளியிடும் முறையை எளிதில் அறிந்து கொள்ளலாம். இது நூல் வெளியிடுவதற்கான எளிய வழிமுறை. இம்முறை பொருளாதாரம் இல்லாமல் நூல் வெளியிடுவதற்கு ஏங்கும் உள்ளங்களுக்குப் படகாக அமையும் என்று நம்பலாம்.

துணைநின்றவை

  1. சத்தியராஜ் த., 2016, மின்னூல் (Ebook) பதிப்புநெறிகள், இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், (Inamtamil.com) தமிழ்நாடு.
  2. lulu.com
  3. pressbooks.com
  4. freetamilebooks.com
  5. kakithampublications.blogspot.in

இப்பதிவில் வரும் படங்களுடன் வாசிக்க வேண்டுமெனில் கையாவண நூலைப்பதிவிறக்கி வாசிக்க…

முனைவர் .சத்தியராஜ்

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)

கோயம்புத்தூர் – 641 028